Home /News /lifestyle /

உள்ளாடை வெளியே தெரிந்தால் அவமானமல்ல..! - நடிகை ராதிகா மதன்

உள்ளாடை வெளியே தெரிந்தால் அவமானமல்ல..! - நடிகை ராதிகா மதன்

ராதிகா மதன்

ராதிகா மதன்

கண் இமைக்காமல் பார்ப்பது, மேலும் கீழும் பார்ப்பது, தொடுவது என பொதுவெளியில் , பேருந்துகளில், ஆட்டோக்களில் பயணம் செய்யும் பெண்கள் தினம் தினம் அனுபவிக்கின்றனர்.

    ’பெண்களின் உள்ளாடை வெளியே தெரிந்தாலே அவள் இப்படிப்பட்டவள்தான் என பேசும் மக்கள் இன்று வரையிலும் இருப்பது கவலை அளிக்கிறது’ என டெலிவிஷன் நாயகி ராதிகா மதன் தெரிவித்துள்ளார். இவர் சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித் திரையிலும் நடித்துள்ளார்.

    MTV பெண்களின் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரிவது அவமானமல்ல. அதுவும் சாதாரண நிகழ்வுதான் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக "Baar Bra Dekho" என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. அதில் கலந்து கொண்டு பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார் நடிகை ராதிகா மதன்.

    மேலும் பேசிய அவர் “கண் இமைக்காமல் பார்ப்பது, மேலும் கீழும் பார்ப்பது, தொடுவது என பொதுவெளியில் , பேருந்துகளில், ஆட்டோக்களில் பயணம் செய்யும் பெண்கள் தினம் தினம்  கொடுமையை அனுபவிக்கின்றனர். இந்நிலையில் அவளின் பிரா ஸ்ராப் பொதுவெளியில் அவளுக்கே தெரியாமல் வெளியே தெரிந்தாலும் அந்த பெண்ணை தவறாகப் பேசும் மக்களும், அவள் இப்படித்தான் என தீர்மானிக்கும் மக்களும்தான் அதிகம் இருக்கின்றனர்.

    ஆடைகள் ஒருவரை தீர்மானிப்பதில்லை. ஒரு பெண்ணுக்கு எந்த உடை அணிய விருப்பம் இருக்கிறதோ அதை அணியவிடுங்கள். இந்த விழிப்புணர்வு மூலம் பெண்கள் கொஞ்சமேனும் சமூகத்தில் அவர்களுடைய சௌகரியத்தோடு பயணிக்கட்டும். பிரா ஸ்ட்ராப்புகள் வெளியே தெரிவது அவமானமல்ல என்பதை உறைக்குமாறு சொல்லுங்கள் “ என்று பேசியுள்ளார்.

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி