வெற்றியை அடையப் பேராசை வேண்டும்: மிஸ் இந்தியா பட்டம் வென்ற சுமன் ராவ்

பாலின பேதத்திற்கு முக்கிய ஆணி வேர் மனிதர்களுடைய மன நிலைதான். அதை முதலில் மாற்ற வேண்டும்.

news18
Updated: June 19, 2019, 7:00 PM IST
வெற்றியை அடையப் பேராசை வேண்டும்: மிஸ் இந்தியா பட்டம் வென்ற சுமன் ராவ்
மிஸ் இந்தியா பட்டம் வென்ற சுமன் ராவோ
news18
Updated: June 19, 2019, 7:00 PM IST
ஃபெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற சுமன் ராவ், பாலின பேதத்தை உடைக்கும் நோக்கில் பயணம் மேற்கொள்ளப் போவதாகக் கூறியுள்ளார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயதான சுமன், தான் கண்ட கனவை நிஜமாக்கியதே  என்னுடைய இலக்கை எட்ட வேண்டும் என்பதற்காகத்தான் எனப் பேட்டியளித்துள்ளார். “ நான் தற்போது வரை சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் வெற்றியை மட்டுமே எதிர்பார்த்து முழு கவனத்தைச் செலுத்தினேன். அதற்கான பலனை இன்று அனுபவிக்கிறேன் என ஐ.ஏ.என்.எஸ்ஸிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

உங்களின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்ற கேள்விக்கு “நான் பாலின சமத்துவத்தை நோக்கிப் பயணிக்கவுள்ளேன். அதற்கு நான் வளர்ந்த என் சமூகமே காரணம். பாலின பேதத்தால் பல தடைகளை எதிர்கொண்டிருக்கிறேன். மக்களுக்குப் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வைப் பயிற்றுவிக்கப் போகிறேன்” என நேர்காணலில் கூறியுள்ளார்.


மேலும் “ இந்த பாலின பேதத்திற்கு முக்கிய ஆணி வேர் மனிதர்களுடைய மன நிலைதான். அதை முதலில் மாற்ற வேண்டும். மனம் சரியான பாதையில் பயணித்தால் சமூகத்தில் பிரதிபலிக்கும் என சார்டட் அக்கவுண்ட் மாணவியான சுமன் கூறுகிறார்.

அதுமட்டுமன்றி வாழ்க்கையில் வளர ஆசைகளை வெல்ல முயற்சி முக்கியம் , வெற்றியை அடையப் பேராசைப் பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

தன் குடும்பம் தனக்கான எல்லா சுதந்திரத்தையும் அளித்ததால்தான் இந்த வெற்றியை எட்ட முடிந்தது என்று தன் வெற்றிக்கான காரணத்தையும் பகிர்ந்துள்ளார்.

Loading...

தற்போது மாடலிங் துறையில் இருக்கும் சுமனுக்கு படத்தில் நடிக்கும் ஆசை இருக்கிறதாம். அதுவும் ஐஸ்வர்யா ராயின் வாழ்க்கையை நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது என்று கூறியுள்ளார்.

அடுத்ததாகத் தாய்லாந்தில் டிசம்பர் ஏழாம் தேதி நடைபெறவுள்ள உலக அழகி 2019 பட்டத்தைக் கைப்பற்ற மும்முர முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...