ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நீங்கள் அணியும் பிரா உங்களுக்கு சௌகரியமாக உள்ளதா..? இறுக்கமாக இருந்தால் இந்த பிரச்சனை வரலாம்..!

நீங்கள் அணியும் பிரா உங்களுக்கு சௌகரியமாக உள்ளதா..? இறுக்கமாக இருந்தால் இந்த பிரச்சனை வரலாம்..!

பொருத்தமற்ற பிரா சைஸ்களால் ஏற்படும் பிரச்சனை

பொருத்தமற்ற பிரா சைஸ்களால் ஏற்படும் பிரச்சனை

நீங்கள் பயன்படுத்தும் பிரா உங்களுக்கு கச்சிதமாக பொருந்தவில்லை என்றால், வெளியே காணப்படும் வெளித்தோற்றம் நன்றாக இருக்காது. ஆனால், இதைவிட முக்கியமாக உங்கள் உடல் நலனுக்கு அது உகந்தது அல்ல.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

பெண்கள் அணியும் பிரா என்பது அவர்களுக்கு சௌகரியம் மற்றும் சப்போர்டிவ்-ஆக இருக்க வேண்டும். உங்கள் உடலுக்கு எந்த வகையிலும் இது தொந்தரவாக அமைய கூடாது. பிரா அணிவது முற்றிலுமாக மற்றொரு உடைக்கு பின்னால் இருக்கப் போவதுதான் என்றாலும் கூட, உங்களுக்கு தொந்தரவு அளிக்கக் கூடியதாக அது இருந்தால், பழைய பிராக்களுக்கு பை-பை சொல்லிவிட்டு புதியவற்றை வாங்குவதற்கான நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.

குறிப்பாக, உங்களுக்கு கச்சிதமாக பொருந்தக் கூடிய, சப்போர்டிவ்-ஆக அமையக் கூடிய பிராவை வாங்கி நீங்கள் பயன்படுத்த வேண்டும். ஆனால், அப்படி அமையவில்லை என்றால், பல விதமாக தொந்தரவுகளை அது உங்களுக்கு தேடித் தரும்.

பொருத்தமற்ற பிரா சைஸ்களால் ஏற்படும் பிரச்சனை :

நீங்கள் பயன்படுத்தும் பிரா உங்களுக்கு கச்சிதமாக பொருந்தவில்லை என்றால், வெளியே காணப்படும் வெளித்தோற்றம் நன்றாக இருக்காது. ஆனால், இதைவிட முக்கியமாக உங்கள் உடல் நலனுக்கு அது உகந்தது அல்ல.

என்னென்ன பிரச்சினைகளை அது கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

* மிக இறுக்கமான பிரா அணிந்து, அது உங்கள் சருமத்துடன் உரசும்போது அதிகப்படியாக வியர்க்கும். அத்துடன் சருமத்தில் எரிச்சல் ஏற்படும். இதனால், சருமம் சார்ந்த பல தொந்தரவுகள் உருவாகும்.

* இறுக்கமாக அணியும்போது உங்கள் மேல் வயிற்றின் மீது இது அழுத்தம் கொடுக்கும். இதனால், வயிற்றுப் பகுதியில் இருந்து ஆசிட் உந்தி தள்ளப்பட்டு, உணவுக் குழாயை நோக்கி மேல் எழும்பி வரும். இறுதியாக ஆசிட் ரிஃப்லெக்ஸ் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

* உங்களுடைய வெளித் தோற்றத்திற்கு எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்துவதாக இது அமையும். ஏற்கனவே அதிக வேலைப்பளு கொண்ட தோள்களுக்கு இது அழுத்தம் கொடுப்பதால் உங்களுக்கு அதிக எனர்ஜி தேவைப்படலாம்.

