தீபாவளியின் ரெட்டிப்பு சந்தோஷமாக நகை வாங்கப் போறீங்களா..? அதுக்கு முன்னாடி இத படிச்சிட்டு போங்க..!

முதல் முறையாக நகை வாங்குவோர் இந்த விஷயங்களை தெரிந்துகொள்வது நல்லது.

தீபாவளியின் ரெட்டிப்பு சந்தோஷமாக நகை வாங்கப் போறீங்களா..? அதுக்கு முன்னாடி இத படிச்சிட்டு போங்க..!
தங்கம்
  • News18
  • Last Updated: October 23, 2019, 9:59 PM IST
  • Share this:
பொதுவாக ஆடை ஷாப்பிங், வீட்டிற்கு பொருட்களை வாங்க ஷாப்பிங் என்றால் எல்லோரும் தைரியமாக கிளம்பிவிடுவார்கள். ஆனால் நகை வாங்கும்போது மட்டும் சிறு தயக்கம் இருக்கும். காரணம் பணத்தை கொட்டி வாங்கும் நகையை அத்தனை சுலபமாக வாங்கிவிட முடியாது. செய்கூலி சேதாரங்கள் மட்டுமன்றி சில நெளிவு சுளிவு விஷயங்களும் உள்ளன. அப்படி முதல் முறையாக நகை வாங்குவோர் இந்த விஷயங்களை தெரிந்துகொள்வது நல்லது.

தரம் மற்றும் தூய்மை : ஹால்மார்க் நகைகளில் BIS என்ற குறியீடு இருக்கும். அப்படி குறிப்பிடப்பட்டுள்ள நகைகள் அதன் தரம் மற்றும் தூய்மை சோதனைக் கூடத்தில் பரிசோதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். அதேபோல் காரட் அதாவது K என்ற குறியீடு இருக்கும். அதன் அர்த்தம் அந்த நகையில் சேர்க்கப்பட்டுள்ள தங்கம் மற்றும் பிளாட்டினத்தின் தூய்மையைக் குறிப்பிடுவதாகும். அதாவது 24Kஎன்று இருப்பின் அந்த நகை எந்த உலோகமும் கலக்கப்படாமல் 100% தங்கத்தால் தயாரிக்கப்பட்டது என்று அர்த்தம். 22 என்றிருந்தால் 22K சதவீதம் மட்டும் தங்கம். இப்படியாக அதன் அளவு 18K , 23K, 16K என இருக்கும்.
நகைத் தேர்வு : நகை தேர்வு செய்யும் முன் அதை பிற்காலத்தில் மாற்ற விரும்பினாலும் அது நல்ல விலைக்கு போகக் கூடியதாக இருக்க வேண்டும். உதாரணமாக கற்கள் பதித்த நகைகள் வாங்கும்போது நல்ல தோற்றத்தை அளிக்கலாம். நாட்கள் செல்லச் செல்ல கற்கள் தேய்ந்து பொலிவை இழக்கும். நீங்கள் மாற்றும் போது கற்களைக் கழித்தே நகை மதிப்பிடப்படும். இதனால் சேதாரம் அதிகமாகும். எனவே சிறிய நகையாக இருந்தாலும் லேசாக இல்லாமல் சற்று கனமாக வாங்குவது நீண்ட நாட்கள் உழைக்கும்.

நினைவில் கொள்ள வேண்டியவை : வைர நகைகள் வாங்கும்போது நான்கு விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம். அவை காரட் (carat), நிறம் (colour), தெளிவு (clarity) மற்றும் வெட்டு (cut).இவற்றை சரியாக தெரிந்துகொண்டால் மட்டுமே வைரம் வாங்க முடியும். அப்படி வாங்குவதாக இருந்தால் நகை ஆர்வலர்கள், நிபுணர்கள், ஸ்டைலிஸ்டுகளிடம் கேட்டு தெரிந்துகொண்டு வாங்குங்கள்.

பில் இல்லாமல் நகை வாங்காதீர்கள் : ஐந்தாயிரத்திற்கு மேல் நகை வாங்குகிறீர்கள் எனில் கட்டாயம் பில் கேட்டு வாங்குங்கள். வரி கட்டி வாங்கிய நகைக்கு நிச்சயம் பில் அவசியம். குறிப்பாக மாற்று நகை வாங்குகிறீர்கள், விற்கிறீர்கள் என்றாலும் பில் அந்த கடையின் முத்திரையோடு வாங்குவது நல்லது.

கழிவுகளில் கவனம் : அதாவது நகை வாங்கும்போது அதன் செய்கூலிக்கான விலையும் நம்மிடமிருந்தே பெறப்படுகிறது. அது அந்த நகையின் கிராம் விலையிலிருந்து குறிப்பிட்ட சதவீதத்தை அந்த கடை நிர்ணயித்து வாங்கும். இந்த இடத்தில் நீங்கள் உங்களால் முடிந்த அளவிற்கு பேசி குறைத்து செய்கூலி விலையை நீங்கள் நிர்ணயித்து கொடுக்கலாம். அது உங்கள் உரிமையும்தான்.

ஆலோசகர்கள் அவசியம் : நகைக் கடைக்குள்ளேயே நகைகள் குறித்து விளக்க விற்பனையாளர்கள் இருப்பார்கள். அவர்களிடம் உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தாலும் கேட்டு தெரிந்துகொள்ளலாம். ஆன்லைனிலும் அந்த பிராண்டின் வெப்சைட்டுகளுக்கு சென்று மெயில் மூலம் உங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: October 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading