Home /News /lifestyle /

சம்மர் வந்தாச்சு... பெண்கள் என்ன மாதிரியான ஆடைகளை அணியலாம்... இதோ சில டிப்ஸ்...

சம்மர் வந்தாச்சு... பெண்கள் என்ன மாதிரியான ஆடைகளை அணியலாம்... இதோ சில டிப்ஸ்...

Summer Dress for Women | கோடை வெயிலை சமாளிக்க முதலில் ஆடைகளுக்கு முக்கியத்தும் அளிக்க வேண்டும். சரியான ஆடையை தேர்ந்தெடுத்து அணிவதால் குளிர்ச்சியாக உணர்வதுடன் பார்க்கவும் நன்றாக இருக்கும்.

Summer Dress for Women | கோடை வெயிலை சமாளிக்க முதலில் ஆடைகளுக்கு முக்கியத்தும் அளிக்க வேண்டும். சரியான ஆடையை தேர்ந்தெடுத்து அணிவதால் குளிர்ச்சியாக உணர்வதுடன் பார்க்கவும் நன்றாக இருக்கும்.

Summer Dress for Women | கோடை வெயிலை சமாளிக்க முதலில் ஆடைகளுக்கு முக்கியத்தும் அளிக்க வேண்டும். சரியான ஆடையை தேர்ந்தெடுத்து அணிவதால் குளிர்ச்சியாக உணர்வதுடன் பார்க்கவும் நன்றாக இருக்கும்.

கோடை காலத்தில் பெண்களுக்கு மட்டும் இன்றி ஆண்கள் குழந்தைகள் மற்றும் அனைவருக்கும் இதமான ஆடையாக பருத்தி விளங்குகிறது. பெண்கள் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள கறுப்பு மற்றும் பளிர் என இருக்கும் நிறங்கள் கொண்ட ஆடைகளை அணிவதை தவிர்க்க வேணடும். ஏனெனில் அவற்றுக்கு வெப்பத்தை கிரகிக்கும் தன்மை அதிகமாக உள்ளதால் அவைகளைத் தவிர்த்து, வெள்ளை போன்ற இளம் நிறங்களில் உள்ள உடைகளை அணியலாம். பருத்தி ஆடைகளை அணிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இந்த பதிவில் வரும் கோடைக்காலத்திறகு என்னென்ன ஆடைகளை அணியலாம் எனவும் அதற்கான சில குறிப்புகளையும் தெரிந்துக் கொள்ளலாம்.

1.  கோடைக்காலத்திற்கு ஏற்ற ஆடை பருத்தி ஆடைகளே ஆகும். தமிழகத்தில் பெரும்பான்மையான பெண்களும் விரும்புவது பருத்தி ஆடைகளே. பருத்தி ஆடைகள் தான் உடலை குளிர்ச்சியுடன் வைத்திருக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.

2.  உச்சி வெயில் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்கலாம். அவ்வாறு வெளியே செல்ல நேர்ந்தால் குடை எடுத்து செல்ல வேண்டும். இல்லையெனில் குளிர் கண்ணாடிகளை அணிந்து செல்ல வேண்டும்.

3. கோடைக்காலத்தில் பெண்களுக்கு மட்டும் இன்றி ஆண்கள் குழந்தைகள் மற்றும் அனைவருக்கும் இதமான ஆடையாக பருத்தி விளங்குகிறது. இதில் பலவகையான இந்திய காட்டன் உடைகள் இருந்தாலும் கோடைக்காலத்தில் பயன்படுத்தவும் , அணியவும் சிறந்த துணி வகையாக காதி ஆடைகள் விளங்குகிறது.

4. இந்த காதி ஆடையை பெண்கள் சேலையாகவும், சுடிதாராகவும் மற்றும் பாவாடையாகவும் அணியலாம். மேலும், இந்த கோடை வெயிலின் தட்ப வெப்பநிலைக்கு தளர்வான ஆடைகளையே அணிய வேண்டும்.



5. குறிப்பாக உடலை ஒட்டியவாறு உள்ள ஜீன்ஸ், லெக்கீன்ஸ் மற்றும் இறுக்கமான பேன்ட்களை அணிவதை தவிர்க்க வேண்டும். அவை பெண்களுக்கு உகந்த ஆடைகள் கிடையாது.

மேலும் படிக்க... கோடைக்காலத்தில் வெப்பத்தை தணிக்க உதவும் பானங்கள்..!

6. பெண்களுக்கு கோடைக்காலத்தில் வசதியுடன் இருக்கும் ஆடை புடவை தான் என்றால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஏனென்றால் நமது முன்னோர்கள் அனைவருமே கோடைக்காலத்தில் பருத்தி சேலைகளையே அனிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

7. நீளமான பாவாடைகளே பெண்களுக்கு வசதியாக இருக்கும். காரணம் அவை உங்கள் கால்களை முழுவதுமாக மூடி காற்றோட்டமாகவும் வைத்திருக்க உதவும் . முடிந்த வரை பருத்தி ஆடைகளை அணிவது சிறந்தது.

8. கோடையினால் நம் உடலில் வெளியேறும் வியர்வையை பருத்தித் துணி உறிஞ்சக் கூடிய தன்மைப் பெற்றது. பின் வெயிலின் தாக்கத்தால் உடனே அதை வெளியேற்றும். சூரியனிடமிருந்து ஒரு மின் கடத்தியைப் போன்றும் செயல்பட்டு வெப்பத்தை நம் உடலின் மீது அண்ட விடாமலும் செய்கிறது. இதனால் வெப்பத்தை வெளியேற்ற காற்றை உள்ளே இழுக்கச் செய்கிறது பருத்தி ஆடைகள்...



9. கோடையில் சிந்தடிக், பாலிஸ்டோர் போன்ற உடைகள் அணிவதால் சிலருக்கு தோல் அரிப்புகள் வரும். ஆனால் காட்டன் அப்படி அல்ல.  பருத்தியால் தோல் அரிப்புகளோ, தோல் வியாதிகளோ வராது. அனைத்துவிதமான உடல் வாகுகளுக்கும் ஏற்ற உடை.

10. பருத்தி ஆடைகள் அனைத்து விதமான தட்ப வெட்ப நிலையிலும் நம் உடலைப் பாதுகாக்கக் கூடிய தன்மை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... சம்மர் டிப்ஸ் : முகத்தில் அதிகமாக எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்..?
Published by:Vaijayanthi S
First published:

Tags: Dresses, Summer, Women

அடுத்த செய்தி