முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இத்தாலி ஆடைவடிவமைப்பு நிறுவனமான மெய்சன் வேலன்டினோவுடன் கைகோர்க்கும் ரிலையன்ஸ் ப்ராண்ட்ஸ் !

இத்தாலி ஆடைவடிவமைப்பு நிறுவனமான மெய்சன் வேலன்டினோவுடன் கைகோர்க்கும் ரிலையன்ஸ் ப்ராண்ட்ஸ் !

ரிலையன்ஸ் -வேலென்டினோ

ரிலையன்ஸ் -வேலென்டினோ

Reliance brands- Valentino: இத்தாலியைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனமான மெய்சன் வேலன்டினோ-வின் தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனை செய்வதற்காக நீண்டகால ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இத்தாலியைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனமான மெய்சன் வேலன்டினோ-வின் தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனை செய்வதற்காக நீண்டகால ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இரு நிறுவனங்களுக்கும் இடையேயான இந்த ஒப்பந்தத்தின் மூலம், டெல்லியில் விரைவில் தனி விற்பனையகத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்க உள்ளது.இதனைத் தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் மும்பையில் மிகப்பெரும் அளவில் விற்பனையகம் திறக்கப்பட உள்ளது.

ஜூலை 22: தித்திக்கும் தேசிய மாம்பழ தினம் இன்று.! - மாம்பழத்தின் வரலாறு தெரியுமா?

2022 ஆம் ஆண்டில் கோடையின் இறுதிக்குள் முதல் கடையைத் திறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில், வேலன்டினோ நிறுவனம் தயாரிக்கும் ஆடவர் உடைகள், மகளிருக்கான உடைகள், காலணிகள் மற்றும் பிற பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் கைவண்ணத்தில் வரும் பொருட்களால் உலகளாவிய அனுபவத்தையும், தரத்தையும் இந்திய வாடிக்கையாளருக்கு ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கும் என்று ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் தர்ஷன் மேத்தா தெரிவித்தார். டெல்லியில், வாலண்டினோ டிஎல்எஃப் எம்போரியோவில் 162 சதுர மீட்டர் பரப்பளவில் அமைய இருக்கும் கடையில் பெண்களின் ஆடைகள், அலங்கார பொருட்கள் மற்றும் ஆண்களுக்கான ஆபரணங்களின் கலக்சன்களும் வைக்கப்பட உள்ளன.

31 லட்சம் வாடிக்கையாளர்களை ஈர்த்த ஜியோ.. முதலிடத்தை தக்க வைத்தது

மும்பையில் உள்ள ஃபிளாக்ஷிப் ஸ்டோர் முழு வாலண்டினோ பெண்கள் ஆடைகள், ஆண்கள் உடைகள், பாதணிகள் மற்றும் வாலண்டினோ கரவானி பிராண்டின் அனைத்து அலங்காரப் பொருட்கள் , காலணிகள், பைகள், சிறிய தோல் பொருட்கள், கண்ணாடிகள், ஸ்கார்வ்கள், டைகள் மற்றும் வாசனை திரவியங்கள் வைக்கப் பட உள்ளன.

1960 இல் வாலண்டினோ கரவானி மற்றும் ஜியான்கார்லோ கியாமெட்டி ஆகியோரால் நிறுவப்பட்ட வாலென்டினோ பிராண்ட் சுமார் 144 இடங்களில் 1300 விற்பனையகங்களைக் கொண்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கைகோர்ப்பதன் மூலம் தங்கள் விற்பனை சந்தையை இந்தியாவிற்குள் வெற்றிகரமாக நிலைநாட்ட திட்டமிட்டுள்ளது.

First published:

Tags: Fashion, Reliance, Reliance Retail