Home /News /lifestyle /

ஸ்பெஷல்: மணமகன் மணம் கவரும் திருமண உடைகள் எவை தெரியுமா?

ஸ்பெஷல்: மணமகன் மணம் கவரும் திருமண உடைகள் எவை தெரியுமா?

திருமண உடைகள்

திருமண உடைகள்

grooms 2022 : 2022ம் ஆண்டில் அப்படி ட்ரெண்டாகி வரும் சில மணமகனுக்கான திருமண உடைகள் என்னென்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

கல்யாணம் என்றாலே மணப்பெண்ணின் ஏற்பாடுகள் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே களைக்கட்ட ஆரம்பித்து விடும். பேஷியல், த்ரெட்டிங், ஹேர் கேர், மெடிக்யூர், பெடிக்யூர் என பியூட்டி பார்லரே கதி என கிடப்பார்கள். அதேபோல் ஆடை, அணிகலன்கள் விஷயத்திலும் விதவிதமாய், வித்தியாசமாய் தேடி, தேடி வாங்குவார்கள். குறைந்தது 10 கடைகளையாவது ஏறி, இறங்கி பட்டுப்புடவை, லெஹங்கா என வாங்கி குவிப்பார்கள்.

ஆனால் மாப்பிள்ளைக்கோ அப்படி எந்த ஏற்பாடும் கிடையாது. ஒரே வகையான காஸ்ட்டியூம், நோ மேக்கப், வழக்கமான ஹேர் ஸ்டைல் என்ற நிலை தான் பின்பற்றப்பட்டு வந்தது. இப்போது அந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். காரணம் வளர்ந்து வரும் ஆன்லைன் உலகில் மணப்பெண்ணைப் போலவே தன்னையும் மிடுக்கான தோற்றத்தில் தனித்துவமாக காட்டுவதை ஆண்களும் விரும்புகின்றனர்.

அதனால் தான் பாரம்பரிய திருமண உடைகள் மட்டுமில்லாது, விதவிதமான டிசைன்களில், ஆடம்பர வேலைப்பாடுகளுடன் கூடிய வெரைட்டியான உடைகளை தேடி, தேடி வாங்க ஆரம்பித்துள்ளனர்.

2022ம் ஆண்டில் அப்படி ட்ரெண்டாகி வரும் சில மணமகனுக்கான திருமண உடைகள் என்னென்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

வெள்ளை மீதான காதல் :வண்ண, வண்ணமாய் பல கலர்களில் உடைகள் வந்தாலும், மணமகனாக மாறப்போகும் ஆணுக்கு என்றுமே வெள்ளை நிறத்தின் மீதான காதல் குறைவது கிடையாது. சிக்கன்காரி எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் கொண்ட வெள்ளை நிற குர்தா மணமகனுக்கு ஏற்றது என்கின்றனர் ஆடை வடிவமைப்பாளர்கள். அதற்கு பொருத்தமாக கலர்ஃபுல்லான துப்பட்டா, அதிக அளவில் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட சால்வை அல்லது முத்து நெக்லஸ் அணிந்தாலே போதும் மாப்பிள்ளைக்கான ராயல் லுக் கிடைத்துவிடும்.

எம்ப்ராய்டரி செய்யப்பட்ட பிளேசர் :கண்ணை பறிக்கும் கலரில் ஜிகுஜிகு குர்தா அல்லது ஷெர்வானியை தேர்வு செய்வதற்கு பதிலாக கவர்ச்சிகரமான ஒரு பிளைன் குர்தாவையும், அதற்கு மேட்சிங்காக எம்ராய்ட்ரி வேலைப்பாடுகள் நிறைந்த பிளேசரையும் அணிந்து பாருங்கள். திருமண மண்டபத்தில் இருக்கும் அனைவரது பார்வையும் மாப்பிள்ளையான உங்கள் மேல் தான் இருக்கும்.

பலவிதமான பிளைன் குர்தாவில், விதவிதமான எம்ராய்ட்ரி வேலைப்பாடுகள் நிறைந்த பிளேசரை அணிந்து பார்த்து, அதில் உங்களுக்கு பொருத்தமான ஒன்றை தேர்வு செய்யுங்கள். அந்த கவர்ச்சிகரமான உடை, உங்களுடைய திருமண நாளை என்றுமே மறக்க முடியாத அற்புதமான நாளாக மாற்றிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

புளோரல் டிசைன்:கண்ணை கவரும் பளீச் வண்ணத்திலான குர்தாவுக்கு பதிலாக, ஆர்ப்பாட்டம் இல்லாத வெளிர் நிற குர்தாவையும், அதற்கு மேல் புளோரல் டிசைன் அச்சிடப்பட்ட வண்ணமயமான ஜாக்கெட்டையும் அணிந்தால், மணமகனின் கம்பீரமும், அழகும் பல மடங்கு அதிகரிக்கும். உதாரணமாக பழுப்பு நிற பூக்கள் டிசைனுடன் கூடிய பவள நிற உடைகளை தேர்வு செய்யலாம்.

அலங்கார காலணிகள் எதுக்கு; ஸ்னீக்கர் போதும் கலக்கு:மணமகனின் உடை மற்றும் மேக்கப்பை போலவே திருமணத்தில் காலணிகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. மணப்பெண்கள் மட்டுமல்ல மணமகன்களும் தங்களது திருமண காலணிகளை தேர்வு செய்வதில் தனிக்கவனம் செலுத்துகின்றனர். இப்போதெல்லாம் மணமகன்கள் தங்களது ரசனையைப் பிரதிபலிக்கும் வகையிலான காலணிகளை தேர்த்தெடுப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

தற்போது வழக்கமான அலங்கரிக்கப்பட்ட காலணிகளை விட ஸ்னீக்கர் மற்றும் ஷூக்கள் மீது மணமகன்களின் கவனம் திரும்பியுள்ளது. அனைவரும் எதிர்பார்க்க கூடிய மொக்ரி வகை காலணிகளுக்கு பதிலாக, பெரிய ஸ்னீக்கர்கள் அல்லது கண்ணை கவரும் டிசைனர் ஷூக்களை அணிவது மணமகனின் அழகை மேலும் கூட்டிக்காட்ட உதவும்.

செளகரியமான சூட்கள்:திருமணத்திற்காக பல ஆயிரங்களை செலவு செய்து வாங்கும் உங்களுடைய திருமண உடை, அதன் பின்னர் காலம் முழுவதும் அலமாரியிலோ, பீரோவிலோ கிடைப்பதை நீங்கள் விரும்புவீர்களா?. சமீப காலமாக விலையுயர்ந்த ஆடம்பர உடைகளை வாங்கிக் குவிப்பதற்கு பதிலாக செளகரியமான ஆடைகளை வாங்குவதை தான் மணமகன்கள் அதிகம் விரும்புகின்றனர்.

தங்களது திருமண நாளான்று அணிய, சாதாரணமான கைத்தறி பேண்ட்கள், பட்டு பின்னல்கள் கொண்ட குர்தா, மெல்லிய தோலால் செய்யப்பட்ட காலணிகள், இறுக்கமில்லாத லேசான பேண்ட் ஆகியவையே மணமகன்களின் புதிய திருமண உடைக்கான தேர்வாக உள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Grooming tips, Marriage

அடுத்த செய்தி