Home /News /lifestyle /

கர்ப்பிணி ஆலியா பட் அணிந்திருக்கும் இந்த உடை இத்தனை இலட்சமா..?

கர்ப்பிணி ஆலியா பட் அணிந்திருக்கும் இந்த உடை இத்தனை இலட்சமா..?

ஆலியா பட்

ஆலியா பட்

கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “எங்களுக்கு விரைவில் குழந்தை பிறக்கப்போகிறது” என பதிவிட்டிருந்தார். இந்த குட்நியூஸைக் கேட்டு நட்சத்திர தம்பதிகள் இருவருக்கும் பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பாலிவுட்டின் இளவரசியாக வலம் வருபவர் ஆலியா பட், இவர் இந்தி திரையுலகில் முன்னணி இயக்குநரும் தயாரிப்பாளருமான மகேஷ் பட்டின் மகள். இவரும் பாலிவுட்டின் பிரபலமான நட்சத்திர தம்பதிகளான ரிஷி கபூர் மற்றும் நீத்து சிங் ஜோடியின் மகனும், பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ் கபூரின் பேரனுமான ரன்பீர் கபூருக்கும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்தி திரையுலகில் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த இளம் ஜோடி, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்கு பிறகும் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இருவரும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தனர். இதனிடையே திருமணமான இரண்டே மாதத்தில் ஆலியா பட் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “எங்களுக்கு விரைவில் குழந்தை பிறக்கப்போகிறது” என பதிவிட்டிருந்தார். இந்த குட்நியூஸைக் கேட்டு நட்சத்திர தம்பதிகள் இருவருக்கும் பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்தனர்.

தற்போது திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து நடித்துள்ள 'பிரம்மாஸ்திரா' படம் செப்டம்பர் 9ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதால், இதற்கான புரோமோஷன் வேலைகளில் தீயாய் ஈடுபட்டு வருகின்றனர். கர்ப்ப காலத்திலும் பேஷன் ஐகானாக வலம் வரும் ஆலியா பட், விதவிதமான உடையில் வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் போட்டோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். பிரம்மாஸ்திரா பட புரோமோஷனுக்காக மும்பையில் உள்ள இல்லத்தில் இருந்து புறப்பட்ட ரன்பீர் கபூர் - ஆலியா பட் தம்பதியின் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த போட்டோவில் கர்ப்பிணியான ஆலியா பட், தனக்கு மிகவும் பொருத்தமாகவும், செளகரியமாகவும் இருக்கும் வகையில் பிங்க் நிற க்ரீப் டாப் அணிந்துள்ளார். அதற்கு மேட்சிங்காக கருப்பு நிற ஜெகிங்ஸ் மற்றும் கருப்பு நிற ஓவர் கோர்ட் அணிந்துள்ளார். கண்ணுக்கு பிரவுன் கலரையும், உதட்டிற்கு இயற்கையான தோற்றம் அளிக்கக்கூடிய லிப்ஸ்டிக் ஷேடையும் பயன்படுத்தி செம்ம சிம்பிளாக மேக்கப் செய்துள்ளார். லூஸ் ஹேர் ஸ்டைலில், கையில் மோதிரமும், காதில் சிறிய அளவிலான காதணிகளையும் மட்டுமே அணிந்திருக்கும் ஆலியா பட், நேர்த்தியாகவும் வசீகரமாகவும் காட்சியளிக்கிறார். 
View this post on Instagram

 

A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)


பேபி பம்ப் உடன் பிங்க நிற உடையில் ஆலியா கொடுத்துள்ள போஸ்களை பார்த்து அசத்து போன, இளம் பெண்கள் மற்றும் பேஷன் விரும்பிகள் அந்த டாப் எவ்வளவு விலை, எங்கு கிடைக்கும் என தீவிரமாக சர்ச் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆலியா பட் அணிந்திருக்கும் பிங்க் கலர் குஸ்ஸி வகை க்ரீப் டாப்பின் விலை $4100 அமெரிக்க டாலர்கள், அதாவது 3 லட்சத்து 27 ஆயிரத்து 173 ரூபாய் ஆகும்.

கர்ப்பிணிப் பெண்கள் புறக்கணிக்கக் கூடாத 9 ஆபத்து காரணிகள்..!

இதனை பிரபல ஆடை வடிவமைப்பாளரான அனிதா ஷ்ராஃப் அடாஜானியா ரஃபிள் சிஃப்பான் வகை துணியைக் கொண்டு சட்டை போன்ற தோற்றமளிக்கக்கூடிய வகையில் நேர்த்தியாக வடிவமைத்துள்ளார். இந்த காஸ்ட்லியான மெல்லிய பிங்க் க்ரீப் டாப்பில், இலை மறைக் காயாக பேபி பம்ப் தெரிய ஆலியா பட் கொடுத்துள்ள போஸ்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Alia Bhatt, Photo shoot

அடுத்த செய்தி