Home /News /lifestyle /

புதுசா ஷூ வாங்க போறீங்களா..? இந்த விஷயங்களை கவனிக்காமல் வாங்காதீங்க..

புதுசா ஷூ வாங்க போறீங்களா..? இந்த விஷயங்களை கவனிக்காமல் வாங்காதீங்க..

ஷூ வாங்க டிப்ஸ்

ஷூ வாங்க டிப்ஸ்

புதிய ஜோடி காலணிகள் அல்லது ஷூக்களை வாங்கும் போது, உங்கள் கால்களின் நீளம் மற்றும் அகலத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். உள்ளங்காலுடன் நமது உடலில் உள்ள அனைத்து முக்கிய நரம்புகளுக்கும் தொடர்பு இருப்பதால் சரியான அளவிற்கு வாங்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொ?

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
புதிய ஜோடி காலணிகள் அல்லது ஷூக்களை வாங்கும் போது, உங்கள் கால்களின் நீளம் மற்றும் அகலத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். உள்ளங்காலுடன் நமது உடலில் உள்ள அனைத்து முக்கிய நரம்புகளுக்கும் தொடர்பு இருப்பதால் சரியான அளவிற்கு வாங்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

காலணிகள், ஷூக்கள் எப்போது புதிதாக வாங்கினாலும், “புதுசு கடிக்குது“ என்ற வார்த்தையை அதிகளவில் கேட்டிருப்போம். காலுக்கு இதமாக செருப்புகள் இல்லையென்றால் நிச்சயம் பிரச்சனைகள் ஏற்படும். எனவே தான் செருப்புகள் அல்லது ஷூக்களை வாங்கும் போது சரியான அளவிற்கு வாங்க வேண்டும். முன்னதாக காலுக்குப் பாதுகாப்பாகவும், இதமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக வாங்கப்பட்ட காலணிகள், கால மாற்றத்தின் காரணமாக அழகுக்காகவும், ஆடம்பரத்திற்காகவும் இத்தலைமுறையினர் வாங்குகின்றனர். அதற்கேற்றால் போல் தான் அனைத்துக் கடைகள் முதல் ஆன்லைன் ஷாப்பிங்கிலும் கலர்புல்லாக ஷூக்கள் மற்றும் காலணிகளை விற்பனை செய்து வருகின்றனர்.

என்ன தான் விதவிதமாக விற்பனை செய்து வந்தாலும், நாம் எப்போதுமே சில விஷயங்களை மறக்காமல் பின்பற்ற வேண்டும். ஏனென்றால் உள்ளங்காலில் தான் நமது உடலில் உள்ள அனைத்து முக்கிய நரம்புகளுக்கும் தொடர்பு உள்ளது. எனவே தான் அழகுக்காக மட்டுமில்லாமல் உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு புதிய காலணிகள் அல்லது ஷூக்களை இனி வாங்க வேண்டும்.



புதிய ஷூக்கள் வாங்கும் போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

பெரும்பாலும் ஆண்கள் ஷூக்கள் அல்லது செருப்புகளை வாங்கும் பொது பெரியதாகவும், ஃபிட்டாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். உங்களின் கால்களின் வடிவத்திற்கு ஏற்ப காலணிகளை வாங்க வேண்டும். கால்விரல்கள் 0.5 செமீ வரை நகரும் போது போதுமான இடம் தேவைப்படும் என்பதால் அதற்கேற்றால் போல் வாங்க வேண்டும். இல்லாவிடில் விரல்களில் புண் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் நீங்கள் செருப்புகள் உங்கள் பாதத்திற்கு முற்றிலும் பொருந்தும் படியாக இருக்க வேண்டும்.

ரிசப்ஷன் போறீங்களா..? புடவையில் அசத்த ஜெனிலியாவின் இந்த ஸ்டைலை டிரை பண்ணுங்க...

நீங்கள் புதிய ஷூவை முயற்சிக்கும்போது, வழக்கமாக உங்கள் காலணிகளுடன் அணியக்கூடிய சாக்ஸ்களை அணியுங்கள். இந்த காலுறைகள் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்த உதவுவதாக இருக்கும். ஆனால் இதனைத் தேர்வு செய்வது முக்கியம். நீங்கள் சாக்ஸ்கள் அணியும் போது ஆள்காட்டி விரலை சற்று நகர்த்தி பார்க்கவும். அப்போது உங்களது விரல் மிகவும் இறுக்கமாகவும், தளர்வாகவும் இருக்கக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.



உங்களது இடது மற்றும் வலது காலின் பாதங்களுக்கு இடையே எப்போதும் சிறிய வித்தியாசம் இருப்பதால், புதிதாக செருப்புகள் அல்லது ஷூக்களை வாங்கும் போது இரண்டு கால்களிலும் முயற்சிக்க வேண்டும்.

இளமையிலேயே முதுமையை உணர்கிறீர்களா..? இந்த 4 வகையான நடைப்பயிற்சிகளை டிரை பண்ணுங்க...

எப்போதும் மாலை நேரத்தில் கால்கள் சற்று பெரிதாக இருக்க வேண்டும் என்றல் அப்போது புதிய ஜோடிகளை முயற்சிக்க வேண்டும். அதிக சர்க்கரை அளவு உள்ளவர்கள் மிகவும் துல்லியமான அளவீடுகளை உபயோகிக்க வேண்டும்.

புதிதாக நீங்கள் வாங்கும் ஷூக்கள், முந்தைய ஜோடியை விட பெரியதாகவோ அல்லது அகலமாகவோ இருந்தாலும் பரவாயில்லை. சரியாக இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். வெவ்வேறு பிராண்டுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட காலணிகள் வெவ்வேறு அளவுகளில் மாறும் என்பதால் சரியாக போட்டுப்பார்த்து வாங்க வேண்டும்.



இதனையடுத்து பண்டிகை, திருமணம் போன்ற விசேஷங்களுக்கு காலணிகள் வாங்க வேண்டும் என்றால், அதற்கேற்ற டிசைன்களில் நீங்கள் வாங்கிக்கொள்ளலாம்.

பாதம் நீளமாக உள்ளவர்கள் கோடு போட்ட டிசைன்கள் நிறைந்த செருப்புகளை அணிய வேண்டாம். ஒரு வேளை நீங்கள் அணியும் பட்சத்தில் பாதம் மேலும் நீளமாக இருப்பதைப் போன்று தோற்றமளிக்கும். மேலும் உடல் குண்டாக இருப்பவர்கள் எடை அதிகமான செருப்புகளை அணியக்கூடாது. இதோடு காற்றோட்டமான செருப்புகளை அணிவது நல்லது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Fashion Tips, Shoe

அடுத்த செய்தி