சில நேரங்களில் விராட் கோலியின் ஆடைகளையே அணிந்து செல்கிறேன் - அனுஷ்கா ஷர்மா

அதிகம் பிடித்த, எப்போதும் அணிய விரும்பும் ஆடை புடவைதான் என்று அனுஷ்கா கூறியுள்ளார். அதனால்தான் தன்னுடைய ரிசப்ஷனிற்கு பணாரசி புடவை அணிந்ததாக தெரிவித்துள்ளார்.

சில நேரங்களில் விராட் கோலியின் ஆடைகளையே அணிந்து செல்கிறேன் - அனுஷ்கா ஷர்மா
அனுஷ்கா விராட்
  • News18
  • Last Updated: November 7, 2019, 4:23 PM IST
  • Share this:
இந்தியாவில் அனைவராலும் அதிகமாக தேடப்படும், கவரப்படும் ஜோடி என்றால் அது அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலி ஜோடிதான். அவர்கள் இருவரும் சேர்ந்து என்ன செய்தாலும் அது அன்றைய வைரல் செய்தி.

சமீபத்தில் விராட் கோலியின் பிறந்த நாளை கொண்டாட இருவரும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது எடுத்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவின.

வோக் இதழிற்கு அனுஷ்கா அளித்துள்ள பேட்டியில் கணவர் விராட் கோலியின் ஆடைகளையும் சில நேரங்களில் அணிந்து செல்வதாகவும். அதை மிகவும் விராட் ரசிப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


முற்றிலும் அவருடைய ஆடைத் தேர்வு, ஃபேஷன் குறித்த நேர்காணலில் அவருடைய ஃபேஷன் விருப்பங்களை மிக நேர்த்தியுடன் பகிர்ந்துள்ளார்.

அதில் படத்திற்காக அசௌகரியமான ஆடைகளை அதிகம் அணிந்திருப்பதாகவும் ஆனால் அப்படியே என்னுடைய நிஜ வாழ்க்கையிலும் இருப்பதில் விருப்பம் இல்லை அனுஷ்கா என்று தெரிவித்துள்ளார். மேலும் தான் தீவிர ஃபேஷன் டிரெண்ட் ஃபாலோவர் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு பிடித்த ஆடைகளை அணிந்து செல்வதன் மூலம்தான் நான் யார் என்பதை வெளிப்படுத்த முடியும். இதுதான் டிரெண்ட் என்பதற்காக அதை அணிவதில் விருப்பமில்லை என்று கூறியுள்ளார்.

அப்படி அவருக்கு அதிகம் பிடித்த, எப்போதும் அணிய விரும்பும் ஆடை புடவைதான் என்று பதில் அளித்துள்ளார். அதனால்தான் தன்னுடைய ரிசப்ஷனிற்கும் பணாரசி புடவை அணிந்ததாக தெரிவித்துள்ளார். மற்றவர்களின் திருமணம், பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்குச் சென்றாலும் அனுஷ்கா புடவைதான் அணிவாராம். அவர்கள் டிரெஸ் கோட் வைத்திருந்தாலும் அதற்கு மாறாக செல்வதுதான் அனுஷ்காவின் வாடிக்கையாம்.

அதேபோல் சில நேரங்களில் விராட் கோலியின் ஜாக்கெட், டி-ஷர்ட், ஷர்ட்டுகளை அவர் அணிவாராம். அப்படி ”அணிவது விராட்டிற்கு மிகவும் பிடிக்கும். அவர் என்னை ரசிப்பார். அதற்காகவே நான் அணிவேன். அதில் எனக்கும் மகிழ்ச்சி” என்று வோக் இதழில் நேர்காணலில் கூறியுள்ளார் அனுஷ்கா.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: November 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்