ரூ.60 ஆயிரம் மதிப்பிலான ஒயிட் குர்தாவில் அசத்தும் பாலிவுட் பிரபலம் 'ஸ்ரத்தா கபூர்'!

ரூ.60 ஆயிரம் மதிப்பிலான ஒயிட் குர்தாவில் அசத்தும் பாலிவுட் பிரபலம் 'ஸ்ரத்தா கபூர்'!

ஸ்ரத்தா கபூர்

ராஜஸ்தானின் அரண்மனைகளை நினைவூட்டும் பிரமாண்டமான சில்வர் எம்பிராய்டரிகளைக் கொண்ட ஒரு நேர்த்தியான ஸ்லீவ்லெஸ் குர்தாவைத் தான் ஸ்ரத்தா அணிந்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஸ்ரத்தா கபூர், பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர். 2010ல் வெளியான Teen Patti என்ற ஹிந்திப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 2013ல் வெளியான Aashiqui 2 படம், இவரை இந்தியா முழுதும் பிரபலமாக்கியது. தொடர்ந்து இந்தியில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வரும் ஸ்ரத்தா, தற்போது இந்தி தவிர்த்து தென்னிந்திய மொழிப்படங்களிலும் தலை காட்ட தொடங்கியுள்ளார். பாலிவுட் என்றாலே ஆடம்பரம், அமர்க்களம், அட்டகாசம் என்று பலருக்கும் தெரியும்.

அதுபோன்றதொரு திரைப்பின்னணியை கொண்ட ஸ்ரத்தா கபூர், எப்போதும் தனது தோற்றத்தின் மீது அதிக கவனம் கொண்டிருக்கும் நடிகை. இவர் அணியும் உடைகள் எப்பொழுதுமே மக்களுக்கும் சரி மீடியாக்களுக்கும் சரி ஒரு பார்வை உண்டு. அந்த வகையில் அவரின் சமீபத்திய குர்த்தா உடை இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ வீட்டில் மணமகனை தேடுகிறார்கள் என்றால் பின்வரும் உடையை முதலில் காண்பியுங்கள். 

ஏனெனில் ஸ்ரத்தா கபூர் தான் அணிந்திருக்கும் உடை கிட்டத்தட்ட திருமண வரவேற்பு அதாவது ரிசப்ஷனுக்கு அணிகின்ற உடை போல் காண்போரை ஈர்த்து வருகிறது. ஸ்ரத்தா அணிந்து இருக்கும் உடை சில ஆயிரம் அல்ல அது பல ஆயிரம். இவருக்கு இந்த உடை நச்சென்று பொருந்துகிறது. மேலும் இந்த உடையில் ஸ்ரத்தா தேவதை போல் காட்சி அளிக்கிறார். அந்த படத்தை நீங்களே பாருங்கள். 
View this post on Instagram

 

A post shared by N A M R A T A (@namdeepak)


ஸ்ரத்தா கபூர் அணிந்திருப்பது என்ன உடை தெரியுமா?

ராஜஸ்தானின் அரண்மனைகளை நினைவூட்டும் பிரமாண்டமான சில்வர் எம்பிராய்டரிகளைக் கொண்ட ஒரு நேர்த்தியான ஸ்லீவ்லெஸ் குர்தாவைத் தான் ஸ்ரத்தா அணிந்துள்ளார். இந்த அட்டகாசமான குர்தாவுடன் ஒரு பளபளப்பான ஸ்கர்ட்டையும் அணிந்து கொண்டு சூப்பரான சிட்டிங்கில் கேமராவுக்கு போஸ் கொடுத்து உட்கார்ந்து கொண்டுள்ளார். 

அட்டகாசமான குர்த்தாவை மேலும் அமர்களப்படுத்தும் விதமாக கம்மல், மோதிரம் என எல்லாமே வேற லெவலில் ஸ்ரத்தா அணிந்துள்ளார். அலங்காரத்தை பொறுத்த வரையில் ஸ்ரத்தா, க்ரே ஷடோவ் மற்றும் ஜெட் பிளாக் கோல் கொண்ட நுட்பமான ஸ்மோக்கி-ஐ தோற்றத்தைத் தேர்ந்தெடுத்தார். மேலும் தான் அணிந்திருக்கும் ஒயிட் குர்த்தாவிற்கு பொருந்தும் வகையில் லிப்ஸ்டிக்கை தேர்வு செய்து தேவதை போல் கேமிராவிற்கு போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படத்தை ஸ்ரத்தாவின் டிசைனர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

ஸ்ரத்தா அணிந்திருக்கும் குர்த்தாவின் விலை என்ன தெரியுமா?

ஸ்ரத்தா அணிந்திருந்த கிரிஸ்லா செட் (Krisla Set) விலை ரூ .60,000. இது அனிதா டோங்ரேவின் (Anita Dongre) இணையதளத்தில் கிடைக்கிறது. உங்களுக்கு வேண்டுமென்றால் இந்த கஸ்டலியான உடையை வாங்கி உங்களையும் அழகு தேவதையாக உலகிற்கு காண்பியுங்கள். பாகுபலி பிரமாண்டத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் நடித்துள்ள படம் “சாஹோ”. இந்தப் படத்தை சுஜீத் இயக்கியுள்ளார். அவருடன் ஸ்ரத்தா கபூர், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷராப் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

Also read... ஆரோக்கியமான மற்றும் பளபளக்கும் சருமம் வேண்டுமா... இந்த ஸ்கின்கேர் டிப்ஸ்களை ட்ரை பண்ணலாம்!

மிகப் பிரம்மாண்டமான இந்த ஆக்ஷன் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஸ்ரத்தா கபூர் க்ரைம் ஃபிராஞ்ச் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கும் ஹீரோவுக்கு இணையான கதாப்பாத்திரம் தான் படத்தில் உள்ளது. மேலும் அவர் பல சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளார். தெலுங்குப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி சமீபத்தில் பேசிய அவர், தமிழ்ப்படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தது ஏன் என்றும் கூறியுள்ளார். ஸ்ரத்தா கபூருக்கு தமிழில் இருந்து நடிப்பு வாய்ப்புகள் நிறைய வந்ததாம். 

ஆனால் அவையனைத்தும் ஹீரோவுக்கு ஜோடியாக, பொம்மையாக ஆடிப்பாடும் பெண் வேடங்களாம். அவர் ‘ வெறும் ஹீரோக்களுடன் டூயட் ஆடும் பெண்ணாகவும், படத்தை அலங்கரிக்கும் பொம்மையாகவும் இருக்க விரும்பவில்லை. சவாலான கதாபாத்திரங்களாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். ஆனால் தமிழில் இருந்து வந்த வாய்ப்புகள் அனைத்தும் டூயட் ஆடும் பெண் பாத்திரங்களே. அதனால் தான் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார். ஸ்ரத்தா எதிர்பார்க்கும் கதாபாத்திரம் தமிழில் கிடைத்தால் விரைவில் அவரை நம் தமிழ் திரையில் காணலாம்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: