• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • தீபிகா படுகோன் அணிந்திருக்கும் இந்த கோட் விலை எவ்வளவு தெரியுமா..? கேட்டால் வாயடைத்துப் போவீர்கள்

தீபிகா படுகோன் அணிந்திருக்கும் இந்த கோட் விலை எவ்வளவு தெரியுமா..? கேட்டால் வாயடைத்துப் போவீர்கள்

தீபிகா படுகோன்

தீபிகா படுகோன்

தீபிகா படுகோன் இயக்குநர் சாகூன் பத்ராவின் (Shakun Batra) பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். மேலும், இயக்குநர் சித்தார்த் பதான் படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படப்பிடிப்பின் முதல் கட்ட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.

  • Share this:
இணையத்தில் வெளியாகியிருக்கும் தீபிகா படுகோனின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிரும் நெட்டிசன்கள், அவர் அணிந்திருக்கும் காட்ஸ்ட்லியான உடைகளுக்கு தோராயமாக விலைப்பட்டியலையும் தயாரித்துள்ளனர்.

பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் தீபிகாபடுகோனும் (Deepika padukone), ரன்வீர் சிங்கும் நட்சத்திர தம்பதிகளாகவும் இருந்து வருகின்றனர். தங்களின் Busy Shedule -க்கு இடையே புத்தாண்டை மிகச்சிறப்பாக கொண்டாட முடிவு செய்து, ஜெய்ப்பூர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக, இருவரும் மும்பை விமான நிலையம் சென்றபோது அவர்களை புகைப்படம் எடுத்த ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

அதில், தீபிகாவும், ரன்வீர் சிங்கும் (Ranvir singh) ஸ்டன்னிங் லுக்கில் காட்சியளிக்கின்றனர். தீபிகா காஷ்மீர் கோட்டுடன், லெதர் ஷூ (Leather shoe), கருப்பு நிற பேக் ஒன்றை வைத்துள்ளார். இதேபோல், ரன்வீர் சிங்கும், தீபிகாவுக்கு மேட்சாக உடையணிந்துள்ளார். இருவரின் நேர்த்தியான ஸ்டைல் மற்றும் உடைகள் நெட்சன்களின் கண்களை பறித்துள்ளது. உடனடியாக இன்ஸ்டாகிராமில் இருவரின் புகைப்படங்களுக்கும் லைக்ஸ்களை வாரி வழங்கிய நெட்டிசன்கள், அவர்கள் அணிந்திருந்த உடைகளின் தோராயமான விலையையும் கணக்கிட்டுள்ளனர்.
அதன்படி தீபிகாவின் காஷ்மீர் கோட் தோராயமாக 4,29,000 ரூபாயும், ஹேண்ட் பேக் 2,77,000 ரூபாயும் இருக்கும் என மதிப்பிட்டுள்ளனர். லெதர் ஷூ ஆகியவற்றையும் சேர்த்து தீபிகா அணிந்திருந்த உடைகளின் மதிப்பு மட்டும் 7,79,000 ரூபாய் மதிப்பிலான உடைகளை அணிந்திருப்பதாகவும் கணக்கிட்டுள்ளனர். தீபிகா படுகோன் இயக்குநர் சாகூன் பத்ராவின் (Shakun Batra) பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், இயக்குநர் சித்தார்த் பதான் படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படப்பிடிப்பின் முதல் கட்ட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதேபோல், ரன்வீர் சிங், இயக்குநர் ரோகித் ஷெட்டியின் (Rohit Shetty’s Cirkus) சர்க்கஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல படங்களை இருவரும் கைவசம் வைத்துள்ளதால் 2021 ஆம் ஆண்டு தீபிகாவுக்கும், ரன்வீர் சிங்குக்கும் சிறப்பான ஆண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என் வாழ்நாளுக்கான புகைப்படம் இது : வோக் இதழுக்காக நிறைமாத வயிறுடன் போஸ் கொடுத்த அனுஷ்கா ஷர்மா..!

மேலும், 1983 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 83 திரைப்படம் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரிலீஸாகும் என கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ரன்வீர் சிங் கபில்தேவாகவும் (Kapildev), தீபிகா படுகோன் கபில்தேவின் மனைவி ரோமிபாட்டியா (Romia bhatia) கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர். கபீர் கான் இயக்கியுள்ள இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதமே திரைக்கு வர தயாராக இருந்த நிலையில் கோவிட் வைரஸ் பிரச்சனையால், படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. ரன்வீர் சிங்கும், தீபிகாவும் இணைந்து நடித்துள்ள 4வது படமாகும். ஏற்கனவே, வரலாற்று திரைப்படமாக உருவான பத்மாவத் உள்ளிட்ட திரைப்படங்களில் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். 1983 ஆம் உலகக்கோப்பையை வெற்றியை மையமாக வைத்து உருவாகியிருக்கும் பையோபிக் திரைப்படம், பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: