திருமணங்களில் ஆண்களுக்கு ராஜகம்பீர தோற்றத்தை அளிக்கும் ஷெர்வானியுடன் சோக்கர்(Chokker) அணிவித்து அதோடு கையில் ஹேண்ட் பேகும் கொடுத்து பிரபல ஆடைவடிவமைப்பாளர் சபயாசாச்சி (Sabyasachi) ஃபோட்டோஷூட் எடுத்துள்ளார். இது சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
விழாக்காலங்களில் மிடுக்கான தோற்றத்தை கொடுக்கும் ஆடையான ஷெர்வானியில் பல்வேறு டிசைன்கள் பேஷன் உலகில் உள்ளன. சுப நிகழ்வுகளில் பெண்கள் அணிவதற்கு பல்வேறு காஸ்ட்லியான உடைகள் இருந்தாலும், ஆண்களுக்கு குறிப்பிட்டு சொல்லுமளவிலான டிசைன்கள் மட்டுமே உள்ளன. அந்த வகையில் அண்மைக்காலமாக ஷெர்வானி ஆடை வகைகள் ஆண்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகின்றன. பழங்காலங்களில் அரச பரம்பையினர் அணிந்த இந்த உடையின் பயன்பாடு நாகரீக மாற்றத்தில் புழக்கத்தில் இல்லாமல்போனது.
இந்நிலையில், தற்போது இந்த உடை மீண்டும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்காலத்துக்கு ஏற்ப ஷெர்வானி உடை அமைப்பிலும் புதிய புதிய டிசைன்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. சிப்கான், இண்டோ - வெஸ்டர்ன் ஷெர்வானி, அனார்கலி ஷெர்வானி, கிளாசிக் பந்த்கலா, எம்பிராய்டர் ஷெர்வானி என பல்வேறு வகைகள் உள்ளன. அந்தவகையில், இந்தியாவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவரான சப்யாசச்சி புதிய டிரெண்ட் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதாவது, ஷெர்வானியுடன் சோக்கர் அணிந்துகொள்ளும் புதிய ஐடியாவை அறிமுகப்படுத்தியுள்ளார். சோக்கர் என்பது கழுத்துப்பட்டையாகும்.
பழங்காலத்தில் அரசர்கள் மற்றும் இளவரசர்கள் உள்ளிட்டோர் அணிகலன்களை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பின்நாட்களில் மோதிரம் மற்றும் சிறிய அளவிலான கழுத்து செயின்களைத் தவிர ஆண்கள் அணிவதில்லை. மீண்டும் பழங்கால ஸ்டைலை அவர் அறிமுகப்படுத்தியுள்ளது ஆண்கள் பேஷன் உலகில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. கழுத்தப்பட்டை அணிகலன்களுடன், முழங்கால் பகுதி வரை இருக்கும் ஷெர்வானியை அணிந்துகொண்டு மாடல்கள் கொடுத்துள்ள ஸ்டைல் சபயாசாச்சி இணைய பக்கத்தில் வைரலாகியுள்ளது. மேலும், டர்பன், கழுத்தப்பட்டையுடன் ஷெர்வானி அணிவதும் பிரண்மாண்ட லுக்கை ஆண்களுக்கு கொடுத்துள்ளது.
சபாயாசாச்சி கொடுத்துள்ள புதிய மாடல் குறித்து பேசிய பிரபலமான ஆடை வடிவமைப்பாளர் பன்சாலி , " உண்மையிலேயே ஷெர்வானி மிகச்சிறந்த மற்றும் ராயல் லுக் கொடுக்கும் ஆடையாகும். ஆனால் காலப்போக்கில் இதன் பயன்பாடு ஏன் குறைந்தது என்று தெரியவில்லை. வரும்காலங்களில் ஷெர்வானி உடை அணிவதை ஆண்கள் விரும்புவார்கள் என நினைக்கிறேன். திருமண விழாக்களுக்கு மட்டும் ஏற்ற உடை அல்ல. அனைத்து விழாக்களுக்கும் ஷெர்வானியை அணிந்து கொள்ளலாம். அதில் பல்வேறு புதிய டிசைன்கள் உள்ளன. வரலாற்றை திரும்பி பார்த்தால் ஷெர்வானி உடையின் முக்கியத்துவமும், அந்த உடை அரசர்களுக்கு கொடுத்துள்ள மிடுக்கையும் உணரலாம்" என்றார்.
அன்விதா சர்மா என்ற டிசைனர் பேசும்போது, " இதற்கு முன்னர் சோக்கர் உடன் ஷெர்வானியை ஆண்கள் அணியுமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால், பலர் ஆண் மாடல்கள் அதனை விரும்பவில்லை. மாடல்கள் அறிமுகப்படுத்தும் அனைத்து உடை வடிவமைப்புகளும் சந்தையில் அதிக வரவேற்பு பெறுவதாக கூற முடியாது. சந்தையில் விற்பனை அதிகரிக்கும்போது சோக்கருடன் ஷெர்வானியை விற்பனை செய்யலாம். வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தினால் விற்பனை பாதிக்கவும் வாய்ப்பு உள்ளது" எனத் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.