Home /News /lifestyle /

Sadhguru Tamil : ஆடை கூட விஷமாகும், தெரியுமா? பெற்றோரே உஷார்! - சத்குரு விளக்கம்

Sadhguru Tamil : ஆடை கூட விஷமாகும், தெரியுமா? பெற்றோரே உஷார்! - சத்குரு விளக்கம்

சத்குரு

சத்குரு

Sadhguru Tamil : குழந்தைகளுக்கு வரும் பல பிரச்சனைகள், சின்ன குழந்தைகளுக்கு வரும் தைராய்டு இதோடு சம்பந்த பட்டது. ஆட்டிசம் கூட இதோட சம்பந்த பட்டது தான். இதுல இருந்து எத்தனை பிரச்சனை வருதுனு உங்களுக்கு தெரியாது.

  ஒவ்வொரு மனிதர்களிடமும் ஒரு கிரெடிட் கார்டு தயாரிக்கும் அளவிற்கு பிளாஸ்டிக் உள்ளது என கூறுகின்றார்கள். இன்றைக்கு குழந்தைகளுக்கு வரும் பல பிரச்சனைகள், சின்ன குழந்தைகளுக்கு வரும் தைராய்டு இதோடு சம்பந்த பட்டது. ஆட்டிசம் கூட இதோட சம்பந்த பட்டது தான். இதுல இருந்து எத்தனை பிரச்சனை வருதுனு உங்களுக்கு தெரியாது.

  கேள்வி : சத்குரு உங்கள் செயல்கள் நீடித்து நிலைக்கும் ஒன்றாக இருக்கு. அதே சமயத்துல மனித விழிப்புணர்வை உயர்த்தவும் வேலை செய்யுறீங்க. தனி மனிதர்கள் , சிறிய வணிகம் பண்றவங்க , மக்கள் , சமூகம் இவங்க எல்லாருமே இதற்கு எந்த வகையில் உதவியாக இருக்க முடியும்?

  சத்குரு பதில் :  இது இரண்டுமே வெவ்வேறு விஷயம் கிடையாது. மனுஷங்க விழிப்புணர்வா வாழுறதும், நீடித்த நிலையான தீர்வுகளும் இரண்டும் வெவ்வேறான விஷயம் கிடையாது. நீடித்த நிலையான ஆற்றல் இல்லாமல் நாம் செய்ய ஒரே காரணம் நாம விழிப்புணர்வாக இல்லாமல் இருப்பது தான். நம்ம உலகத்துல நாம செய்யுற செயலை விழிப்புணர்வோடு செய்யுறது இல்லை. எல்லாருமே நிர்பந்தத்தோடு செயலை செய்யுறாங்க. தனி மனிதர்களுக்கு நிர்பந்தம் இருக்கு . சமூகத்துக்கு நிர்பந்தம் இருக்கு. தேசங்களுக்கு நிர்பந்தம் இருக்கு. உலகத்துக்கே நிர்பந்தம் இருக்கு. இந்த நிர்பந்தங்ககளை திருப்தி படுத்துறதுக்காக நாம இங்க அடிப்படையா உயிர் வாழுறதுக்கு எதிர்மறையான விஷயங்களை செய்யுறோம். ரொம்ப பிரபலமான ஒரு கதை உள்ளது. பஞ்ச தந்திர கதை.

  மரத்தோட தப்பான நின்னுல உட்கார்ந்து கிட்டு ஒரு ஆளு மரம் வெட்டுறகதை அது. தான் வெற்றி அடையானும் என்பதலான தான் அந்த மனிதன் அத செய்றாரு. ஆனா வெற்றி அடையும் போது கீழே விழுறது. நாமளும் இப்ப அப்டித் தான் இருக்கோம். நாம அற்பத்தனமான செயல்களை செய்யுறோம். வெற்றி அடையும் போது கீழ விழுந்துடுவோம். நாம ஒவ்வொருத் தரும் நம்ம வாழ்க்கையை எப்படி அமைச்சுக்கணும்னா இன்னைக்கு நான் என்ன பயன்படுத்துறேன். இது எங்க போகும். அந்த அளவுக்கு நம்ம கவனம் நிச்சயமாக இருக்கணும். நான் இன்றைக்கு பயன்படுத்துறது நாளைக்கு என்ன ஆகும்.  அதோட முடிவு என்னவாக இருக்கும். கடைசியா இதோட கதி என்ன இதெல்லாம் கவனிக்கணும். ஒரு முக்கியமான விஷயம் இந்தியா ஒரு தேசமாக நாம ஆயிரக்கணக்கான வருஷமாக ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டுருக்கோம். ஒரு காலத்துல மொத்த ஐரோப்பாவும், அரேபியாவும் நம்ம கிட்ட இருந்து தான் ஜவுளி எடுத்தாங்க. கிட்டத் தட்ட 60 % ஜவுளி இந்தியாவுல இருந்து தான் செஞ்சோம்.

