ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஃபயர் கட்டிங்.. மேன் பன் - விதவிதமான ஹேர்ஸ்டைலில் ரவுசு கட்டும் இளசுகள்

ஃபயர் கட்டிங்.. மேன் பன் - விதவிதமான ஹேர்ஸ்டைலில் ரவுசு கட்டும் இளசுகள்

முடி அலங்காரத்தில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..

முடி அலங்காரத்தில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..

தல தோனியின் பழைய ஸ்டைலில் முடியை வளர்த்து, வித விதமாக கொண்டைப் போட்டுக் கொள்வதுதான், இந்த மேன் பன்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  குஜராத்தில் முடிவெட்டும்போது, இளைஞர் ஒருவர் தலையில் தீப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்றைய இளைஞர்கள் விரும்பும்  சிகை அலங்காரங்கள் பற்றிய தொகுப்பு தான் இது.

  அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது ஆண்டாண்டு காலமாக நாம் பயன்படுத்தி வரும் பழமொழி.அந்த முகத்தை அழகாகக் காட்டுவதில் முக்கிய பங்கு வகிப்பது, சிகை அலங்காரம்.அதாவது ஹேர் ஸ்டைல்.தலைமுடியை ஆயிரம் விதமாக அலங்கரித்துக் கொள்ளும் பெண்களுக்கு இணையாக, ஆண்களுக்கும் வந்துவிட்டன ஏராளமான அலங்காரங்கள்.

  பல பத்தாண்டுகளுக்கு முன்பு ஃபங் என்ற சிகை அலங்காரத்தையே பெரிதும் நம்பியிருந்தார்கள் அன்றைய இளைஞர்கள்.ஆனால், இன்றோ கோரை முடி, சுருட்டை முடி என எதுவாக இருந்தாலும், முக அமைப்புக்கு ஏற்றவாறு வந்துவிட்டன ஹேர் கட்டிங் முறைகள்.அந்த வரிசையில் பெரும்பாலான இளைஞர்கள் இப்போது அதிகம் விரும்புவது அண்டர்கட் அலங்காரம்தான்.

  Read More : ஆண்கள் தினந்தோறும் செய்ய வேண்டிய 4 அசத்தலான அழகு பராமரிப்பு முறைகள்!

  கத்தரிக்கோலையும், சீப்பையும் வைத்து காலங்காலமாக வெட்டி வரும் போலீஸ் கட்டிங்கில், சற்று அதிகமாக ட்ரிம்மர் மூலம் அலங்கரிக்கப்படுகிறது அண்டர் கட் முறை.முடி அடர்த்தியாக இல்லையே என கவலைப்படும் இளைஞர்களுக்கான வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது, இந்த அண்டர்கட்.

  அலுவலகப் பணியில் இருப்பவர்கள் கூட அதிகம் தேர்ந்தெடுக்கும் இந்த முறைக்கு இருக்கும் மற்றொரு பெயர் சைட் பேட்.இதற்கு அப்படியே நேர் எதிராக நீளமாக தலைமுடியை வளர்த்து, முறைப்படுத்தி வெட்டிக் கொள்வதற்கு பெயர் மேன் பன்.

  அதாவது, தல தோனியின் பழைய ஸ்டைலில் முடியை வளர்த்து, வித விதமாக கொண்டைப் போட்டுக் கொள்வதுதான், இந்த மேன் பன்.இதற்கு வெறும் கத்தரிக்கோல் போதும் என்றாலும், இதிலும் சில டிசைன்களை வரைய, டிரிம்மரும் பயன்படுத்துகிறார்கள் சலூன் கடைக்காரர்கள்.

  இவ்வாறு முடியை நீளமாக வளர்த்து, அதில் பல வண்ணங்களை பூசிக் கொண்டு வலம் வந்தார்கள் புள்ளிங்கோ என்ற பெயரில் இளைஞர்கள்.புள்ளிங்கோ ஸ்டைலைப் போல, பாக்ஸ் கட்டிங், ஒன்சைட் கட்டிங், வீ கட்டிங், ஸ்பைக் கட்டிங் என பல பெயர்களில் பரவியது சிகை அலங்காரம்.

  அந்த வரிசையில், இன்றைய இளைஞர்களிடையே டிரெண்டாகியிருப்பது ஃபயர் கட்டிங் என்ற முறையிலான சிகை அலங்காரம்.தலைமுடியில் நெருப்பை பற்றவைத்து, முடிவெட்டிக் கொள்ளும் முறைதான், இந்த ஃபயர் கட்டிங்.முடியை வெட்டுவதற்கு தண்ணீர் தெளிப்பதற்கு பதிலாக, ரசாயனக் கலவையைத் தெளித்து தீவைக்கிறார்கள் சலூன் கடைக்காரர்கள்.

  சில நொடிகளில் தீ அணைந்தபிறகு, சீப்பையும் கத்தரிக்கோலையும் வைத்து சரி செய்யப்படுகிறது தலைமுடி.இதுபோன்று அலங்காரம் செய்வதற்காக, ஆர்வக் கோளாறில் சலூனுக்குச் சென்று, மருத்துவமனையில் படுத்திருக்கிறார் குஜராத்தைச் சேர்ந்த இளைஞர்.

  Read More : தலைமுடியில் எண்ணெய் பிசுக்கு அதிகமாக என்ன காரணம்..? தடுக்கும் 7 வழிகள் இதோ...

  வழக்கமாக ஓரிரு நொடிகளில் அணைந்துவிடும் தீ, வைக்கோல் போரில் வைத்ததைப் போல, மளமளவென எரியத் தொடங்கியது.காரணம் என்னவென்று அறியாமல் சலூன் கடைக்காரர் முழிக்க, அலறியடித்து ஓடினார் குஜராத் இளைஞர்.

  முடிவெட்டும்போது, கத்தரிக்கோலும், பிளேடும் பட்டு காதுகளும், கழுத்துகளும்தான் காயம்படுவது வழக்கம்.ஆனால், ஆர்வக்கோளாறு காரணமாக, தலையே காயம்பட்டிருக்கிறது, இதுபோன்று பல இளைஞர்களுக்கு.எந்த முறையில் தலைமுடியை அலங்கரித்துக் கொண்டாலும், அடுத்தவர்கள் முகம் சுழிக்காத வகையிலும், நம் உடல் காயம்படாமலும் இருப்பதே சிறந்த முறை.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Explainer, Hair care