• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • திருமணத்திற்கு எந்த கலரில் புடவை எடுப்பது என்று குழப்பமாக உள்ளதா ? சமந்தா ஸ்டைல் ட்ரை பண்ணுங்க..

திருமணத்திற்கு எந்த கலரில் புடவை எடுப்பது என்று குழப்பமாக உள்ளதா ? சமந்தா ஸ்டைல் ட்ரை பண்ணுங்க..

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

நீங்களும் உங்கள் திருமணத்தில் சமந்தா லுக்கில் இருக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த லுக்கை ட்ரை பண்ணி பாருங்க..

  • Share this:
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் சமீபத்தில் அமேசானில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அந்த சீரிஸில் தனது சிறந்த நடிப்பிற்காக விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது தெலுங்கில் ’சகுந்தலம்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.தமிழில் காத்து வாக்குல இரண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி விதவிதமான மாட்ர்ன் காஸ்டியூமில் புகைப்படங்கள் பதிவிடுவார்.இந்நிலையில் சற்று வித்தியாசமாக கல்யாண பெண் உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.



இந்த போட்டோ ஷூட்டில் சிவப்பு நிறத்தில் மிகவும் க்ராண்டான புடவையை அணிந்துள்ளார்.மிகுந்த வேலைப்பாடு கொண்ட இந்த புடவை பார்ப்பவர்கள் கண்ணை பரிக்கிறது.புடவை முழுவதும் பூ டிசைன் கொடுக்கப்பட்டுள்ளதால் திருமணத்தின் போது இந்த சேலை கட்டினால் மிகவும் லுக்காக இருக்கும்.

புடவையில் அதிக டிசைன் இருப்பதால் ஜாக்கெட்டில் சிறிய டிசைனுடன் பார்டர் மட்டும் வைத்துள்ள ஜாக்கெட்டை தேர்வு செய்துள்ளார்.



புடவைக்கு ஏற்றது போல் அணிகலன்களையும் தேர்வு செய்துள்ளார். வளையல், ஜிமிக்கி, கழுத்திற்கு நெக்லஸ். தோடு மற்றும் இடுப்பில் அழகிய ஒட்டியானம், நெற்றி சுட்டியும் வைத்து திருமணப் பெண் தோற்றத்தை முழுமையாக பூர்த்தி செய்துள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by S (@samantharuthprabhuoffl)





மேக்கப்பை பொறுத்தவரை சிம்பிளான லுக்கையே தேர்வு செய்துள்ளார். கண்ணுக்கு காஜல், மஸ்காரா, ஐ லைனர் வைத்துள்ளார். நெற்றியில் சிவப்பு நிற பொட்டு வைத்திருப்பது முகத்திற்கு கூடுதல் அழகை சேர்த்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் தமிழ் பெண்களுக்கே மிகவும் பிடித்த மல்லிப்பூவையும் தலையில் வைத்துள்ளார்.

மொத்தத்தில் இந்த லுக்கில் சமந்தா ஒரு தேவதை போல் உள்ளார். நீங்களும் உங்கள் திருமணத்தில் சமந்தா லுக்கில் இருக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த லுக்கை ட்ரை பண்ணி பாருங்க..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: