முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ராணா டகுபதியின் காதலி அணிந்திருந்த புடவையை டிசைன் செய்தது யார் தெரியுமா..?

ராணா டகுபதியின் காதலி அணிந்திருந்த புடவையை டிசைன் செய்தது யார் தெரியுமா..?

மிஹீகா

மிஹீகா

நிகழ்சியில் மிஹீகா அணிந்திருந்த புடவை வைரலாகப் பேசப்பட்டு வருகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :

தெலுங்கு திரையுலகின் பிரபல ஆசை நாயகன், பெண்களின் கனவு நாயகன், பாகுபலி மூலம் தமிழ் திரையுலகிலும் பிரபலமானவர்தான் ராணா டகுபதி.

சமீபத்தில் தான் காதலிக்கும் பெண் இவர்தான் என இன்டீரியர் டிசைனரான மிஹீகா பஜாஜ் என்பவரை சமூகவலைதளங்களில் அதீகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். அதோடு விரையில் திருமணமும் நடக்கவிருப்பதாகக் கூறினார். தற்போது ராணாவின் திருமண செய்திதான் திரையுலகின் ஹாட் டிரெண்டிங் டாப்பிக்.

இந்நிலையில் நேற்று இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக சில படங்கள் வைரலாகப் பரவின. ஆனால் அவரது தந்தை அது நிச்சயதார்த்தம் அல்ல.. இருவீட்டாரும் கலந்து ஆலோசிக்கும் நிகழ்வு எனக் கூறியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க நேற்று அந்நிகழ்சியில் மிஹீகா அணிந்திருந்த புடவை வைரலாகப் பேசப்பட்டு வருகிறது.

ஆஹா.. ஓஹோ.. என இல்லாமல் சிம்பிளான பீச் நிறத்தில் அவர் அணிந்திருந்த பிளையின் சாரீயை பிரபல வடிவமைப்பாளரான ஜெயந்தி ரெட்டி வடிவமைத்துள்ளார். அந்த புடவை பிரதேயகமாக காஞ்சிபுரத்தில் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிளவுஸ் வடிவமைப்பையும் மிக நேர்த்தியாக டிசைன் செய்துள்ளார்.

பீச் நிறத்திற்கு ஏற்ற எதிர் நிறமான  ராணி பிங்க் பக்கா பொருத்தமாகவும் ரிச் லுக்கையும் அளித்துள்ளது. பள்ளு மற்றும் பிளவுஸ் நிறத்திற்கு ஏற்ப மெட்டாலிக் ஃபினிஷிங்கில் துப்பட்டா அணிந்திருந்தது பக்கா பொருத்தம். புடவையில் எளிமைக்கு ஏற்ப மேக்அப் ஹேர் ஸ்டைலும் சிம்பிளாகவே செய்துள்ளார்.

பெண்கள் இந்த 5 வகை பிராக்களை வைத்திருந்தால் எந்த உடைக்கும் அணிந்துகொள்ளலாம்..!

புடவை சிம்பிளாக இருப்பதால் ஸ்டேட்மெண்ட் நெக்லஸ் மற்றும் காதணிகள் அணிந்திருப்பது எடுப்பாக உள்ளது. மொத்ததில் இண்டீரியர் டிசைனராக இருந்தாலும் காஸ்டியூம் டிசைனிலும் அவரது தேர்வு சிம்பில் அண்ட் ரிச் தோற்றத்தில் சிறப்பாகவே உள்ளது.

First published:

Tags: Fashion Tips, Rana Daggubati, Saree look