* கப் சைஸ் பிரா அணிவது என்பது, மார்பகத்தின் இயல்பான அளவிற்கு ஒருபோதும் ஒத்துவரக் கூடியதாக இருக்காது. இதனால், தேவையற்ற அசௌகரியங்கள் ஏற்படலாம்.

* இறுக்கமான பிரா அணியும் பெண்கள் நடந்து செல்லும்போது, அவர்களது சருமத்திற்கும், துணிக்கும் இடையே தேவையற்ற உராய்வு ஏற்படும்.

* கழுத்து மற்றும் தோள் பகுதியில் தேவையற்ற பிரெஷர் கொடுப்பதாக இறுக்கம் மிகுந்த பிரா அமையும். இதன் எதிரொலியாக கழுத்து வலி, தோள் வலி, சில சமயங்களில் தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்ளாமல் உடல் எடையை குறைக்க உதவும் 5 அறிவியல் பூர்வமான சாத்தியங்கள்..!

நீங்கள் இறுக்கமான ஒன்றை பயன்படுத்துகிறீர்கள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

* நீங்கள் நடந்து செல்லும் சமயங்களில் உங்கள் பிரா ஸ்டிராப் மற்றும் ஷிஃப்ட் ஆகியவற்றை அட்ஜெஸ்ட் செய்ய வேண்டியிருக்கும்.

* உடலின் மேல் பகுதியில் வலி ஏற்படும்.

* உங்கள் தோள்களில் வலி அல்லது பிரா அணிந்ததற்கான அடையாள கோடுகள் ஏற்படுவதைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

* நாள் முழுவதும் நீங்கள் அட்ஜெஸ்ட் செய்து கொண்டே இருப்பீர்கள்.

சரி செய்வது எப்படி?

* உங்கள் பிராவின் முதலாவது அல்லது இரண்டாவது ஹூக்-ஐ நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதற்கு அடுத்த ஹூக்-ஐ இனி பயன்படுத்தலாம்.

அலுவலகம் செல்லும் பெண்களுக்கான Saree Look : கோடைக்கு ஏற்ற ஸ்டைலிங் டிப்ஸ்..!

* உங்கள் பிராவில் உள்ள ஸ்டிராப் மற்றும் பேண்ட் ஆகியவை உங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது என்றால், ஸ்டிராப்புகளை சற்று அட்ஜெஸ்ட் செய்யுங்கள். மேலும் பின் பகுதியில் உள்ள பேண்ட்-ஐ கீழ் நோக்கி நகர்த்தி வைக்கவும்.

சரியான ஒன்றை வாங்குவது எப்படி?

* புதிய பிரா வாங்கிய பிறகு, அதில் உள்ள கடைசி ஹூக்-ஐ பயன்படுத்துங்கள். மேலும், நீங்கள் பயன்படுத்த, பயன்படுத்த உங்கள் பிரா லூஸ் ஆகும் என்பதை மனதில் வைத்து, அதற்கு ஏற்ற ஒன்றை வாங்குங்கள்.

* 2 விரல் விதி: உங்கள் பிரா பேண்டிற்கு கீழே இரண்டு விரல் வைக்கும் அளவுக்கு இடைவெளி இருப்பது அவசியமாகும். அதே சமயம், அங்கு அதிக விரல்களை வைக்க முடிந்தால், உங்கள் பிரா லூஸாக இருக்கிறது என்று அர்த்தம். ஆக கச்சிதமான ஒன்றை வாங்கவும்.

* உங்கள் கைகளை உயர்த்தும் போது, உங்கள் பிரா அதற்கேற்ப மேல் நோக்கி நகரக் கூடாது. அப்படி நகர்ந்தது என்றால், உங்கள் பிராவின் கப் சைஸ் சிறியதாக இருக்கிறது என்று அர்த்தம். இரண்டு மார்புகளுக்கும் இடையே உள்ள மையப் பகுதி சமமானதாக இருக்கும் வகையில் வாங்க வேண்டும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Bra, Fashion Tips