Home /News /lifestyle /

சாரா அலிகான் அணிந்திருக்கும் இந்த ஜிகுஜிகு உடை இவ்வளவு விலையா..?

சாரா அலிகான் அணிந்திருக்கும் இந்த ஜிகுஜிகு உடை இவ்வளவு விலையா..?

சாரா அலிகான்

சாரா அலிகான்

சாரா அலிகான் ஓவர் மேக்கப்போ, துளி கூட அணிகலன்களோ அணியாமல், தனது சீக்வின் கோல்டன் எல்லோ கலர் ஹாட் உடையை மட்டும் அணிந்திருந்து கெத்தாக போஸ் கொடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பாலிவுட்டில் நட்சத்திரங்களின் வாரிசுகள் என்பதாலேயே கவனிக்கப்படுபவர்கள் ஏராளம். பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியான சைஃப் அலி கான் மற்றும் அவரது முன்னாள் மனைவி அம்ரிதா சிங் ஆகியோரின் மகள் சாரா அலிகான், தனது தனித்துவமான ஃபேஷன் மூலமாக ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். திரையில் அறிமுகம் ஆவதற்கு முன்னரே, தனது fat to fit ட்ரான்ஸ்பர்மேஷன் மூலமாக மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தவர்.

ஆரம்ப கால திரை வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்திருந்தாலும், தனது துறுதுறுப்பான நடிப்பு மற்றும் வெளிப்படையான பேச்சால் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். பாலிவுட்டின் தவிர்க்க முடியாத இளம் நடிகையாக வலம் வரும் சாரா அலிகானை சோசியல் மீடியாவிலும் லட்சக்கணக்கானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். அல்ட்ரா மார்டன் உடைகள் முதல் பிகினி வரை லேட்டஸ்ட் ட்ரெண்டிற்கு ஏற்றார் போல் போட்டோ ஷூட் நடத்தி சோசியல் மீடியாவை தெறிக்கவிட்டு வருகிறார்.

இந்நிலையில் ஓடிடி விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகை சாரா அலிகான் அணிந்து வந்த உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு ஓடிடி தளங்கள் இந்திய ரசிகர்களிடையே தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளன. எனவே ஓடிடி தளங்களில் நல்ல படைப்புகளை உருவாக்கி வரும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகளை கெளரவிக்கும் விதமாக ஓடிடி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.



 




View this post on Instagram





 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)






இந்த நிகழ்ச்சிக்கு சாரா அலிகான் ஜிகுஜிகுவென மின்னக்கூடிய குட்டி உடையில் வந்து கவந்திழுத்துள்ளார். தங்க நிற உடையில் தகதகவென தேவதைப் போல் மின்னிய சாரா அலிகான், ரசிகர்கள் போதும், போதும் என திண்டாடும் அளவிற்கு போட்டோ ஷூட் ஒன்றையும் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வீட்டிலேயே இப்படி ஹேர் கேர் பண்ணுங்க.. முடி சும்மா பளபளன்னு இருக்கும்..

சாரா அலிகான் ஓவர் மேக்கப்போ, துளி கூட அணிகலன்களோ அணியாமல், தனது சீக்வின் கோல்டன் எல்லோ கலர் ஹாட் உடையை மட்டும் அணிந்திருந்து கெத்தாக போஸ் கொடுத்துள்ளார். தனது உடைக்கு பொருத்தமாக பெப்பி மஞ்சள் நிற ஸ்ட்ராப்பி ஹீல்ஸ், மினுமினுக்கும் ஸ்மோக்கி ஐ ஷேடோ, டிபைன்ட் ஐப்ரோஸ், லெமன் எல்லோ கலர் நெயில் பாலிஷ் ஆகியவற்றை மட்டுமே அணிந்து அழகு தேவதையாய் ஜொலித்துள்ளார்.



எல்லோ மினி விலை என்னத் தெரியுமா?

சாரா அலிகான் அணிந்திருக்கும் இந்த மினி டிரஸ் சூப்பரான பார்ட்டி வேர் ஆச்சே... எங்க கிடைக்கும், எவ்வளவு என இளம் பெண்கள் கூட்டம் தேட ஆரம்பித்துள்ளது. nyc.area இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சாரா அலிகான் அணிந்திருக்கும் உடையின் விலை 995 அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 80 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உடையின் விலையை கேட்ட ரசிகர் என்னது 80ஆயிரம் ரூபாயா என வாயை பிளந்துள்ளனர். மற்றொருபுறம் சாரா அலிகான் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள கவர்ச்சி கிளிக்ஸ் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Fashion Look, Sara Ali Khan

அடுத்த செய்தி