ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பொன்னியின் செல்வன் நாயகி ஷோபிதா துளிபாலாவின் சாரீ லுக்ஸ்... இதயங்களை கொள்ளை கொள்ளும் அழகி..!

பொன்னியின் செல்வன் நாயகி ஷோபிதா துளிபாலாவின் சாரீ லுக்ஸ்... இதயங்களை கொள்ளை கொள்ளும் அழகி..!

நாயகி ஷோபிதா துளிபாலா

நாயகி ஷோபிதா துளிபாலா

ஒவ்வொரு முறையும் சேலையில் வலம் வந்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பது மட்டுமல்லாமல், அந்த தோரணையை படம்பிடித்து இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டு வருகிறார் ஷோபிதா. படங்களை எண்ணற்ற ரசிகர், ரசிகைகள் கண்டு மகிழ்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பெண்களை மிக, மிக அழகாகக் காட்டுவதில் சேலைக்கு நிகரான உடை வேறெதுவும் இல்லை. குறிப்பாக, இந்திய கலாச்சார உடை என்பதால் எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. இங்கு பல தேசிய இனங்கள் உண்டு என்றாலும், எல்லா பெண்களுக்கும் பொதுவாக உடையாக சேலை இருக்கிறது. அதை உடுத்தும் விதம்தான் மாறுபடுகிறது.

ஒரு பெண் என்ன நிறம், எவ்வளவு உயரம், உடல் எடை எவ்வளவு என எந்தவொரு வரம்பும், அப்பெண்ணை அழகாக காட்டும் சேலையின் நேர்த்திக்கு தடையாக இருக்க முடியாது. அதனால் தான், சிறப்புக்குரிய ஒவ்வொரு தருணத்திலும் பெண்கள் சேலை அணிய தவறுவதில்லை.

சாமானிய பெண்களே இன்று ரகம், ரகமாக சேலைகளை தேர்வு செய்கையில், ஃபேஷனையே தொழிலாக கொண்ட சினிமா நடிகைகளை சொல்ல வேண்டுமா என்ன? உதாரணத்திற்கு, இயக்குநர் விக்னேஷ் சிவனை அண்மையில் கரம் பிடித்த நயன்தாரா, திருமணத்தின்போது அணிந்திருந்த சிவப்பு நிற சேலை, காண்பவர் மனதை ஈர்க்கும் விதமாக அமைந்திருந்தது.

இதேபோல, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நடிகையான ஷோபிதா துளிபாலாவின் சேலை தேர்வுகளும் ரசிகர், ரசிகைகளின் மனதை கொள்ளையடித்து வருகின்றன. குறிப்பாக, பல திரைப்பட விழாக்களில், சேலை உடையோடு தான் அவர் காட்சியளிக்கிறார்.

பொன்னியின் செல்வன் டிரைலர்

இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில், நடிகர்கள் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்திக் மற்றும் முன்னணி நடிகைகள் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாடு முழுவதிலும் வெள்ளிக்கிழமை (செப்.30) வெளியாகியுள்ளது.

முன்னதாக இந்தப் படத்தின் டிரெய்லர் விழா அண்மையில் நடைபெற்றபோது, அங்கு வந்திருந்த விருந்தினர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ஷோபிதா. அதற்கு காரணம் அவர் அணிந்திருந்த சேலைதான்.

சின்ன பிளாஷ்பேக்

பொன்னியின் செல்வன் டிரெய்லர் விழா மட்டுமல்ல, இதற்கு முன்பும் பல தருணங்களில் சேலை உடுத்தி, ஒய்யாரமாக வலம் வந்துள்ளார் ஷோபிதா. கபில் சர்மா ஷோ-வுக்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் முழு வெள்ளை நிற சேலை உடுத்தி, அதற்கு மேட்ச்சாக பூக்கள் உள்ள பிளவுஸ் ஒன்றை அணிந்திருந்தார். குறிப்பாக, மேக்அப் எதுவும் இன்றி இயல்பான தோரணையில் வலம் வந்தார்.
 
View this post on Instagram

 

A post shared by Sobhita Dhulipala (@sobhitad)பொன்னியின் செல்வன் செய்தியாளர் சந்திப்பு

இந்த நிகழ்ச்சிக்கு மாங்காய் நிற பச்சை சேலை உடுத்தியிருந்தார் ஷோபிதா. கொஞ்சம் தங்க நிறமும் இடையில் கலந்திருந்தது. இதற்கு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்திருந்தார். ஐஷேடோ, ஐலைனர் போன்ற மேக்கப்பில் சூப்பராக காட்சியளித்தார்.
 
View this post on Instagram

 

A post shared by Sobhita Dhulipala (@sobhitad)கொள்ளை கொண்ட நிகழ்வு

என்ன இருந்தாலும், பொன்னியின் செல்வன் டிரெய்லர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த தோரணைதான் எல்லோர் மனதையும் சுண்டி இழுத்துவிட்டது. ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம் இரண்டரக் கலந்த சேலை அணிந்து வந்திருந்தார் ஷோபிதா. அதற்கு மேட்ச்சாக நெக்லஸ், தோடு, வளையல்கள், டிக்கா, மோதிரம் உள்ளிட்ட ஆபரணங்களை அணிந்திருந்த தருணத்தில் சோழ தேசத்து இளவரசியைப் போல காட்சியளித்தார் ஷோபிதா.
 
View this post on Instagram

 

A post shared by Sobhita Dhulipala (@sobhitad)ஒவ்வொரு முறையும் சேலையில் வலம் வந்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பது மட்டுமல்லாமல், அந்த தோரணையை படம்பிடித்து இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டு வருகிறார் ஷோபிதா. படங்களை எண்ணற்ற ரசிகர், ரசிகைகள் கண்டு மகிழ்கின்றனர்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Fashion Look, Ponniyin selvan