எப்போதுமே திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு அளிக்கப்படும் அதே முக்கியத்துவம், அவர்களது வாரிசுகளுக்கும் அளிக்கப்படுவது உண்டு. அந்த வரிசையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், அஞ்சலியின் மூத்த மகளான சாரா டெண்டுல்கர் சோசியல் மீடியாவில் அதிகம் பேரால் கவனிப்படும் முக்கிய பிரபலமாக இருந்து வருகிறார்.
மும்பையில் பிறந்து வளர்ந்த சாரா டெண்டுல்கர் லண்டனில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டம் பெற்றுள்ளார். இருப்பினும் ஃபேஷன் மற்றும் மாடலிங் மீது கொண்ட ஆர்வம் காரணமாக விளம்பர மாடலாக வலம் வருகிறார். சாரா அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிடும் பல போட்டோஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாவது உண்டு. சமீபத்தில் தங்க நிற எம்பிராய்டரி மற்றும் மலர் வடிவ வேலைப்பாடுகளின் கூடிய பிங்க் நிற லெஹங்காவில் சாரா டெண்டுல்கர் மணப்பெண் போல் ஜொலிக்கும் போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.
சாரா எம்பிராய்ட்ரி வேலைப்பாடுகளுடன் பிங்க் நிறத்தில்அணிந்திருக்கும் லெஹங்காவை பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனிதா டோங்ரே வடிவமைத்துள்ளார். இந்திய பெண்களின் தனித்தன்மை மற்றும் வலிமையை பறைசாற்றும் விதமாக அனிதா டோங்ரே அறிமுகப்படுத்தியுள்ள Homage An Ode To You என்ற ஃபேஷன் நிகழ்ச்சியில் சாரா பிங்க் நிற லெஹங்காவுடன் தோன்றி அசத்தியுள்ளார்.
சிந்து கட்டிடக்கலையில் இருந்து பெற்ற உத்வேகத்தை அடிப்படையாக கொண்டு, எம்பிராய்டரி மூலமாக பல வண்ண மலர்களின் உருவங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த லெஹங்கா, ஒமேரா என அழைக்கப்படுகிறது. கோட்டா பட்டி மற்றும் சீக் ஆகிய கையால் செய்யப்படும் எம்பிராய்டரி வேலைப்பாடுகளை கொண்டுள்ளது. மேலும் இந்த கலர்ஃபுல்லான லெஹங்கா புதுமையான விதத்தில் சைடு பாக்கெட் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
அனிதா டோங்ரே கூறுகையில் “இந்த ஹோமேஜ், பழமைக்கும், புதுமைக்கும் இடையே நடக்கும் திருமணம் போன்றது என்பதை ஒவ்வொரு லெஹங்காவின் சிக்கலான வேலைப்பாடுகளை பார்க்கும் போதே அறிந்து கொள்ளலாம். நாங்கள் தலைசிறந்த கைவினைஞர்களுடன் இணைந்து கைவினைப்பொருட்கள் மற்றும் வண்ணங்களின் வரிசைகளில் மிகச்சிறந்த உருவங்களை மீண்டும் உருவாக்கியுள்ளோம். மேலும் இதனை தங்களை சுயமாக நிரூபித்துக் காட்டிய இளம் பெண்கள் மூலமாக காட்சிப்படுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
சருமத்தை இயற்கையான முறயில் பொலிவாக்க உதவும் ஹோம்மேட் ஃபேஸ் மாஸ்க்...
சாரா அணிந்துள்ள லெஹங்காவானது கையால் நெய்யப்பட்ட பெனாரஸ் மற்றும் பந்தனி ஆகியவற்றின் கலவையாகும். அதன் மீது பிரபலமான கோட்டா பட்டி எம்பிராய்டரி முறையில் காடுகள் மற்றும் பூக்களின் பசுமையை பிரதிபலிக்கும் விதமாக பச்சை, இளஞ்சிவப்பு, அடர் சிவப்பு, ஆரஞ்சு, ஊதா, நீலம் போன்ற வண்ணங்களைக் கொண்ட வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனிதா டோங்ரே, சாரா டெண்டுல்கர் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் தனித்தன்மையுடன் விளக்கும் பெண் ஆளுமைகள் பலரையும் தனது லெஹங்காவை அறிமுகப்படுத்த பயன்படுத்தியுள்ளார். இளம் வழக்கறிஞர் செரீனா ஜெத்மலானி, பிரபல சிறுகதை எழுத்தாளரான தியானா தாரா போர்வாலா, ஃபேஷன் இன்ப்ளூயன்சரான அலவியா ஜாஃபேரி ஆகியோரும் தங்களது தனித்தன்மையை பிரதிபலிக்கும் வகையிலான லெஹங்காவை அணிந்து போஸ் கொடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fashion Look, Sachin tendulkar