டிசைனர் ஆடைகள்... வீட்டு உபயோகப்பொருட்கள் - சென்னையில் ஸ்டைல் பஸார் கண்காட்சி

இந்திய டிசைனர்களின் ஆடைகள், அணிகலன்கள் கண்காட்சியில் இடம் பெறும்

டிசைனர் ஆடைகள்... வீட்டு உபயோகப்பொருட்கள் - சென்னையில் ஸ்டைல் பஸார் கண்காட்சி
இந்திய டிசைனர்களின் ஆடைகள், அணிகலன்கள் கண்காட்சியில் இடம் பெறும்
  • Share this:
கண்கவர் ஆடைகளை ஒவ்வொரு வருடமும்  காட்சிப்படுத்தும் ’ஸ்டைல் பஸார்’ இந்த வருடமும் வரவிருக்கிறது. வருகிற 8 ஆம் தேதி முதம் 9 வரை என இரண்டு நாட்களுக்கு அண்ணாசாலையில் உள்ள ஹையத் ரெஜென்ஸியில் நடைபெற உள்ளது.இங்கு இந்திய டிசைனர்களின் ஆடைகள், அணிகலன்கள் கண்காட்சியில் இடம் பெறும்.இந்த கண்காட்சியானது இந்திய ஆடை வடிவமைப்பாளர்களை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது.


டிசைனர் ஆடைகளை வாடிக்கையாளர்களும் எளிதில் வாங்கிச் செல்ல ஏதுவாக இருக்கிறது இந்தக் கண்காட்சி. திருமணமாகப் போகும் பெண்களுக்கும், தங்களின் கனவு நாளில்  வண்ணமயமாகத் தோன்ற விலையுயர்ந்த டிசைனர் ஆடைகள் இங்கு ஏராளம் கிடைக்கும். வெஸ்டர்ன் ஆடைகள் தொடங்கி டிரெடிஷ்னல் ஆடைகள் வரை எல்லாமே உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ப இங்கு கிடைக்கும்.அதுமட்டுமன்றி வீட்டு அலங்காரப் பொருட்கள், ஆர்கானிக் காஸ்மெடிக் பொருட்கள் போன்றவையும் கண்காட்சியில் இடம் பெறும். ஷாப்பிங் செய்ய விரும்பும் பெண்களுக்கு இந்தக் கண்காட்சி சிறந்த தேர்வாக இருக்கும்.

பொங்களுக்கு இன்னும் ஷாப்பிங் செல்லவில்லையா? உடனே செல்லுங்கள் ஸ்டைல் பஸார்.

தேதி : ஜனவரி 8 மற்றும் 9 .

இடம் : ஹையத் ரெஜென்ஸி, அண்ணாசாலை, சென்னை.

நேரம் : காலை 10 முதல் இரவு 9 மணி வரை.

Also See..

First published: January 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்