என் மனைவி மிகவும் ஹாட்... பிரியங்கா சோப்ராவை வர்ணிக்கும் கணவர் நிக் ஜோனஸ்..!

பிரியங்காவின் அருகில் சென்ற ஜோனஸை உதட்டில் முத்தமிட்ட காட்சி ஜோனஸின் பெண் ரசிகர் கூட்டத்தைப் பொறாமைப் பட வைத்தது.

news18
Updated: May 2, 2019, 4:30 PM IST
என் மனைவி மிகவும் ஹாட்... பிரியங்கா சோப்ராவை வர்ணிக்கும் கணவர் நிக் ஜோனஸ்..!
பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ்
news18
Updated: May 2, 2019, 4:30 PM IST
பில்போர்ட் இசை நிகழ்ச்சி நேற்று மாலை அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாசில் கிராண்ட் கார்டன் லேனில் நடைபெற்றது. இந்த விருது நிகழ்ச்சி இசைக் கலைஞர்களை கவுரவிப்பதற்காக நடத்தப்படுவது.

இந்நிகழ்ச்சியில் விருது வாங்கியவர்களைக் காட்டிலும் விருது நிகழ்ச்சியில் பங்கேற்ற நிக் ஜோனஸும், பிரியங்கா சோப்ரா ஜோடிதான் டாக் ஆஃப் தி டவுனாக உள்ளது.

காரணம் திருமணத்திற்குப் பிறகு ஆறு மாதங்களாக நிக் ஜோனஸ் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. பிரியங்கா நிக் ஜோனஸிடம் காதலில் விழுந்ததும் அவரின் பாட்டு பாடும் திறமையால்தான்.

ஜோனஸ் பிரதர்ஸ் என்னும் இவருடைய பிராண்ட் சமீபத்தில் ஆல்பம் வெளியிடப்போவதாக அறிவித்தது. அதன் பிறகு தற்போது இந்த பில்போர்ட் விருது நிகழ்ச்சியில் ஜோனஸ் பிரதர்ஸின் நிக் ஜோனஸ், ஜோயி ஜோனஸ், கெவின் ஜோனஸ் ஆகிய மூவரும் நேற்று ஸ்டன்னிங் கச்சேரி நிகழ்த்தினர்.

ஆறு மாதங்கள் கழித்து இந்த நிகழ்ச்சியை இவர்கள் அரங்கேற்றியது அவர்களின் ரசிகர்களிடையே பெரும் கூச்சலை ஏற்படுத்தியது. 
View this post on Instagram

 

A post shared by Nick Jonas (@nickjonas) on


இந்நிகழ்ச்சியில், பாட்டு பாடும் தன் கணவரை உற்சாகப்படுத்த பிரியங்கா சோப்ராவும் கலந்து கொண்டார். அதற்கு முன் இருவரும் தயாராகும் நிலையில் இருந்தபோது இருவரும் ஜோடிப் புகைப்படம் எடுத்துள்ளனர்.

அந்தப் புகைப்படங்களை நிக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் பிரியங்கா வெள்ளை நிற ஸ்லிட் கவுன் அணிந்து தேவதையாக மின்னுகிறார். அதற்கு ஏற்ற பர்ல்ஸ் அணிகலன்கள், லூஸி ஹேர் , சிம்பில் மேக்அப் என அசத்தலாக இருந்தார்.

அந்த ஃபோட்டோவை அப்லோட் செய்த நிக் தன் மனைவியை “ My wife is looking hot hotttt.... “ என கேப்ஷனில் குறிப்பிட்டு வர்ணித்துள்ளார்.
நிகழ்ச்சியில் நிக் ஜோனஸ் மேடையில் இறங்கி பாட்டுப்பாட வந்தபோது ரசிகர்கள் கூட்டம் கொந்தளித்துக் கத்தினர். அப்போது பிரியங்காவின் அருகில் சென்ற ஜோனஸை உதட்டில் முத்தமிட்ட காட்சி ஜோனஸின் பெண் ரசிகர் கூட்டத்தைப் பொறாமைப் பட வைத்தது.

இதற்கு முன் ஒரு மாலில் ஜோனஸ் பாட்டுப்பாடிக் கொண்டிருக்கும் போது ஒரு பெண் தன் உள்ளாடையைத் தூக்கி எறிந்து இது நிக் ஜோனஸிற்காக என்று கத்தினார்.

ஆனால் விபரீதமாக அது பிரியங்காவின் கையில் விழுந்தன. ஆனால் பிரியங்கா சிரித்தபடி அந்த உள்ளாடையை தூக்கியபடி “ நான் உங்கள் அன்பை ஜோனஸிடம் தெரியப்படுத்திவிடுகிறேன் ” என்று கூறினார்.
First published: May 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...