கல்லூரிப் பெண்களை ஈர்க்கும் கோலாபூரி காலணிகள்!

வண்ணங்கள் நிறைந்த கோலாபூரி கல்லூரி பெண்கள் ஆடை நிறங்களுக்கு ஏற்றவாறு அணிந்து செல்கின்றனர்.

கல்லூரிப் பெண்களை ஈர்க்கும் கோலாபூரி காலணிகள்!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: February 4, 2019, 11:23 AM IST
  • Share this:
நாம் எத்தனை நம்பிக்கையுடையவர்களாக இருந்தாலும் அதை வெளிப்படுத்துவது நடை தான். கம்பீர நடை எதிரில் வருவோருக்கு நம் மீதான மரியாதையை அதிகரிக்கும். மேலும் கால்களின் அழகும் சுத்தமும்தான் நாம் எப்படிபட்டவர்கள் என்பதையும் தீர்மானிக்கிறது. இத்தனை குணாதிசயங்களைக் கொண்டிருக்கும் கால்களுக்கான பிரத்யேகத் தயாரிப்பாக நம் இந்தியர்கள் உருவாக்கிய காலணிதான் கோலாபூரி.

வட இந்திய மக்களால் பெரிதும் கொண்டாடப்படும் இந்த காலணிகள் தற்போது சென்னையிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு வட இந்தியர்களின் இடம்பெயர்தலும் காரணமாக இருக்கலாம். கோலாபூரி, குர்த்தா, டி.சர்ட், டென்னிம் காம்பினேஷன்கள், சுடிதார், சல்வார், என பெண்களுக்கு எந்த உடை அணிந்தாலும் அதற்கு ஏற்றார்போல் கச்சிதமாகப் பொருந்திவிடுகிறது. இதன் வேகமான சந்தைக்கு இதுவும் ஒரு காரணம்.

13-ஆம் நூற்றண்டில்தான் கோலாபூரி காலணிகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றன. அப்போது இதற்கு கபாஷி,பைதான், பக்கல்நாலி, புகாரி மற்றும் கச்னி போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. 1920-ல் மகாராஷ்டிரா மாநிலம் கோலாபூரைச் சேர்ந்த சௌதாகர் குடும்பம் இந்த காலணிகளை தயாரித்துள்ளது.


அந்த காலணிகளின் சிறப்பைக் கண்டு மும்பையைச் சேர்ந்த ஜே.ஜே அண்டு சன்ஸ் நிறுவனம் 20 காலணிகளை ஆர்டர் செய்துள்ளது. அவை உடனடியாக விற்றுத் தீர அவர்களுடனான நீண்ட உறவை வைத்துக் கொண்டு கோலாபூரி விற்பனையை விரிவாக்கியுள்ளது. அப்படியே அது இந்திய மண்ணில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.தற்போது கோலாபூரில் உள்ள சிவாஜி பல்கலைக்கழகத்தில் காலணிகள் குறித்த படிப்பிற்கு இந்த கோலாபூரி பேட்டன்களைதான் பயன்படுத்துகின்றனர்.இந்த காலணிகள் மகாராஷ்டிரா, கர்நாடகாவில் பிரதானமாக தயாரிக்கப்படுகிறது. அங்குள்ள கிராம மக்கள் விவசாயத்தை அடுத்து கோலாபூரி தயாரிப்பிற்குத்தான் முக்கியதுவம் அளிக்கின்றனர். இங்குள்ள குடும்பங்கள் ஒரு வாரத்தில் 35-40 கோலாபூரி காலணிகளைத் தயாரிக்கின்றனர்.

கோலாபூரி முற்றிலும் எருமை,காளை,ஆடு என மிருகங்களின் தோலைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதன் ஸ்ட்ராப்புகள் மிருகங்களின் தலைப்பகுதி தோலையும், வால் பகுதி நூலாகவும், ஆட்டின் தோல் டிசைன் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. மொத்தத்தில் சிறந்த முழுமையான கோலாபூரியைத் தயாரிக்க 35 நாட்கள் ஆகின்றன.


இதன் முக்கிய அம்சங்களாக; தண்ணீரிலும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இவை லெதராக இருப்பதால் உடலின் வெப்பத்தை பாதங்களின் வழியே கட்டுப்படுத்தவும் செய்கின்றன. கால்களுக்கு எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல் இதமாகவும், சௌகரியமாகவும் இருக்கின்றன.

கையால் செய்யப்படும் பழமை வாய்ந்த இந்த காலணிகள் பிங்க்,நீலம்,வெள்ளை, சில்வர், தங்கம், இளஞ் சிவப்பு, ஊதா போன்ற நிறங்களில் கிடைக்கின்றன. கூடுதல் அழகிற்காக ஸ்ட்ராப்புகளில் எம்பராய்டரி, மிரரர், சார்தோசி போன்ற வேளைபாடுகள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இதுபோன்ற அதிக வேலைபாடுகள் கொண்ட காலணிகள் சுப நிகழ்ச்சிகளின் போது பயன்படுத்தப்படுகிறது.

வண்ணங்கள் நிறைந்த கோலாபூரி கல்லூரி பெண்கள் ஆடை நிறங்களுக்கு ஏற்றவாறு அணிந்து செல்கின்றனர். இவை காண்போருக்கு எளிமையான ஆனால் நேர்த்தியான (simple but elegant) தோற்றத்தை அளிக்கிறது.

இவை பாண்டிபஜார், சௌகார்பேட்டை, மவுண்ட்ரோடு ஸ்பென்சர் ஆகிய இடங்களில் விற்பனைச் செய்யப்படுகிறது. லைம்ரோட், ஸ்னாப்டீல் போன்ற ஆன்லைன் இணையதளங்களிலும் இந்த கோலாபூரி கிடைக்கிறது.
First published: February 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்