இந்தியாவில் உள்ள முன்னணி பேஷன் டிசைனர்கள் வடிவமைத்த ஆடைகளை ஒவ்வொரு ஆண்டும் இந்திய கவுச்சர் வீக்கில் அறிமுகம் செய்வார்கள். அதே போன்று இந்தாண்டு டெல்லியில் ஜுலை 22ம் தேதி தொடங்கிய இந்திய கவுச்சர் வீக் 2022ல் பேஷன் டிசைனர் ராகுல் மிஸ்ரா, ஜே ஜே வலயா மற்றும் வருண் பால் ஆகியோர் தங்களது படைப்புகளை மாடல்கள் மூலம் ரேம்ப் வாக் செய்து அறிமுகம் செய்தார்கள். இந்த வரிசையில் டெல்லியில் நடைபெற்ற இந்திய கவுச்சர் வீக்கில் பேஷன் டிசைன் வருண்பால் வடிவமைத்த சிவப்பு நிற லெஹாங்காவை அணிந்து ராஷ்மிகா பேஷன் வாக் செய்தார்.
சினிமா, விளம்பரம் என பிஸியாக வலம் வந்த ராஷ்மிகா, தன்னுடைய 27 வயதில் பேஷன் வீக்கில் தன்னை அறிமுகம் செய்த பேஷன் டிசைனருக்கு நன்றி தெரிவித்து, இந்த அனுபவம் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். மேலும் அந்த பதிவில், ஃபேஷன் வாரத்தில் கலந்துக்கொண்டது என் மனதில் பட்டாம்பூச்சிகள் பறந்தது என்றும், இந்த பணி தனக்கு தெரியவில்லை என்றாலும் முயற்சி செய்தேன்.. எனவும், எனக்கு மிகுந்த சிறந்த அனுபவமாக இருந்தது என பகிர்ந்தார். இதோடு சிவப்பு நிற லெஹங்காவில் எடுத்த புகைப்படங்களையும் பகிந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி தற்போது ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
நடிகை ராஷ்மிகா மந்தனா, கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தாலும், ரசிகர்களிடம் டாப் ஹீரோயின் ஆக்கியது தெலுங்கு படங்கள். தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களின் மூலம் தான் தென்னிந்தியா முழுவதும் பேமஸ் ஆனார் ராஷ்மிகா மந்தனா.
பின்னர் தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு வெளியான சுல்தான் படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்த அவர், தற்போது தளபதி விஜயுடன் வாரிசு திரைப்படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இந்தப் திரைப்படத்தில் மிகவும் தைரியமான கதாபாத்திரத்தில், குடும்பத்தினர் மீது மிகவும் பாசம் வைத்துள்ள ரோலில் நடித்துள்ளார் ராஷ்மிகா என்பது குறிப்பிடத்தக்கது.
காஜல் அகர்வாலின் சீக்ரெட் ரெசிபி... அவங்களே சொல்லி தரும் டிப்ஸ்...
என்னதான் இதுப்போன்று பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், புஷ்பா படத்தின் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். அய்யோ..சாமி அய்யோ சாமி என்ற பாடலுக்கு ராஷ்மிகா போட்ட ஆட்டம் பட்டி தொட்டியெங்கும் நல்ல ரீச் கொடுத்தது. இந்த வெற்றியையடுத்து பாலிவுட்டிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார் நடிகை ராஷ்மிகா. ஹிந்தியில் குட்பை என்ற படத்தில் அமீதாப்புடன் இணைகிறார் புஷ்பா பட நாயகி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.