  நம்மள மாறி யாரும் இத்தனை நேர்த்தியான ஜவுளிகளை இந்த உலகத்துலயே செய்யல. இன்னைக்கும் கூட நீங்க போட்ருக்கீங்களே இது மாதிரி யாராலயும் ஜவுளி செய்ய முடியாது. (முன்னர் அமர்ந்திருப்பவர்) சரியா? உலகத்துல எங்கயுமே இது மாதிரி திறமையை பார்க்க முடியாது. ஏன்னா? இது மாதிரி வரது பிறவியிலே இருந்தே வரணும். ஒவ்வொரு ஏரியாலயும் ஒவ்வொரு வகையான தரிகளை உருவாக்குனாங்க.  வகை வகையான சாயங்களை உருவாக்குனாங்க. அவங்க அந்த ஏரியாவிற்கே உண்டான ஜவுகளை செய்தாங்க. இவற்றை பயன்படுத்தி அத்தனை நேர்த்தியான ஜவுளிகளை உருவாக்குனாங்க. 132க்கும் மேலான தரி வகைகள் இங்க இருக்கு. அத்தனையும் தனித்துவமான தரிகள். இந்த நூற்றாண்டோட துவக்கத்துல இது நம்ம கிட்ட இருந்துச்சு. இப்ப கிட்டத் தட்ட 65-70 வெரைட்டி அழியிற நிலையில இருக்கு. அத காப்பாற்ற நான் கொஞ்சம் முயற்சிகள் எடுத்துட்டு இருக்கேன். அத பிறகு பேசலாம். ( முன்னர் அமர்ந்து இருப்பவரிடம் கூறுகின்றார்). ஜவுளி என்பது நம்மளோட தனித்துவமாக இருந்து வந்துச்சு. நாம அதோட உயர்வை அடையனும்.

  பிரிட்டிஷ் காலத்துல அந்த தரிகள் எல்லாமே அழிய ஆரம்பிச்சுது. இந்திய தரிகளோட ஆற்றலை அவர்கள் முறைப்படி அளிக்க முயற்சி எடுத்தாங்க. அவங்க நாட்டுல மென்செஸ்டர் எடுக்க முயற்சி செஞ்சாங்க அதுல அவங்க வெற்றியம் அடைஞ்சாங்க. சரிதானே ஆனா இப்ப நிலைமை எப்படி இருக்குனா மக்கள் கோயம்புத்தூரை மென்செஸ்டர் என கூறி பெருமை பட்டுகிறாங்க.

  இதையும் படியுங்கள் :  ' இலுமினாட்டி தற்போது எதையும் கட்டுப்படுத்துவதில்லை' - சத்குரு

  கோவை இந்தியாவின் மேன்செஸ்டர் அப்டினு சொல்லிக்கிறாங்க. தயவு செய்து அப்படி சொல்லாதீங்க. அவங்க வேணுமுன்னா கோயம்புத்தூரை இங்கலாந்தின் மேன்செஸ்டர்னு சொல்லிக்கட்டும். ஏன்னா இங்க தான் உண்மையான பருத்தியும் , நெசவும் இருந்துச்சு. ஜவுளி இந்த தான் முழுசா நடந்துச்சு. வெவ்வேறு பகுதிகளிலும் அந்த பகுதிகளில் தனிப்பட்ட ஜவுளி இருந்துச்சு.

