இஸ்ரேல் நாட்டின் ஈலாட்டில் (Eilat) உள்ள யுனிவர்ஸ் டோமில் (Universe Dome) நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் 2021 போட்டியில் பட்டத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் சண்டிகரை சேர்ந்த ஹர்னாஸ் சாந்து (Harnaaz Sandhu). 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை சேர்ந்த ஒருவர் மிஸ் யுனிவர்ஸ் படத்தை வென்றுள்ளது நாட்டு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மிஸ் யுனிவர்ஸ் 2021 பட்டம் வென்ற ஹர்னாஸ் சாந்துவிற்கு 2020-ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் டைட்டிலை வென்ற மெக்சிகோவைச் சேர்ந்த ஆண்ட்ரியா மெசா (Andrea Meza) கீரீடத்தை சூட்டினார்.இந்த நிகழ்வு உலகளவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. சண்டிகரை சேர்ந்த 21 வயதான ஹர்னாஸ் சாந்து சண்டிகரில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். அவர் ஏற்கனவே பல போட்டியில் பங்கேற்று டைட்டில்களை பெற்றுள்ளதால், Yaara Diyan Poo Baran மற்றும் Bai Ji Kuttange போன்ற பஞ்சாபி படங்களில் நடித்திருகிறார்
79 போட்டியாளர்களை தோற்கடித்து மிஸ் யுனிவர்ஸ் 2021 டைட்டிலை வென்றுள்ளார் ஹர்னாஸ் சாந்து. தற்போது இந்தியாவிலிருந்து சென்று மிஸ் யுனிவர்ஸ் டைட்டிலை வென்றுள்ள ஹர்னாஸ் சாந்துவிற்கு முன்னர் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் 2000-மவது ஆண்டில் லாரா தத்தா மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றிருந்தார். இஸ்ரேலின் ஈலாட்டில் நடந்த 70-வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பட்டம் வென்றுள்ள இந்தியாவின் சண்டிகரை சேர்ந்த ஹர்னாஸ் சாந்து 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை கொண்டு வந்துள்ளதற்கு பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
முன்னதாக அவர் மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவாக முடிசூட்டப்பட்ட போது, இன்ஸ்டாவில் தனது பயணத்தை பற்றி வெளிப்படையாக தெரிவிக்கும் வகையிலான சில போட்டோக்களை தொடர்ச்சியாக ஷேர் செய்து கொண்டார். கேப்ஷனில் "எனது பிரபஞ்ச அழகி பயணத்தின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றான எனது தனிப்பட்ட நேர்காணலில் இருந்து எனது தோற்றம், வாழ்க்கையை விட வலிமையானது மற்றும் பெரியது. நேர்காணல் மிகவும் சுமூகமாக நடந்தது மற்றும் அற்புதமான திறமையான மற்றும் வெற்றிகரமான அனைத்து மகளிர் தேர்வுக் குழுவின் (ALL women selection committee) முன் பேசியதற்கு நான் பெருமைப்படுகிறேன்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அதிக விலை கொடுத்து வாங்கும் மேக்அப் பொருட்களை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த டிப்ஸ்
எலிமினேஷன் சுற்றின் போது ஹர்னாஸிடம் "இன்று அவர்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்களை எப்படிச் சமாளிப்பது என்று எதிர்நோக்கும் இளம் பெண்களுக்கு நீங்கள் என்ன அறிவுரை கூறுவீர்கள்" என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் கூறிய ஹர்னாஸ் "இளம் பெண்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும்" என அறிவுறுத்தினார்.
View this post on Instagram
மேலும் பேசிய ஹர்னாஸ், நாம் தனித்துவமானவர் என்பதை நாமே அறிந்து கொள்வது நம்மை அழகாக்குகிறது. எப்போதுமே மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதை நிறுத்துங்கள், மேலும் உலகம் முழுவதும் நடக்கும் முக்கியமான விஷயங்களை பற்றி பேசலாம். வெளியே வாருங்கள், உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே தலைவர் என்பதை நம்புங்கள். நான் என்னை நம்பினேன் அதனால் தான் இன்று நான் இங்கு நிற்கிறேன் என்று பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fashion, Miss Universe