’இன்னும் வரதட்சனை கொடுமை தீரவில்லை’ : புதிய பிரைடல் கலெக்‌ஷன்ஸ் ஃபோட்டோஷூட் மூலம் வெளிப்படுத்திய ஃபேஷன் டிசைனர்..!

’இன்னும் வரதட்சனை கொடுமை தீரவில்லை’ : புதிய பிரைடல் கலெக்‌ஷன்ஸ் ஃபோட்டோஷூட் மூலம் வெளிப்படுத்திய ஃபேஷன் டிசைனர்..!

அலி ஸீஷான்

சமூக நோக்கத்தோடு எடுக்கப்பட்ட இந்த ஃபோட்டோஷூட் மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

 • Share this:
  பாகிஸ்தான் ஃபேஷன் டிசைனரின் சமீபத்திய ஃபோட்டோஷூட் ஃபேஷன் துறையில் பேசுபொருளாகியுள்ளது. பாகிஸ்தான் ஃபேஷன் டிசைனரான அலி ஸீஷான் பிரைடல் ஆடைகளை வடிவமைப்பதில் தனித்துவம் பெற்றவர்.

  சமீபத்தில் இந்த ஆண்டிற்கான பிரைடல் கலெக்‌ஷன்களை புதிதான அறிமுகப்படுத்தியுள்ளார். அதில் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் வரதட்சனை கலாச்சாரத்தின் விளிம்பு நிலையை உணர்த்தும் விதமாக அந்த ஃபோட்டோஷூட்டை நிகழ்த்தியுள்ளார்.

  பொதுவாக புதிய ஆடைகளை அறிமுகப்படுத்தும் ஃபேஷன் டிசைனர்கள் ஃபோட்டோஷூட்ஸ் நடத்தும்போது மாடல் அழகிகளை அலங்கரித்து சில போஸ்களை கொடுக்கச் செய்து எடுப்பது வழக்கம். அதில் அவர்களுடைய ஆடை மற்றும் வேலைப்பாடுகளை பிரதானமாகக் காட்டுவதே முக்கிய நோக்கமாக இருக்கும்.  ஆனால் இந்த ஃபோட்டோஷூட்டில் திருமண ஆடையின் வேலைபாடுகளை சொல்வது மட்டுமன்றி அந்த திருமணத்தில் நடக்கும் வரதட்சனைக் கொடுமைகளையும் காட்டும் விதமாக சித்தரித்துள்ளார். அதோடு வரதட்சனையை வேண்டாம் என சொல்லுங்கள் என்ற வாக்கியத்தோடு அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
  சிவப்பு நிறத்தில் பிரமாண்ட வேலைபாடுகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் அந்த ஆடையை அணிந்துள்ள மாடல் சிரித்த முகமன்றி கண்ணீருடன் நிற்கிறார். அதோடு கையில் வரதட்சனைக்காக கொடுக்கப்பட்ட பொருட்களை கட்டை வண்டியில் வைத்து அதை தாங்கி பிடித்துக்கொண்டு நின்றவாறு சோக முகத்துடன் போஸ் கொடுத்துள்ளார். அந்த வண்டிக்கு மேல் மணமகன் அமர்ந்துகொண்டிருக்கிறார்.
  இந்த காட்சிகளை ஃபோட்டோஷூட் செய்தது மட்டுமன்றி வீடியோவாகவும் ஷேர் செய்துள்ளார். இப்படி சமூக நோக்கத்தோடு எடுக்கப்பட்ட இந்த ஃபோட்டோஷூட் மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. அதோடு காலங்கள் மாறினாலும் இதுபோன்ற விஷயங்கள் மாறாமல் இன்னும் நிகழ்ந்துகொண்டிருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது. ஃபேஷன் டிசைனரின் இந்த தனித்துவ யோசனை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

   

   
  Published by:Sivaranjani E
  First published: