ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தீபாவளிக்கு புடவை இந்த கலரில் எடுங்க... எல்லாரும் உங்களைதான் பார்ப்பாங்க...

தீபாவளிக்கு புடவை இந்த கலரில் எடுங்க... எல்லாரும் உங்களைதான் பார்ப்பாங்க...

ப்ரியா பவானி சங்கர்

ப்ரியா பவானி சங்கர்

Diwali Styling Tips : ப்ரியா பவானி சங்கர் புடவையில் கோல்டன் நிற பார்டர் இருப்பதால் கோல்டன் நிறத்திலே நகைகளையும் தேர்ந்தெடுத்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தீபாவளிக்கு புடவை தான் எடுக்க வேண்டும் என்று ஒற்றை காலில் நிற்பவர்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த சிவப்பு நிற புடவையை தேர்வு செய்யலாம்.சிவப்பு நிறமானது பார்த்தவுடன் கண்களை கவரக்கூடிய நிறமாகும். நீங்கள் எந்த நிறமாக இருந்தாலும் சிவப்பு நிறம் உங்களை எடுப்பாக காட்டும்.

  சினிமா நடிகை ப்ரியா பவானி சங்கர் கட்டியிருக்கும் இந்த சிவப்பு புடவையில் கோல்டர் நிற பெரிய பார்டர் கொடுக்கப்பட்டுள்ளது. புடவையில் அதே துணியிலே பிளவுஸும் அணிந்துள்ளார். சிலருக்கு காண்ட்ராஸ்டாக பிளவுஸ் அணிய பிடிக்கும். சிவப்பு நிறத்திற்கு சாண்டல், பச்சை ஆகிய நிறங்களில் காண்ட்ராஸ்டாக பிளவுஸ் அணிந்தால் சூப்பர் லுக்கில் இருக்கும்.

  இந்த டிசைன் புடவை உங்களுக்கு பிடித்திருந்தால் இதே மாதிரி கடையில் வாங்குங்கள், இல்லையென்றால் சிவப்பு நிறத்தில் வேறு புதிய டிசைன் புடவைகளையும் தாராளமாக வாங்கலாம்.

  அணிகலன்கள் :

  ப்ரியா பவானி சங்கர் புடவையில் கோல்டன் நிற பார்டர் இருப்பதால் கோல்டன் நிறத்திலேயே நகைகளையும் தேர்ந்தெடுத்துள்ளார். நீங்கள் சிவப்பு நிறத்தில் கூட நகைகள் அணியலாம். காதில் போட்டிருக்கும் ஜிமிக்கியில் கற்கள் பதித்திருப்பதால் பார்க்கவே ஜொலிக்கிறது. நீங்களும் கற்கள் பதித்த ஜிமிக்கியை அணியலாம்.

  கையில் சிம்பிளான வளையல் ஒன்றை அணிந்துள்ளார். உங்களுக்கு நிறைய வளையல் போட பிடிக்கும் என்றால் சிவப்பு நிறத்திலே போட்டுக்கொள்ளலாம்.

  also read : இந்த தீபாவளிக்கு குர்தா வாங்க பிளான் பண்றீங்களா..? உங்களுக்கான லேட்டஸ்ட் குர்தா கலெக்‌ஷன்ஸ்..!

  தங்கம் போல் மின்னும் ப்ரியா பவானி சங்கரின் மேக்கப் ரகசியம் என்ன ?

  மேக்கப்பை பொறுத்தவரை ஃபவுண்டேஷன் போட்டு, புருவம் வரைந்து, மஸ்காரா, ஐ லைனர் போட்டுள்ளார். நியூட் ரெட் ஷேடில் லிப்ஸ்டிக் போட்டுள்ளார். சிவப்பு நிறத்தில் புடவை அணிந்திருப்பதால் அடிக்கின்ற சிவப்பு நிறத்தில் லிப் ஸ்டிக் போட வேண்டாம். லைட் கலர் லிப்ஸ்டிக் போட்டாலே உங்களின் லுக்கை எடுத்து காட்டும். ஹேர் ஸ்டைலை பொறுத்தவரை கேல்ஸ் செய்து சிம்பிளான ஹேர் ஸ்டைல் ஒன்றை செய்துள்ளார்.ப்ரியா பவானி சங்கர் எவ்வளவு அழகாக தயாராகி இருந்தாலும், அவருக்கு கூடுதல் அழகு சேர்த்தது அந்த சிவப்பு நிற பொட்டு தான்.

  தீபாவளிக்கு இதே லுக்கில் நீங்கள் தயாரானாலே போதும், உங்கள் அழகை எல்லாரும் புகழ்ந்து தள்ளிவிடுவார்கள்.

  Published by:Tamilmalar Natarajan
  First published:

  Tags: Deepavali, Diwali, Fashion, Fashion Tips