Home /News /lifestyle /

வயதான தோற்றத்தை மறைக்க இந்த கிரீம் போதும்!

வயதான தோற்றத்தை மறைக்க இந்த கிரீம் போதும்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Skin Care | ஆன்டி-ஏஜிங் கிரீம்கள் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களைக் குறைப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. ஆல்ஃபா மற்றும் பீட்டா ஹைட்ராக்ஸி கலவைகள், ரெட்டினோல் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி அனைத்தும் கொண்ட ஆன்டி-ஏஜிங் கிரீம்களில் உள்ளன.

மேலும் படிக்கவும் ...
 • Trending Desk
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India
  பல ஆண்டுகளாகவே அழகு சாதன பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் சூசக மந்திரமாக ஆன்டி-ஏஜிங் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. சூரிய ஒளி, மன அழுத்தம், சுற்றுச்சூழல் மாசு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, போதிய தூக்கமின்மை போன்ற காரணங்களில் பெண்களின் சருமம் முன்பை விட வேகமாக வயதான தோற்றத்தை அடைந்து வருகிறது. வறண்ட சருமம், மெல்லிய சுருக்கங்கள், சீரற்ற தோல், கரடுமுரடான அமைப்பு, கண்ணுக்குத் தெரியும் துளைகள் மற்றும் மங்கலான தோல் ஆகியவை வயதான சருமத்திற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் ஆகும்.

  மற்றொருபுறம் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியாவின் வளர்ச்சியால் பெண்கள் தங்களது போட்டோ மற்றும் வீடியோக்கள் அழகாக காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக இளம் வயதிலேயே முகத்தில் தோன்றும் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை போக்க ஆன்டி-ஏஜிங் கிரீம்களை தடவ ஆரம்பிக்கின்றனர்.

  ஆன்டி-ஏஜிங் கிரீம்கள் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களைக் குறைப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. ஆல்ஃபா மற்றும் பீட்டா ஹைட்ராக்ஸி கலவைகள், ரெட்டினோல் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி அனைத்தும் கொண்ட ஆன்டி-ஏஜிங் கிரீம்களில் உள்ளன.

  சரும பராமரிப்பில் ஆன்டி-ஏஜிங் கிரீம்களை இணைப்பதன் மூலமாக நீங்கள் வயதான தோற்றத்தை குறைத்து மென்மையான, அழகான சருமத்தை பெறலாம். ஆனால் இயற்கையான மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆன்டி - ஏஜிங் கிரீம்களை விட, ரசாயன கலப்பு கொண்ட க்ரீம்களை பயன்படுத்துவது எதிர்காலத்தில் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

  Read More : மேக்கப் ரிமூவ் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கா? முறையாக செய்வது எப்படி?

  எனவே அழகுக்கலை நிபுணரான ஷானாஸ் ஹுசைன் எந்த வயதில், எப்படி ஆன்டி - ஏஜிங் க்ரீமை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து கொடுத்துள்ள சில ஆலோசனைக் பற்றி பார்க்கலாம்...

  ஆன்டி-ஏஜிங் கிரீம்களின் நன்மைகள்:

  1. சரும பொலிவை அதிகரிக்கும்:

  சூரிய கதிர்வீச்சு, தினசரி மாசுபாடு ஆகியவற்றில் இருந்து சருமத்தை பாதுகாத்து பொலிவுடன் மிளரச் செய்ய ஆன்டி - ஏஜிங் பேஸ் கிரீம்கள் பயன்படுகின்றன. ஒரு நல்ல வயதான தோற்றத்தை எதிர்க்க உதவும் கிரீம் சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளை மறைக்கவும் உதவுகிறது.

  2. சரும நீரேற்றம்:

  தோல் வறட்சி காரணமாக சருமம் அதன் மென்மை தன்மையை இழக்கும் போது வயதான தோற்றத்திற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன. ஸ்கின்னை டிஹைட்ரேட்டாக வைத்திருக்கவும் ஆன்டி - ஏஜிங் கிரீம்கள் உதவுவதாக கூறப்படுகிறது.

  கண்கள், கன்னங்கள் மற்றும் கழுத்தைச் சுற்றியுள்ள தோல் பகுதிகளில் ‘ரோஸ் ஹிப்’ தாவர விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யைக் கொண்டு மசாஜ் செய்வது நல்ல பலன் கொடுக்கும். இது உங்கள் வறண்ட சருமத்தை குணப்படுத்துவதோடு, ஈரப்பதமூட்டும் குணங்களையும் கொண்டுள்ளது.

  3. முகத்தில் கறைகள், நிறமாற்றத்தை தடுத்தல்:

  ஆன்டி - ஏஜிங் கிரீம்கள் 15 சதவீத SPF உள்ளது. இது சன்ஸ்கிரீனாகவும் செயலாற்றி, சருமத்தை புற ஊதாக்கதிர்கள் மற்றும் வெப்பத்தின் கடுமையான தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது. இதனால் முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள், சீரற்ற நிறம் போன்ற பிரச்சனைகள் குறைகிறது. பொதுவாக வைட்டமின்கள் ஈ மற்றும் சி போன்ற ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது, இது சருமத்தை சேதப்படுத்தும் செல்களை எதிர்த்துப் போராடுகிறது.

  சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பராமரிப்பு முக்கியமானது என்பதால் வெளியே செல்லும் போது ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒருமுறை சன்ஸ்கிரீன் லோஷன் மற்றும் ஆன்டி-ஏஜிங் கிரீமை தடவிக்கொள்ள வேண்டும்.

  4. தன்னம்பிக்கையை அதிகரிக்கும்:

  ஆன்டி - ஏஜிங் கிரீம்கள் மூலமாக தோற்றத்தில் ஏற்படும் மாற்றம் தன்னம்பிக்கை அதிகரிக்க உதவுகிறது. அழகாக இருக்கிறோம் என்ற எண்ணம் நம்பிக்கையை அதிகரிப்பதோடு, சவால்களை எதிர்கொள்ளவும் உங்களை தயார்படுத்துகிறது.

  5. நல்ல ஆரோக்கியம்:

  முகத்தின் தோற்றம் மேம்பட்டதால், அடிக்கடி வெளியே செல்ல வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். பார்ட்டி, குடும்ப விழாக்கள், நண்பர் வீட்டு விசேஷம் என அடிக்கடி பலரையும் சந்திக்க வெளியே செல்வது நட்புறவை வளர்க்க உதவுகிறது. இதன் மூலம் நமக்கான நபர்களும் இருக்கிறார்கள் என்ற எண்ணம் உருவாகி, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை குறைக்கிறது. மன ஆரோக்கியம் மேம்படும் போது இயல்பாகவே உடல் ஆரோக்கியமும் மேம்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

  ஆன் டி-ஏஜிங் கிரீம்களை பயன்படுத்த சரியான வயது:

  பெண்கள் 20 வயது நிறைவடைந்த பிறகோ அல்லது 30 வயதின் தொடக்கத்திலோ ஆன்டி-ஏஜிங் கிரீம்களை பயன்படுத்தலாம். வயதான அறிகுறிகளை கண்டறிவதற்கு முன்பே ஆன்டி - ஏஜிங் கிரீம்களை பயன்படுத்துவது நல்ல பலன் கொடுக்கும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக 30 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் தங்களது இளமையான தோற்றத்தை பராமரிக்க ஆன்டி - ஏஜிங் கிரீம்களைப் பயன்படுத்த வேண்டும்.
  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Fashion Tips, Skin Care, Skin Disease

  அடுத்த செய்தி