ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தீபாவளி ஷாப்பிங்... புடவை வாங்க ஆர்வம் காட்டும் பெண்கள்... இப்போ இந்த கலெஷன்ஸ் தான் டிரெண்ட்..!

தீபாவளி ஷாப்பிங்... புடவை வாங்க ஆர்வம் காட்டும் பெண்கள்... இப்போ இந்த கலெஷன்ஸ் தான் டிரெண்ட்..!

 தீபாவளி ஷாப்பிங்

தீபாவளி ஷாப்பிங்

ஆயிரம் ரூபாயில் தொடங்கி லட்சம் ரூபாய் வரையிலும் பெண்களின் கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் தோரணமாய் காட்சி தருகின்றன பட்டுப்புடவைகள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வீட்டின் தீபாவளி பட்ஜெட்டில் பெரும் தொகையை பிடிப்பது பெண்களுக்கான பட்டுப்புடவைகள் தா. இந்த தீபாவளிக்கு என்னென்ன புதுவரவுகள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன… அவை என்னென்ன பார்க்கலாம்.

தீபாவளி என்றாலே பிரிக்க முடியாதது புத்தாடையும் இனிப்பும் பட்டாசும்.குறிப்பாக பெண்களை பொறுத்த மட்டில் தீபாவளிப் பண்டிகைக்கு பட்டுப் புடவை வாங்குவதை பெரிதும் விரும்புவார்கள்.

ஆயிரம் ரூபாயில் தொடங்கி லட்சம் ரூபாய் வரையிலும் பெண்களின் கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் தோரணமாய் காட்சி தருகின்றன பட்டுப்புடவைகள்.

வைர ஊசி,வாரணாசியில் தயாரிக்கப்படும் கட்சுவாரி,கலம்காரி,பிச்சுவா பெயிண்டிங் போன்றவை அழகிலும் விலையிலும் பிரமிக்க வைக்கின்றன. இவற்றின் விலை 15 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை உள்ளது.

குறிப்பாக வைர ஊசி புடவை பழங்கால கலைநயத்துடன் உள்ளதால் இந்த முறை அதிகம் பேர் வாங்குவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கடை உரிமையாளர் அர்ச்சனா பேசுகையில் “ கல்லூரி பெண்களை பொறுத்தமட்டில் எடை குறைவான புடவைகளையே விரும்பி வாங்குகின்றனர். காற்றோட்டமான லினோ லைட் எனப்படும் மிகமிக எடைகுறைவான பட்டுப்புடவைகள் விற்பனைக்கு வந்துள்ளன” என்று கூறினார்.

Also Read : தீபாவளிக்கு அனைவரையும் உங்க அழகால கட்டிப்போடனுமா..? இப்போதிலிருந்தே இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க...

ஒருபக்கம் கடைகளில் புடவை வாங்க பெண்கள் கூட்டம் அலை மோதினாலும் இன்னொரு பக்கம் ஆன்லைனில் விற்பனையும் அதிகரித்துள்ளது.ஆயிரம் ரூபாயில் தொடங்கி 4 ஆயிரம் ரூபாய்க்குள் மிக கச்சிதமான பட்டுப் புடவைகள் ஆன்லைனில் அணிவகுத்து நிற்கின்றன.இதனால் நடுத்தர வர்க்கத்துப் பெண்கள் பெரும்பாலும் ஒரு பிரம்மாண்டமான பட்டுப்புடவையை இருபதாயிரம் முப்பதாயிரம் கொடுத்து வாங்குவதற்கு பதிலாக அதே தோற்றம் கொடுக்கும் வகையில் 3 ஆயிரம் ரூபாய்க்குள் ஆன்லைனிலேயே வாங்கி விடுகிறார்கள்.

ஒட்டுமொத்தமாக இந்த தீபாவளியும் எப்போதும் போலவே ஆண்களுக்கான புதுவரவு எதுவுமில்லாமல் பெண்களுக்கு அழகுசேர்க்க விதவிதமான புடவைகள் விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Deepavali, Diwali, Sarees, Shopping