  அதெல்லாம் நாம மறுபடி கொண்டு வந்தோம்னா ஓரளவுக்கு மீட்டோம்னா கூட அதற்கு தேவையான சந்தை உருவாக்கி அந்த திறமைகளை மீட்டெடுத்தோம்னா என்னால நிச்சயமா சொல்ல முடியும் நம்ம நாட்டால 20ல இருந்து 30கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும். அதுவும் அடுத்த 5ல இருந்து 6 வருசத்துல. டெக்ஸ்டைல் துறையில இது தொடர்பா நிறைய முயற்சிகள் எடுக்குறாங்க. நிறைய பாலிசிகள் மாற்றம் செய்ய பட்டிருக்கு. நானும் அவர்கள் கூட சேர்ந்து வேலை செஞ்சுட்டு இருக்கேன். ஆனா நாம ஒரு புரட்சியை எதிர் பாக்குறப்ப இதெல்லாம் பத்தாது. எல்லாத்துக்கும் மேல இதற்கான மார்க்கெட்டை நாம் உருவாக்கனும்.

  இதையும் படியுங்கள் :  திருமணமான தம்பதிகள் ருத்ராட்சம் அணியலாமா? சத்குரு பதில்

  மார்க்கெட் என்பது நீடித்து நிலையான ஆற்றலுக்கு ஒத்து வர மாதிரி இருக்கணும். இப்ப கடைக்கு போய் 10 நைலான் டிரஸ் எடுக்கணும்னு போறாங்க. யாருமே 1 வாங்கணும்னு போறதில்ல. 2 டெஜன் எடுக்கணும்னு போறாங்க. இந்த 2 போட்டு முடிகிறதுக்குள்ள அடுத்த ஷாப்பிங் போராங்க. சரியா? இந்த உலகத்துல வாங்குற 80% உடைகள் ஒரு வருசத்துக்குள்ள வித்து போயிடுது. 10,000 கோடி துணி மணிகள் இந்த உலகத்துல ஒவ்வொரு வருஷமும் விற்கப்படுது.

  ஒவ்வொரு வருடமும் 8,500 ஆடைகள் குப்பைக்கு போகுது. இதுல பெரும்பாலும் பாலியெஸ்டர்ஸ். இருக்றதுலயே ஆபத்தான , சுற்றுசூழலுக்கு மாசு விளைவிக்கிறது எதுனா பாலிபைபர் எல்லா இடங்களிலும் கிடக்குறது. காற்றுல இருக்குது, தண்ணியில இருக்குது, மண்ணுல இருக்குது ஒரு சில ஆய்வாளர்கள் பிளசண்டா ல பாத்துருக்காக. அதவாது உங்க தாயோட கருவுலயே நீங்க அத பிடிச்சு வச்சுக்குறீங்க. இதுல ஒரு ஆய்வாளர்கள் என்ன சொல்றாங்கனா எதை வச்சு சொல்றாங்கனு தெரியல, இந்த நம்பர்கள் எதை வைத்து உண்மை என்றும் தெரியல. ஆனா ஆய்வு சரியான திசையில தான் செய்யப்பட்டிருக்கு.ஒவ்வொரு மனுஷனுக்குள்ளயும் ஒரு க்ரெடிட் கார்டு தயாரிக்குற அளவிற்கு பிளாஸ்டிக் இருக்குனு சொல்றாங்க. இதுக்குலாம் நீங்க ஒரு நாள் விலை கொடுத்து ஆகணும்.

  இதையும் படியுங்கள் : இதயமா? மூளையா? எது சொல்வதை நம்புவது?

