தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான முகமூடி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்த படம் பெரிதாக வெற்றி பெறாததால் தமிழில் ராசியில்லாத நடிகை என ஓரங்கட்டப்பட்டார். அதன் பின்னர் டோலிவுட்டிற்கு சென்றவருக்கு அடுத்தடுத்து தொட்டதெல்லாம் ஹிட்டானது. ஜூனியர் NTR,அல்லு அர்ஜுன்,மகேஷ் பாபு என்று வரிசையாக பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டார்.
பூஜா ஹெக்டே நடிப்பில் சமீப காலமாக வெளியான அல வைகுந்தபுரமுலோ, மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர், ராதே ஷியாம் ஆகிய படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதனையடுத்து தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா, மகேஷ் பாபுவுடன் எஸ்எஸ்எம்பி 28 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூல் ரீதியிலும் மாஸ் சாதனை படைத்தது. இப்படி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே, கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ள போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
குறிப்பாக கேன்ஸ் விழாவில் பங்கேற்ற பூஜா ஹெக்டே இறகுகளால் ஆன வெள்ளை நிற ஃபெதர் உடையில் தோன்றி அனைவரது மனதையும் மயக்கியுள்ளார். முழுக்க முழுக்க வெள்ளை நிற இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ட்ராப்லெஸ் கவுனில் கிளாமராக தோன்றி ரசிகர்களை மூச்சடைக்க வைத்துள்ளார்.
ரெட் கார்ப்பெட்டில் கவர்ச்சி ததும்ப கலக்கலாக போஸ் கொடுத்துள்ள பூஜா ஹெக்டே, தனது ரசிகர்களுக்காக ஸ்பெஷல் போட்டோ ஷூட் ஒன்றையும் நடத்தியுள்ளார். இடையை வளைத்து நெளித்து இன்ஸ்டாகிராமில் பூஜா ஹெக்டே கொடுத்துள்ள ஒவ்வொரு போஸ்களும் லட்சக்கணக்கில் லைக்குகளை வாரிக்குவித்து வருகிறது.
தெற்கு பிரான்சின் கேன்ஸ் நகரில் நடைபெற்ற 75வது சர்வதேச திரைப்பட விழாவில் டாம் குரூஸ் நடித்த ‘டாப் கன்: மேவரிக்’ திரைப்படத்தின் முதல் காட்சியில் பூஜா ஹெக்டே பங்கேற்றார். அப்போது பூஜா ஹெக்டேவின் சிறகு உடையை பார்த்து மிரண்டு போன பத்திரிகையாளர்கள் அவரை போட்டோ எடுக்க குவிந்தனர். உடனே ரெட் கார்ப்பெட்டில் நின்றபடி விதவிதமாக பூஜா ஹெல்டேவும் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.
பூஜா ஹெக்டேவின் அழகை மெருகேற்றும் இந்த புடவையின் விலையை தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்..!
இந்த போட்டோக்களை எல்லாம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அவர், என்ன ஒருநாள் என்ற கேப்ஷனையும் கொடுத்துள்ளார். மேலும் #Crafted in India என்று ஒரு ஹேஷ்டேக்கைக் பூஜா ஹெக்டே பயன்படுத்தியுள்ளதை வைத்து பார்க்கும் போது, அந்த கவுன் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பதும் உறுதியாகியுள்ளது. இதன் மூலமாக இந்தியாவின் அழகு மற்றும் கலைநயத்தை உலக அரங்கில் பூஜா ஹேக்டே பறைசாற்றியுள்ளதாக வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.