பண்டிகை கால ஸ்டைலிங் டிப்ஸ்!

Styling Tips for Festival Season | பிடித்த ஆடையை அணிந்து அழகு பார்க்கலாம். ஆடையை வாங்க முடிவு செய்தாயிற்று, அதை எப்படி வாங்கலாம், எவ்வாறு  அணியலாம், தற்போதைய டிரெண்ட் என்ன?

பண்டிகை கால ஸ்டைலிங் டிப்ஸ்!
Styling Tips for Festival Season | பிடித்த ஆடையை அணிந்து அழகு பார்க்கலாம். ஆடையை வாங்க முடிவு செய்தாயிற்று, அதை எப்படி வாங்கலாம், எவ்வாறு  அணியலாம், தற்போதைய டிரெண்ட் என்ன?
  • Share this:
பண்டிகை நாட்களில் கிடைக்கும் ஆனந்தம் வேறெந்த நாட்களிலும் கிடைக்காது. சொந்தங்கள், புத்தாடை, அறுசுவை உணவு என அத்தனையும் வாய்க்கும் தருணம் பண்டிகைக் கொண்டாத்தில் மட்டுமே சாத்தியம்.! அந்த சமயத்தில் நம்மை நாம் கொண்டாட வேண்டாமா?

வேலை நாட்களில் அலுவலக விதிகளுக்கு ,கல்லூரி விதிகளுக்கு உட்பட்டு ஆடைகள் அணிந்து அளுத்துப் போனவர்கள் பலர்.  அவர்களுக்கு பண்டிகைகள்தான் சரியான தருணம்.

பிடித்த ஆடையை அணிந்து அழகு பார்க்கலாம். ஆடையை வாங்க முடிவு செய்தாயிற்று, அதை எப்படி வாங்கலாம், எவ்வாறு  அணியலாம், தற்போதைய டிரெண்ட் என்ன? என குழம்பியிருப்போருக்கு நியூஸ் 18 தமிழ் தரும் சில டிப்ஸ்:
ட்ரெண்டி ஆடைகள் தேர்வு

ஆடைத் தேர்வு செய்யும் போது அவுட் ஆஃப் பேஷனில் இல்லாமல் தற்போதைய டிரெண்ட் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு வாங்குங்கள். அப்போதுதான் உங்கள் குழுவில் தனியொருவராகக் கலக்கலாம். தற்போது குர்த்தா மேல் புடவை அணிவது. கேப் ஸ்டைல் ஜாக்கெட்டுகள் என புடவையிலேயே ப்யூஷன் ஸ்டைலில் அணிவது டிரெண்டாக இருக்கிறது. அதேபோல் டிசைனர் புடவைகள் ஏராளம் வந்துவிட்டன. புடவை விரும்பிகளுக்கு டிசைனர் புடவைகள் சரியான சாய்ஸ்.

வெஸ்டர்ன் ஸ்டைலில் அதே சமயம் டிரெடிஷ்னலாக இருக்க நினைப்போருக்கும் ஏராளம் இருக்கின்றன. பலாஸ்ஸோ பேண்டுகளுக்கு கிராப் டாப்புடன் லாங் ஜாக்கெட், எ லைன் குர்தா மற்றும் ஸ்கர்ட், டிசைனர் லெஹங்கா, லாங் கவுன், ஃப்ளோரல் ஆடைகள், ரஃப்புல் கவுன், கேப் ஷால் சுடிதார், ஷரராஸ் , இது பலாஸ்ஸோவில் ஒரு வகையான ஸ்டைல். தற்போது செலிபிரிட்டிகள் பலரும் விரும்பும் ஆடை இது.

அதேபோல் பழைய புடவைகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில் அவற்றை கஸ்டமைஸ்டு முறையில் கவுன், பலாஸ்ஸோ மற்றும் குர்தா என விருப்பம்போல் தைத்துக் கொள்ளலாம்.

வண்ணம்

ஆடைகளின் வண்ணங்களில் அடர் நிறங்கள், மற்றும் பேஸ்டல் காம்பினேஷன்களை தேர்ந்தெடுங்கள். தற்போது மிண்ட்கிரீன் மற்றும் பேஸ்டல் ப்ளூ நிறங்கள் அதிகமாக விரும்பப் படுகிறது. காண்பதற்கும் சிம்பிள் அண்ட் ரிச் லுக்கை அளிக்கிறது.ஃபேப்ரிக்

சில்க், ரா சில்க், ஜியார்ஜட், சிப்போன் ஆகிய பேப்ரிக்குகள் பண்டிகைக்கு ஏற்றது.அணிகலன்கள்

குறைந்த வேலைபாடு கொண்ட ஆடை வாங்கினாலும் கவலையில்லை. அதிக வேலைபாடுகள் கொண்ட அணிகலன்களை அணிந்து அசத்துங்கள். கழுத்தணி, காதணி மற்றும் வலையல் ஆகிய அணிகலன்களுக்கு அதிக முக்கியதுவம் கொடுத்து ஆடைகளுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுங்கள். இமிடேஷன் அணிகலன்களே அதிக வேலைபாடுகளோடு நேர்த்தியாக கிடைக்கின்றன. அவற்றை ஆடைகளுக்கு ஏற்ற நிறங்களிலும் தேர்ந்தெடுக்கலாம். பழங்குடி அணிகலன்களும் பாரம்பரியத் தோற்றத்தை ஏற்படுத்தும்.மேக் அப்

லிப்ஸ்டிக் மற்றும் கண்களுக்கு மை ஆகியவற்றிற்கு கூடுதல் கவனம் செலுத்துங்கள். பளிச்சென்ற முகத்திற்கு ஃபவுண்டேஷன் அப்ளை செய்யுங்கள்.ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைலுக்கு, போனி டெயில், பிரெஞ்ச் பிரெய்டு, சைடு கொண்டை  ஏற்றது. பிரி ஹேர் ஸ்டைல் தவிர்க்கலாம். ஏனெனில் இது உங்களின் பிசியான கொண்டாட்டத்தை தொந்தரவு செய்வதாக இருக்கும். இதனால் முடி சேதம் அடையக் கூடும்.Also See..

First published: January 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்