  உங்க உடம்புலேயே க்ரெடிட் கார்டு இருந்தா அதுக்கு ஒரு நாள் நீங்க விலை கொடுத்து தான் ஆகணும். பிளாஸ்டிக் எல்லா பக்கமும் இருக்கு ஆனால் அதனை விட்டு விட்டு எல்லாரும் பிளாஸ்டிக் பை பின்னர் போய்கிட்டு இருக்காங்க. பிளாஸ்டிக் பை பிரச்னையை நீங்கள் கையாள கூடாதுனு நான் சொல்ல வரல. ஆனா அத செய்யுறது இப்ப பேஷன் ஆயிடுச்சு. தெருவுல இருக்குற மட்டமான பிளாஸ்டிக் மறு சுழற்சி செய்றது எல்லாமே நடக்குது. கிட்டத் தட்ட 90% மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில் இந்தியாவில் மறு சுழற்சி செய்யப்படுகின்றது.  இந்த அளவிற்கு செய்யுற ஒரே நாடு இந்தியா தான். சுற்று சூழல் விழிப்புணர்வோட இருக்கிறதுனால இது நடக்கல. மக்கள் வறுமையில் இருக்கிறதுனால இதுலாம் நடக்குது. ஆனா பாலிபைபர் அது நம்ம உடம்புக்குள்ள ஏற்படுத்துற சேதத்தோட அளவு , விதம் அதுலயும் குறிப்பாக குழந்தைகள் பாலிபைபர் டிரஸ் போடுராங்க. பாலிபைபர் சீக்கிரமாக தீ பிடிச்சுரும். அதனால அதன் மீது கோட்டிங் கொடுக்குறாங்க. இதுல குழந்தைகள் பாதிப்பு அடைறாங்க. இப்ப சின்ன குழந்தைகளுக்கு தைராய்டு வர காரணம் இந்த டிரஸ்ல போட்ருக்குற கோட்டிங் தான்.  ஆட்டிசம் மட்டும் அல்லாமல் பல்வேறு ரசாயனங்கள் தொடர்புடையதாக இது இருக்குது. இதுல இருந்து உங்களுக்கு எத்தனை பிரச்சனைகள் வருது தெரியுமா? உங்களுக்கு தெரியுறது இல்லை. உங்களுக்கு தெரியாம இன்னும் நிறைய பிரச்சனைகள் வருது. ஒரு குழந்தை 15-16 வயசுல நிச்சமாக பாலி பைபர் ஆடைகள் போட கூடாது. அவங்க ஆர்கானிக் ஆடைகள் தான் போட்டுக்கணும். அப்படினா பெரியவங்க போட்டுக்கலாமா? அப்டி கிடையாது. 17-18 வயசுக்கு மேற்பட்டவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அது வரைக்கும் ஆர்கானிக்ல தான் போட்டுக்கணும். ஆனா பிரச்சனை என்னென்னா? உங்கலள அத்தனை உடைகளையும் அப்டி போட்டுக்க முடியாது. அதனால் தான் பாலி, பாலி உடைகளை தேர்ந்தெடுக்கறீங்க.

  இதையும் படியுங்கள் :  பணமும் காமமும் ஆட்டிப் படைக்குதே! சமாளிப்பது எப்படி? சத்குரு விளக்கம்

  காட்டன் கூட நம்மள விலை குறைவாக உற்பத்தி செய்ய முடியும். நிறைய பயிர்தானும் அவ்ளோதான். நான் இத நிறைய மாநிலங்களில் கொண்டு சேர்க்க முயற்சி பண்றேன். குறைஞ்ச பட்சம் பள்ளி கூட யூனிபார்ம் ஆவது காட்டன் இல்ல லினன்லயோ இருக்கணும். எது கட்டுபடியாவுதோ செஞ்சுக்கலாம். ஆனா பாலிபைபர் பயன்படுத்தாதீங்க. அதனை மறு சுழற்சி செய்யமுடியாது. அது சுத்தமான நைலான் அல்லது பாலி பைபராக இருந்தால் அதனை மறு சுழற்சி செய்ய முடியும். ஆனால் அதுல நிறைய பொருட்களை கலக்குறதுநால மறுசுழற்சிக்கு வாய்ப்பில்லாமல் போய் விடுகின்றது. நீங்கள் பயன்படுத்தும் பாலி பைபர் ஆடைகளில் 1% தான் மறு சுழற்சி செய்யப்படுகின்றது. மத்ததெல்லாம் இயற்கைல கழிவாக போய் சேருகின்றது. அதெல்லாம் நமக்கே பல விதங்களில் திரும்ப வந்து சேருது. உங்க இதயத்துல க்ரெடிட் கார்ட் மாதிரி உட்கார்ந்து இருக்கு.
  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Sadhguru

  அடுத்த செய்தி