ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சமையல் அறையை சுத்தமாக வைத்துக் கொள்ள டிப்ஸ்...

சமையல் அறையை சுத்தமாக வைத்துக் கொள்ள டிப்ஸ்...

சமையலறை

சமையலறை

Kitchen Cleaning tips | சமைக்கும் நேரம் தவிர மற்ற நேரத்தில் சிங்க்கை ஈரமில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

வீட்டை பராமரிப்பது என்பதே ஒரு மிக சிறந்த கலையாகும். வீடுகளில் வரவேற்பு அறை மட்டும் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்கும். ஆனால் உண்மையில் சமையல் அறைதான் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்படி பார்த்தால் எல்லா அறைகளுமே சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம்.

1. சமையல் அறையை சுத்தமாக வைக்க இரு வேளையும் அடுப்புமேடையை சுத்தப்படுத்துவது நல்லது.

2. தினம் தரையையும், வாரம் ஒருமுறை சமையலறை ஜன்னல்களையும் தவறாமல் சுத்தம் செய்யுங்கள்.

3. சமைக்கும் நேரம் தவிர மற்ற நேரத்தில் சிங்க்கை ஈரமில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

4. பாத்திரங்களை உடனுக்குடன் கழுவிவைப்பது நல்லது.

5. முக்கியமாக தினமும் குப்பையை அகற்றிவிடுவது நல்லது.

6. சமையலறையில் துடைக்க, கை துடைக்க தனித்தனி துணிகளை உபயோகியுங்கள். அவற்றை அவ்வப்போது அலசி காய வையுங்கள்.

7. முடிந்தவரை தேய்த்த பாத்திரங்களை துணி கொண்டு துடைத்து அடுக்குங்கள்.

8. இரும்பு வாணலி, தோசைக்கல், ஆகியவற்றை அவசியம் துடைத்து வைக்கவும்.

9. எக்காரணம் கொண்டு விரித்த தலையுடன் சமைக்க வேண்டாம்.

10. மாதம் ஒரு முறை கிச்சன் பல்பைக் கழட்டித் துடையுங்கள்.

மேலும் படிக்க... குழந்தைகள் விரும்பும் தேங்காய் பால் பாயாசம் செய்வது எப்படி தெரியுமா?

11. பிளாஸ்டிக் சாமான்களை கிச்சனில் வைக்காதீர்கள். பிசுக்கு ஏறும்.

12. எறும்பு பவுடர், கரப்பான் பூச்சி தொல்லையை தடுக்க மருந்து தெளிப்பது ஆகியவற்றை செய்து அதன் மீது பேப்பரை போட்டு வையுங்கள்.

13. இப்படி செய்வதால், மருந்துகளின் நெடி சமான்களில் ஏறாது. குழந்தைகளும் தொட வாய்ப்பில்லை.

14. சமையல் செய்யும்போது கண்டிப்பாக எக்சாஸ்ட் பேன் பயன்படுத்த வேண்டும்.

15. அடுப்பு உள்ள பகுதிக்கு மேல் அலமாரியில் இரும்பு பாத்திரங்களை கவிழ்ந்து வைத்துக்கொள்ளுங்கள்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Kitchen Tips