Home /News /lifestyle /

கொரோனா அச்சுறுத்தல்: ஒத்திவைக்கப்பட்டது மெட் காலா..!

கொரோனா அச்சுறுத்தல்: ஒத்திவைக்கப்பட்டது மெட் காலா..!

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

மே மாதம் 15 வரையிலான அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில் மெட் காலாவும் அடக்கம்.

    மெட் காலா நிகழ்ச்சி சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என உலகம் முழுவதிலும் இருக்கும் பிரபலங்களை ஒன்றினைக்கும் நிகழ்ச்சியாகும்.

    இதில் இந்தியாவிலிருந்து தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா இருவரும் கலந்துகொள்வார்கள். கடந்த ஆண்டு பிரியங்கா சோப்ராவும், நிக் ஜோனசும் கலந்துகொண்ட புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது.

    நியூயார்க்கில் மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ் ஆடை நிறுவனத்திற்கு நிதி திரட்டவே இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த மெட் காலா நிகழ்ச்சியானது ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதல் திங்களன்று நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மே 4 ஆம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக வோக் இதழ் கூறியுள்ளது.

    இதுகுறித்து மெட் காலாவின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், ” மே மாதம் 15 வரையிலான அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில் மெட் காலா நிகழ்ச்சியும் அடங்கும்” என கூறியுள்ளார்.

    நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் “ நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் அறிவிப்புப் படி ஓரிடத்தில் 50 பேர் வரை கூட்டமாகக் கூடியிருக்கக் கூடாது என்ற காரணத்தால் இதை ஒத்தி வைக்கிறோம்” என்று கூறியுள்ளது.

    படிக்க :

    கொரோனா வைரஸ் கர்ப்பிணிகளைத் தாக்குமா..? பாதுகாப்பாக இருப்பது எப்படி..?

    கொரோனா பரவுதல் அச்சம் : உடலுறவில் ஈடுபடலாமா..? கருத்தரித்தல் நிகழலாமா..?
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி