Home /News /lifestyle /

எங்க டீ ஷர்ட்ஸ் வெறும் ஸ்டைலுக்கு மட்டுமில்ல, தமிழுக்கும் சமத்துவத்துக்கும் கூட..! - ராகவ்

எங்க டீ ஷர்ட்ஸ் வெறும் ஸ்டைலுக்கு மட்டுமில்ல, தமிழுக்கும் சமத்துவத்துக்கும் கூட..! - ராகவ்

தமிழ் டி.ஷர்ட் அங்கி பிராண்ட்

தமிழ் டி.ஷர்ட் அங்கி பிராண்ட்

புத்தகத்திலோ, செய்தித்தாள்களிலோ சமத்துவம் குறித்து எழுதினால் எத்தனைப் பேர் படிப்பார்கள் என்று தெரியாது. ஃபேஷனை ஒரு மீடியமாக பயன்படுத்திக்கொள்கிறோம்.

  • News18
  • Last Updated :
தமிழன் டா... என சொல்லிக் கொள்வதில் மட்டும் பெருமையல்ல. அதை பேசுவதிலும், அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வதிலும்தான் பெருமை என்கிறார் அங்கி க்ளாதிங் -இன் உரிமையாளர் ராகவ்.

பாரதியார், திருவள்ளுவர், பெரியார் என தமிழை வளர்த்தவர்கள் மெல்ல மெல்ல மறைந்து வரும் அவலம்தான் இன்றைய நிலை. இருப்பினும் 80 மற்றும் 90-களில் பிறந்தவர்கள் அடுத்த தலைமுறைக்கு தமிழைக் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால்தான் இப்படி டிஷர்ட்டுகளில் காணப்படும் வாசகங்கள் அவர்களை உயிர்ப்புடன் வைத்துள்ளது.

“ இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு தமிழ் மீதான ஈர்ப்பை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த யோசனையை முயற்சி செய்தோம். துடிப்பூட்டும் வாசகங்கள் அடங்கிய டி.ஷர்ட்டுகள் அவர்களுக்கு உந்துதலாக இருக்கிறது. குறிப்பாக பாரதியார் சுதந்திரத்தின் போது எழுதிய பாடல் வரிகளிலிருந்து வாக்கியங்களை எடுத்து அச்சிடுகிறோம். அது இன்றைய காலக்கட்டத்திற்கும் பொருந்துவதாக இருக்கிறது. வியாபார அடிப்படையிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழை வளர்க்க எங்களால் முயன்ற சிறு முயற்சியே இது “ என்கிறார் ராகவ்.ஃபேஷன் டெக்னாலஜி படித்த ராகவ் தன் நண்பர் குமாருடன் இணைந்து 2013 ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் பிராண்ட்தான் ’அங்கி’. இது முற்றிலும் தமிழ் வாசகங்கள், தமிழ் அறிஞர்களின் புகைப்படங்களை மட்டுமே அச்சிடு டி.ஷர்ட்டுகள், செல்ஃபோன் பேக் கேஸ் , கீ செயின் போன்ற ஆக்ஸசரீஸுகளையும் தயாரிக்கின்றனர். தமிழ்நாடு மட்டுமல்லாது மலேசியா , சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இவர்களின் பிராண்ட் பிரபலம்.

தமிழை இன்றைய இளைஞர்களுக்கு பிடித்தது போல் கொண்டுபோய் சேர்ப்பது மட்டுமல்லாமல் இவர்கள் சமத்துவத்தையும் டி-ஷர்ட்டுகள் மூலமாக விதைக்கின்றனர். சமீபத்தில் இவர்களின் ’எம்மதமும் சம்மதம்’ என்ற டி-ஷர்ட் அதிக விற்பனையை பெற்றதாகக் கூறுகிறார். ”புத்தகத்திலோ, செய்தித்தாள்களிலோ சமத்துவம் குறித்து எழுதினால் எத்தனை பேர் படிப்பார்கள் என்று தெரியாது. ஆனால் இப்படி டிஷர்ட் மூலம் டிரெண்டியாக அச்சிட்டால் பலரும் அதை படிக்கக் கூடும். சிலர் அதுபற்றிய உரையாடலை நிகழ்த்தக் கூடும். தெரியாதவர்களும் தெரிந்துகொள்ள தூண்டுகோலாக இருக்கும். எனவேதான் ஃபேஷனை ஒரு மீடியமாக பயன்படுத்திக் கொண்டு இவ்வாறு முயற்சி செய்கிறோம் “ என்கிறார் ராகவ்.ஊக்கம் அது கைவிடேல், தமிழ் திமிர், தெய்வத்தான் ஆகாதெனினும் என இதுபோன்ற வாசகங்களுக்கு பின்னனியிலிருந்து ஓவியங்கள் மூலம் புத்துயிர் அளிப்பவர் ஆர்டிஸ்ட் ஜகதீஷ். ”வெறும் எழுத்துக்களாக இருந்தாலும் அது அவர்களை வெகுவாக ஈர்க்காது என்பதற்காக அதற்கு கூடுதல் உயிர்ப்பை அளிக்க ஓவியங்கள் இருந்தால் சிறப்பாக இருக்கும் என நினைத்ததன் பெயரில் உருவானதுதான் இந்த கான்செப்ட். தற்போது பலருக்கும் இந்த டிசைன்கள் மிகவும் பிடித்துள்ளது. வாக்கியங்கள் புரியவில்லை என்றாலும் ஓவியத்தின் மூலம் விஷயத்தை புரிந்துகொண்டு வாங்குகின்றனர். அது விற்பனைக்கும் வசதியாக உள்ளது” என்கிறார்.

ராகவ் , குமார்


இவர்கள் அங்கி மட்டுமல்லாது ‘ பாடி சோடா ‘ என்ற கான்சப்டில் மற்றொரு டி.ஷர்ட் பிராண்டை கடந்த நான்கு மாதங்களுக்கு முன் வெளியிட்டுள்ளனர். சினிமா, மீம்ஸ் , நிகழ்வுகளை வைத்து கலாயாகவும் அச்சிட்டு விற்பனை செய்கின்றனர். இது nothing serious என்ற வாக்கியங்களோடு வருகிறது.

200 ரூபாயிலிருந்து கிடைக்கும் இவர்களின் டிஷர்ட்டுகள் கஸ்டமைஸ்டு முறையிலும் வடிவமைத்துத் தரப்படுகிறது. ஆன்லைன் மட்டுமல்லாது டி.நகரில் கடையும் உள்ளது.

 

 

 

 
Published by:Sivaranjani E
First published:

அடுத்த செய்தி