75ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழா மே மாதம் 28ஆம் தேதி சனிக்கிழமை வரையில் நடைபெறுகிறது. கேன்ஸ் 2022 விழாவானது, சர்வதேச சினிமாக்களை கொண்டாடும் நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல் கிளாமர் மற்றும் ஃபேஷன் காட்சிகளுக்குமான இடமாக இருக்கிறது.
நட்சத்திர விருந்தினர்கள், மாடல்கள் மற்றும் நடிகர், நடிகைகள் உள்ளிட்டோரை இந்த நிகழ்ச்சி சிவப்பு கம்பளமிட்டு வரவேற்கிறது. குறிப்பாக, ஃபேஷன் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. விழாவின் இரண்டாம் நாளில், தென்னிந்திய ஸ்டார் நடிகையான தமன்னா பாட்டியா, சிவப்புக் கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்து வந்தார். கருப்பு கர் ஹக்கிங் கவுன் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட நெட்டட் வெயில் ஆகியவை அவரது தோற்றத்தை அழகாக காண்பித்தன.
பிளாக் சிம்மரி உடன் நெக்லைன் பாடிகான் கொண்ட இந்த கவுனில் தமன்னாவின் இந்த தோற்றம் நிச்சயம் உங்கள் மனதை கவருவதாக அமையும். குறிப்பாக கவுனில் இடம்பெற்ற இடைவெளி வழியாக தமன்னாவின் பளபளப்பு கொண்ட கால் அழகு தென்பட்டது. கருப்பு உடைக்கு மேட்ச் ஆகும் வகையில் நீண்ட வைரத் தோடுகள் மற்றும் உயரமான ஹீல்ஸ் ஆகியவற்றை தமன்னா அணிந்திருந்தார்.
தமன்னாவின் நீண்ட நெடிய கருங்கூந்தலை அழகாக கொண்டை போட்டிருந்தார். பார்ப்பதற்கு ஒரு லேடி பாஸ் போன்றதொரு தோரணையை இது கொடுத்தது.
கேன்ஸ் விழாவில் தமன்னா ஒய்யாரமாக கொடுத்த போஸ்கள் இங்கு காணக் கிடைக்கின்றன. கொஞ்சம் பெருமூச்சு விட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் , இந்தப் படங்கள் உங்களுக்கு பிரமிப்பூட்டுவதாக அமையும்.
வெள்ளை நிற கவுனில் பூஜா ஹெக்டே... கேன்ஸ் பட விழாவில் அசர வைத்த அழகு தேவதை..!
இந்த ஆண்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் கௌரமிக்க நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விழாவில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தலைமையில் இந்திய திரை நட்சத்திரக் குழுவினர் பங்கேற்றுள்ளனர். அவர்களில் ஒருவராக தமன்னாவும் சென்றுள்ளார். அங்கு அவர் கொடுத்துள்ள ஃபோட்டோ போஸ்கள் நம் மனதை கவர்வதாக அமைந்துள்ளன.
விழாவில் பங்கேற்றுள்ள பிற நட்சத்திரங்கள்
முன்னாள் உலக அழகியும், இந்திய ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவருமான ஐஸ்வர்யா ராய், தீபிகோ படுகோனே, நாவாசுதீன் சித்திக், பூஜா ஹெக்டே , ஊர்வசி ரடேலா உள்ளிட்ட பலர் இந்த ஆண்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் நடிகை பூஜா ஹெக்டே அணிந்த வெள்ளை சிறகுகளைப் போன்ற பெரிய கவுன் உடையானது இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. இதேபோன்று நடிகர், நடிகைகள் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் உடையணிந்து ஃபோஸ் கொடுத்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.