மாநில அழகி போட்டி முதல் சர்வதேச அழகிப் போட்டி வரை, இந்த நிகழ்வுகள் அனைத்துமே மிகப்பெரிய அளவில் கோலாகலமாக நடைபெறும். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மிஸ் இந்தியா போட்டி மாடலிங், ஃபேஷன் மற்றும் பொதுழுபோக்கு துறையில் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும். மிஸ் இந்தியா போட்டியில் தேர்வானவர்கள் தான் உலக அழகி மற்றும் பிரபஞ்ச அழகி ஆகிய போட்டிகளில் கலந்துகொள்ள முடியும். இந்திய அழகியாக தேர்வு செய்யப்படுபவர் யாரென்பது எப்பொழுதுமே கொஞ்சம் பரபரப்பாகவே வைத்திருக்கும்!
அதே போலத்தான் கடந்த வாரம் முழுவதுமே நட்சத்திரங்கள் சூழ நடைபெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா நிகழ்வு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. மும்பையில் இருக்கும் ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் மிஸ் இந்தியா போட்டி நடைப்பெற்றது. VLCC நிறுவனத்துடன் செஃபோரா, மோஜ் மற்றும் ரஜினிகந்தா பேர்ல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கிய ஃபெமினா மிஸ் இந்தியா 2022 ஆம் ஆண்டுக்கான அழகிப் போட்டி கடந்த ஞாயிறு இரவு நடந்தது. அதில் சினி ஷெட்டி மிஸ் இந்தியா 2022 ஆக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த ஆண்டு இந்தியா அழகியாக முடிசூட்டப்பட்டவர், கர்நாடகாவை சேர்ந்த21 வயதான சினி ஷெட்டி மும்பையில் பிறந்து வளர்ந்தவர், ஆனால் இவரது பூர்வீகம் கர்நாடகா மாநிலமாகும். அழகு மட்டுமே பிரதானம் என்ற நிலை மாறி, வெவ்வேறு துறைகளில் சாதனை செய்தவர்களும் மாடலிங் மற்றும் ஃபேஷன் துறையில் தங்கள் முத்திரை பதித்து வருகின்றனர். அந்த வரிசையில், சினி ஷெட்டி அக்கவுண்டிங் மற்றும் பைனான்ஸ்ல் பட்டப்படிப்பு முடித்தவர். அதுமட்டுமில்லாமல் கணக்கியல் படிப்பில் புரோஃபஷனல் கோர்ஸ் ஆக இருக்கும் CFA படிப்பையும் தற்போது படித்து வருகிறார். இவர் ஒரு பரதநாட்டிய கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
also read : சாய் பல்லவி முன்னணி கேரக்டரில் நடிக்கும் கார்கி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரூபல் ஷீகாவத் ஃபெமினா மிஸ் இந்தியாவின் முதல் ரன்னர் அப்பாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தனது மாநிலத்தின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்பட்டு வரும் பழக்கங்கள் ஆகியவற்றை பெருமிதத்தோடு முன்னிலைப்படுத்துவதாக அவர் பகிர்ந்திருந்தார். வாழ்க்கை மீது பெரிய ஆர்வம் கொண்டதாகவும், பலவித கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். நடனம் நடிப்பும் ஓவியம் மற்றும் பார்வையுடன் விளையாடுவது ஆகியவற்றில் ஆர்வம் இருப்பதாக ரூபல் கூறியிருந்தார்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷினாடா சௌஹான் ஃபெமினா மிஸ் இந்தியா 2022 ஆம் ஆண்டு போட்டியில் இரண்டாவது ரன்னர் அப்பாக தேர்வு செய்யப்பட்டார். 21 வயதான ஷினாடா படிப்பில் கெட்டிக்காரர் மற்றும் தலைமை பொறுப்பை ஏற்பது மிகவும் விருப்பம் என்று தெரிவித்திருந்தார். வெளிப்படையாக பழகும் ஷினாடாவுக்கு இசை மிகவும் விருப்பம்.
மாடல் அழகி, பேஷன் ஐகான் மற்றும் பாலிவுட் நடிகையான நேகா துபியா தற்போது மிஸ் இந்தியா அழகிகளின் மென்டராக செயல்பட்டு வருகிறார். 20 ஆண்டுகளுக்கு முன் இவர் மிஸ் இந்தியா போட்டியில் வென்றிருக்கிறார். அதை நினைவு கூர்ந்து அவரை சிறப்பிக்கும் வகையில், சிறப்புக் கொண்டாட்டம் நேற்றைய நிகழ்ச்சியின் ஹைலைட்டாக இருந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.