ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பெண்களைப் போல் ஆண்களுக்கும் ’கிராப் டாப்’ - டிரெண்டாகும் புது ஸ்டைல்..!

பெண்களைப் போல் ஆண்களுக்கும் ’கிராப் டாப்’ - டிரெண்டாகும் புது ஸ்டைல்..!

கிராப் டாப்

கிராப் டாப்

கிராப் டாப்ஸ்கள் பெண்களுக்கான பேஷனாக மாறுவதற்கு முன்னதாவே ஆண்களின் விருப்பமான ஆடையாக இருந்துள்ளன. எனவே, பழைய பேஷன் ட்ரெண்ட் தற்போது மீண்டும் ஒரு புதுப்புப்புடன் சந்தைக்கு வந்துள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஆண்கள் மற்றும் பெண்களை கவரும் வகையில் பேஷன் உலகில் எண்ணற்ற ஆடை அலங்காரங்கள் ட்ரெண்டாகி வருகின்றன. அவ்வப்போது பெண்களுக்கு பலவித புதுப்புது ஆடை வடிவமைப்புகள் வருவதுண்டு. அதேபோல ஆண்களுக்கும் பலவித பேஷன்கள் ட்ரெண்டாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது வெயில் காலத்திற்கு ஏற்றாற்போல கிராப் டாப்ஸ் என்ற ஆடை ட்ரெண்டாகி வருகிறது.

இந்த டாப்ஸ் பெரும்பாலும் பெண்களுக்கான விருப்பங்களில் ஒன்றாக இருக்கும். ஆனால் இது போன்ற கிராப் டாப்ஸ்கள் பெண்களுக்கான பேஷனாக மாறுவதற்கு முன்னதாவே ஆண்களின் ஆடை விருப்பங்களாக இருந்துள்ளன. எனவே, பழைய பேஷன் ட்ரெண்ட் தற்போது மீண்டும் ஒரு புதுப்புப்புடன் சந்தைக்கு வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

சமீபத்தில் புவேர்ட்டோ ரிக்கன் குழுவின் ராப்பர் பேட் பன்னி, கிராப் டாப் அணிந்துபடி கண்ணாடி முன்பு நின்று செல்பி எடுத்துக்கொண்டார். உண்மையில் இந்த டாப்ஸ் முன்பு உபயோகத்தில் இருந்ததா என்றால், நடிகர் மார்க் வால்ல்பெர்க் 90 களில் சூப்பர்மாடல் கேட் மோஸுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் ஒரு எடுத்துக்காட்டு. அதில் அந்த நடிகர் கிராப் டாப் அணிந்திருப்பதைக் காணலாம். அதேபோல, 1984 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படமான நைட்மேர் ஆன் எல்ம் ஸ்ட்ரீட்டில் நடித்திருந்த ஜானி டெப் கிராப் செய்யப்பட்ட புட்பால் டீ-ஷர்ட்-டை அணிந்திருப்பார்.

அதேபோல மிகவும் பிரபலமான மற்றும் புகழ்பெற்ற பாடகர் பிரின்ஸ் 80 மற்றும் 90 களில் தனது மேடை நிகழ்ச்சிகளின் போது கிராப் டாப்ஸ்களை தான் அணிந்து அரகேற்றம் செய்வார். அந்த காலத்தில் இவர்கள் தான் ஆண்கள் நாகரீகத்தை மறுவரையறை செய்து, தங்கள் ஸ்டைலுடன் ஒரு புரட்சியைக் கொண்டு வந்தனர். அது அன்றைய காலத்தில் மில்லியன் கணக்கானவர்களைப் பின்பற்ற செய்தது. சரி, இப்பொது 2021ம் ஆண்டின் பேஷன் ட்ரெண்டுக்கு வருவோம், மீண்டும் இந்த ட்ரண்டை உருவாக்க இன்ஸ்டாகிராமில் ஆண் பேஷன் இன்ப்ளூயன்ஸர்கள் மற்றும் மாடல்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
 
View this post on Instagram

 

A post shared by @badbunnyprஇது குறித்து, வடிவமைப்பாளர் அன்விதா சர்மா கூறுவதாவது, " கிராப் டாப்ஸ் தற்போது பிரபலமாக உள்ளது. ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, அதை சரியான ஸ்டைலில் அணிவது எப்படி என்று தெரிந்தால், அவர்கள் தங்கள் தோற்றத்தின் மூலம் எளிதில் பிறரை கவர முடியும். கோடையில் கிராப் டாப் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்பதை அதிகமான ஆண்கள் விரும்புவதை நான் தனிப்பட்ட முறையில் விரும்புகிறேன். அவை குளிர்ச்சியாகவும் நவநாகரீகமாகவும் இருக்கின்றன மேலும் ஸ்கின் ஷோ ஆண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது” என்று கூறியுள்ளார்.

இந்த சீப்பைக் கொண்டு தலை வாரினால் முடி அடர்த்தியாக வளருமாம்..! மன அழுத்தத்தைக் கூட போக்கும்..!

இதையடுத்து ஒப்பனையாளர் விக்ரம் சேத் என்பவர் கூறுகளையில்,"நான் தனிப்பட்ட முறையில் ஆண்களுக்கான கிராப் டாப்ஸ்களுக்கு பெரிய ரசிகர். ஆனால் இது எல்லா உடல் அமைப்புகளுக்கும் அழகாக இருக்காது. உங்கள் வயிற்று பகுதி தொப்பையுடன் இருந்தால் இந்த ஆடை உங்களுக்கு கட்டாயம் செட் ஆகாது" என்று கூறினார். இந்திய வடிவமைப்பாளர் நிதீஷ் அரோரா தனது புதிய தொகுப்பில் ஆண்களுக்கான கிராப் டாப்பை அணிந்து ஒரு புதிய பேஷனை உருவாக்கியுள்ளார்.
 
View this post on Instagram

 

A post shared by | Alter-X | (@alterx.x)இதனை மிகவும் ஸ்டைலிஷாக எப்படி மாற்றலாம்?

1. லூஸ்-ஃபிட்டட் கிராப் டாப்ஸை அகலமான டெனிம்கள் அல்லது பேன்டுடன் அணியலாம்.

2. உயர் இடுப்பு டெனிம்கள் அல்லது பேன்ட் கிராப் டாப்ஸுடன் அழகாக இருக்கும்.

3. ஒரு சாதாரண தோற்றத்திற்கு, கிராப் டாப், பக்கெட் தொப்பி, டாட் ஸ்னீக்கர்கள் மூலம் தோற்றத்தை மாற்றலாம்.

4. இதனை அணியும் போது உங்கள் மிட்ரிஃப்பைச் சுற்றி உள்ள முடியை ஷேவ் அல்லது ட்ரிம் செய்ய மறக்காதீர்கள்.

First published:

Tags: Fashion Tips, Men, Men's fashion