வசீகரத் தோற்றத்தில் சானியா மிர்ஸா... தங்கை திருமணத்தில் மணப்பெண் தோழி..!

வரவேற்ப்பு நிகழ்ச்சிக்காக பாரம்பரிய உடையில் அசத்திய சானியா..!

வசீகரத் தோற்றத்தில் சானியா மிர்ஸா... தங்கை திருமணத்தில் மணப்பெண் தோழி..!
சானியா மிர்ஸா
  • News18
  • Last Updated: December 12, 2019, 7:44 PM IST
  • Share this:
சானியா மிர்சாவின் தங்கை அனம் மிர்சாவிற்கு திருமணம் நடந்து முடிந்தது. அதில் நேற்று வரவேற்ப்பு நிகழ்ச்சிக்காக தன்னை தேவதை போல் அலங்கரித்துக் கொண்ட சானியா இன்ஸ்டாவிலும் பகிர்ந்தார்.

நிகழ்ச்சியில் தங்கைக்கு மணப்பெண் தோழியாக இருந்த சானியா அதற்கேற்ற உடையில் பொருத்தமாக இருந்தார். டிசைனர் ஜெயந்தி ரெட்டியின் கைவண்ணத்தில் பாரம்பரிய ஷராரா செட் உடை அணிந்திருந்தார்.
ஊதா நிறத்தில் ஷார்ட் குர்தி, அதற்கு பக்கா மேட்சிங்காக கிரே நிறத்தில் ஷராரா மற்றும் டிசைன்கள் கோர்க்கப்பட்ட துப்பட்டா என முழுமையான அழகைக் கொண்டிருந்தார்.ஆடைக்கு ஏற்ப கற்கள் பதித்த நீளமான காதணிகள், நெத்திச்சூடி அலங்காரம் சரியான பொருத்தம். ஆடை மற்றும் அணிகலன்களை ஹைலைட் செய்ய தன்னுடைய மேக் அப்பை மினிமலாக அப்ளை செய்துள்ளார்.

லிப்ஸ்டிக்கும் சிம்பிலாக லைட் ஷேட் தேர்வு செய்துள்ளார். அதுவும் தோற்றத்திற்கு நல்ல காம்ப்ளிமெண்ட்ரிதான். அணிகலன் ஆடைக்கு ஏற்ப லோ பன் ஹேர் ஸ்டைல் சாய்ஸ் பக்காவான தேர்வு.மொத்தத்தில் மின்னும் தேவதையாக ஜொலிக்கிறார் சானியா.

படிக்க : புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான கலக்கல் பார்ட்டி ஹேர் ஸ்டைல்ஸ்..!
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: December 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading