இந்திய திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் ஒருவரான பூஜா ஹெக்டே, எப்போதும் ஃபேஷனாக உடைகளை அணிவதில் கவனம் செலுத்துபவர். அழகான லெஹெங்காவாக இருந்தாலும் சரி, பிரமிக்க வைக்கும் புடவையாக இருந்தாலும் சரி, எந்த உடையையும் ஸ்டைலாக அணிவதற்கு முக்கியத்துவம் கொடுப்பவர் நடிகை பூஜா ஹெக்டே. நடிகையாக மிகவும் பிசியாக இருக்கும் பூஜா ஹெக்டே, ரன்வீர் சிங் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் சர்க்கஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் சல்மான் கானுடன் Kabhi Eid Kabhi Diwali திரைப்படத்தில் நடிக்கிறார்.
நாகரீகமான ஃபேஷன் மற்றும் ரிச் பர்சனாலிட்டி கொண்டவர்களில் தானும் ஒருவர் என்பதை மீண்டும் மீண்டும் பல சமயங்களில் நிரூபித்துள்ள பூஜா ஹெக்டே, மீண்டும் புதிய லுக் அடங்கிய போட்டோஷூட் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளார். சமீபத்தில் தன்னுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பேஜில் ஒரு புதிய போட்டோஷூட்டில் இருந்து நேர்த்தியான போஸ்களை வெளிப்படுத்தி போட்டோக்களை ஷேர் செய்து உள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.
மினி டிரஸ்கள், கோ-ஆர்ட் செட்கள் முதல் நவநாகரீக பேன்ட்சூட்டுகள் வரை பூஜா தனது தனிப்பட்ட அலமாரிகளில் பல கலெக்ஷன்களை வைத்திருந்தாலும் இவர் மிகவும் விரும்புவது பாரம்பரிய உடைகளையே. இந்த முறை இவர் பாரம்பரிய ஹேண்ட்கிராஃப்டட் புடவை மற்றும் ஸ்லீவ்லெஸ் அணிந்து ஸ்டைல் லுக்கில் அசத்தி இருக்கிறார்.
சமீபத்தில் பூஜா ஹெக்டே ஷேர் செய்துள்ள இந்த போட்டோக்களுக்கு கேப்ஷனாக "Bliss" என்று கொடுத்து உள்ளார். ஷேர் செய்துள்ள போட்டோ ஷூட்டில் நடிகை பூஜா க்ரீம் கலரில் ஜரி புட்டி சில்க் புடவை (Zari Buti Silk saree) அணிந்திருந்தார். இந்த புடவையின் சிறப்பம்சம் என்னவென்றால் நீலம், பச்சை, மஸ்ட்டர்ட் மற்றும் பிங்க் டோன்களில் கையால் வரையப்பட்ட கலம்காரி டிசைனை (hand-painted Kalamkari design) கொண்டது. தவிர கோல்டன் ஃப்ளவர் பிளாக் பிரிண்ட்ஸ்களையும், பார்டர்களில் கோட்டா பட்டி எம்பிராய்டரியையும் (gota patti embroidery) கொண்டுள்ளது.
இந்த அசத்தலான புடவையில் இருப்பது போன்றே கலம்காரி வேலைப்பாடுகள் மற்றும் ஜால் எம்பிராய்டரி ஸ்டச்சிங்களுடன் கூடிய V நெக்லைன் ஸ்லீவ்லெஸ் க்ரீம் பிளவுசை அணிந்து மிகவும் அழகாக காட்சி அளிக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.
ரோஜா இதழ் ஃபேஸ் பேக்... பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா சொல்லும் சம்மர் ஸ்கின் கேர் டிப்ஸ்..!
மேலும் இந்த போட்டோஷூட்டில் கலம்காரி புடவை மற்றும் ஸ்லீவ்லெஸ் ரவிக்கையுடன் குந்தன் வளையல்கள், அழகிய மோதிரங்கள், பீப்-டோ சாண்டில்ஸ் மற்றும் முத்துக்கள் பாதிக்கப்பட்ட கோல்ட் குந்தன் தோடுகளை அணிந்து மிக ரம்மியமாக இருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே. மேற்காணும் போட்டோவில் பூஜா ஹெக்டே உடுத்தி இருக்கும் அசத்தலான 6 கெஜ புடவை, பிரபல ஃபேஷன் டிசைனர் அர்ச்சனா ஜாஜுவின் கைவண்ணத்தால் உருவான அழகிய பதிப்பாகும். மேலும் இதன் விலை ரூ.1,08,999 மட்டுமே..!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.