அழகியே ரைஸா... பிக் பாஸ் புகழ் ரைஸாவை பாராட்டிய பிரபல காஸ்டியூம் டிசைனர்!

ரைஸா இந்திய ஃபேஷன் துறையில் தடம் பதிக்காத மேடையில்லை.

Web Desk | news18
Updated: June 10, 2019, 4:35 PM IST
அழகியே ரைஸா... பிக் பாஸ் புகழ் ரைஸாவை பாராட்டிய பிரபல காஸ்டியூம் டிசைனர்!
ரைஸா வில்சன்
Web Desk | news18
Updated: June 10, 2019, 4:35 PM IST
ரைஸா பிக்பாஸ் மூலம் அறிமுகமாகி திரைத்துறைக்குள் புதிதாக நுழைந்தாலும், ஃபேஷன் துறைக்கு பெயர் போன மாடல். தன் கச்சிதமான உடல் அமைப்பால் ஃபேஷன் மேடைகள் மட்டுமன்றி விளம்பரங்களிலும் தன் அடையாளத்தைப் பதித்தவர்.

அழகு விஷயத்தில் எப்போதும் கவனத்துடன் இருக்கும் ரைஸா, அதை பிக்பாஸ் வீட்டிலும் விட்டுக் கொடுக்கவில்லை. அதுதான் அவர் மாடலிங் துறை மீது கொண்ட பற்று. இப்படி ரைஸா தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய ஃபேஷன் துறையிலும் பதிக்காத மேடையில்லை.
மாடலிங் துறையில் இருக்கும் பலருக்குமான ஆசை வெள்ளித் திறையில் முத்திரை பதிக்கவேண்டும் என்பதுதான். அப்படித்தான் தீபிகா படுகோன், ஐஷ்வர்யா ராய் என பல முன்னனி நாயகிகள் வெள்ளித்திரையை தன் வசம் கொண்டுள்ளனர். இப்படி ரைசாவிற்கும் கிடைத்த அதிஷ்டக் கதவுதான் பிக்பாஸ் இல்லம். அங்கிருந்து அவருக்கு திறக்கப்பட்ட கதவுதான் வெள்ளித்திரையில் வெளியான பியார் பிரேமா காதல்.

திரைப்படங்கள் நடிக்கத் தொடங்கிய பின்பும் மாடலிங் செய்வீர்களா என்று மீடியாக்கள் கேட்ட கேள்விக்கு, கொஞ்சமும் யோசிக்காமல் கட்டாயம் எனது பங்களிப்பு இருக்கும் என்றார். அதேபோல் பிரபல காஸ்டியூம் டிசைனரான சிட்னி ஸ்லாடனின் ஃபேஷன் ஷோவில் நேற்று கலந்துகொண்டு ஷோஸ்டாப்பராக மேடையில் ஜொலித்திருக்கிறார்.Loading...

பெங்களூருவில் நேற்று நடந்த ’லகூன் ஃபேஷன்’ ஷோவில் பிரபலங்களின் காஸ்டியூம் டிசைனரான சிட்னி தன்னுடைய புது கலெக்‌ஷன்களை வெளியிட்டிருக்கிறார். இன்னும் அந்த ஆடை குறித்த தகவல்களை வெளியிடாத சிட்னி, ரைஸாவின் அணி வகுப்பை மட்டும் இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார். அதில் அழகியே ரைஸா.. என்று கூறிய பின் ஷோஸ்டாப்பராக மேடையை அசத்திவிடீர்கள் என்று கூறியுள்ளார். 
View this post on Instagram
 

#Showstopper dress in the making #sidneysladen #sidneysladencouture 💓❤💓


A post shared by Sidney sladen (@sidneysladen) on


அந்த ஷோவில் ரைஸா பேஸ்டல் பிங்க்கில் மிளிரும் கவுன் அணிந்துள்ளார். கண்களைக் கூசும் ஜமிக்கி ஒர்க்குகளுடன் அந்த கவுன் ஒற்றை ஸ்லீவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆடைக்கு ஏற்ப எந்தவித அணிகலன்கள் இன்றி ஒட்டியானம் மட்டும் அணிந்திருப்பது அந்த ஆடையை இன்னும் மெருகேற்றியது. மேக்அப்பும் சிம்பிளாகவே இருந்தது.
இதை சிட்னி ஷேர் செய்த அடுத்த நிமிடத்தில் ரைஸா ராக் ஸ்டார் சிட்னி என கமெண்டில் புகழ்ந்துள்ளார்.

ரைஸா சிட்னிக்காக மேடையில் அணிவகுப்பது முதல் முறையல்ல கடந்த ஆண்டு ஹரிஷ் கல்யணுடன் ஜோடியாக மேடையில் அணிவகுத்துள்ளார்.

இதையும் படிக்க :

பிறந்தநாள் வாழ்த்துகள் ஏஞ்சலினா... 20 டாட்டூஸ் சொல்லும் ரகசியம்!


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...