ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உலக அழகி மனுஷி சில்லர் இந்த 5 ஃபேஷன் விஷயங்களைதான் எப்போதும் விரும்புவாராம்..!

உலக அழகி மனுஷி சில்லர் இந்த 5 ஃபேஷன் விஷயங்களைதான் எப்போதும் விரும்புவாராம்..!

மனுஷி சில்லர்

மனுஷி சில்லர்

அவரின் நுட்பமான மேக்கப்பும், ஃப்ரீ-ஹேர் ஸ்டைலும், முக்கியமாக அவரின் அழகான புன்னைகையும் பார்ப்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. அதே வீடியோவில் அவர் விரும்பும் ஐந்து இந்திய பேஷன் பொருட்களை பற்றி பேசி உள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மனுஷி சில்லர் - அழகின் ஒரு உருவகம்; முன்னாள் உலக அழகி! இவர் இந்திய பாரம்பரியத்துடன் மிகவும் நெருக்கமாக இருப்பதையே அதிகம் விரும்புகிறார் மற்றும் நிச்சயமாக பாரம்பரிய உடையில் எப்படி கச்சிதமாக இருக்க வேண்டும் என்பது பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். மனுஷி சில்லர் பல சந்தர்ப்பங்களில் புடவை, லெஹங்கா அல்லது சூட் அணிந்தே காணப்படுகிறார். இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் இவர் எதை அணிந்தாலும் அதில் ஸ்டைலாக இருக்கிறார். சமீபத்தில், மனுஷி சில்லர் தனக்கு பிடித்தமான இந்திய ஃபேஷன் பொருட்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

இதற்காக மனுஷி சில்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வழியாக ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், அவர் ஒரு அழகான கோல்ட் சோக்கர் செட்டுடன் ராயல் லாவெண்டர் லெஹங்கா அணிந்திருப்பதைக் காண முடிகிறது. மேலும் அவரின் நுட்பமான மேக்கப்பும், ஃப்ரீ-ஹேர் ஸ்டைலும், முக்கியமாக அவரின் அழகான புன்னைகையும் பார்ப்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. அதே வீடியோவில் அவர் விரும்பும் ஐந்து இந்திய பேஷன் பொருட்களை பற்றி பேசி உள்ளார்.

01. சேலை: யாருக்குத்தான் புடவை பிடிக்காது? தன் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் சேலை அணியலாம் என்று மனுஷி கூறி உள்ளாரே. அவரை பொறுத்தவரை புடவை என்பது ஆறு கெஜம் நீளமான கருணை, அன்பை வெளிப்படுத்தும் ஒரு ஆடை ஆகும்!

02. மாங் டிக்கா: இந்த பாரம்பரிய நகைகள் உங்களின் ஒட்டுமொத்த தோற்றத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். மனுஷி சில்லர் கூற்றுப்படி, மாங் டிக்காக்கள் "மிகவும் பெண்மை நிறைந்தது மற்றும் மிகவும் அழகானது", மேலும் அவர் அவற்றை அணிவதை பெரிதும் விரும்புகிறார்.

03. பிந்தி: மனுஷி சில்லரின் அடுத்த இந்திய பேஷன் பொருள் - பிந்தி. பிந்தி மீதான அன்பைப் பற்றிப் பிரதிபலிக்கும் வகையில், "பிந்தி ஒரு பெண்ணின் இந்தியத்தன்மையை வெளிப்படுத்துகிறது மற்றும் உங்கள் தோற்றத்தை மாற்றுகிறது என்று நான் நினைக்கிறேன்" என்கிறார் மனுஷி சில்லர்.

புடவை வாங்கும் போது நீங்கள் கவனிக்கத் தவறும் விஷயங்கள்... அடுத்த முறை மிஸ் பண்ணிடாதீங்க..!

04. ஜும்கிஸ்: ஷேர் செய்த வீடியோவில் மனுஷி ஜூம்கி அணியவில்லை என்றாலும், ​​அவர் ஜூம்கி அணிவதை பெரிதும் விரும்புகிறார். அவரைப் பொறுத்தவரை, ஜூம்கி அனைவரையும் அழகாக மாற்றும்.

05. துப்பட்டா: மனுஷியின் பட்டியலில் கடைசியாக வரும் இந்திய பேஷன் பொருள் - துப்பட்டா ஆகும். பாலிவுட் திரைப்படங்கள், துப்பட்டாவுக்கு ஒரு ரொமான்டிக் உணர்வை கொடுத்துள்ளன என்றும், துப்பட்டாவில் தான் 'ஃபீல் குட்' ஆக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனுஷி பகிர்ந்த அனைத்து ஐந்து பேஷன் பொருட்களுமே நிச்சயமாக நமக்கும் மிகவும் பிடித்தவைகள் தான். இன்னும் சொல்லப்போனால் இவைகள் இல்லாமல் எந்த ஒரு "இந்தியன் லுக்கும்" முழுமையடையாது. மனுஷி சில்லரை பொறுத்தவரை, அவர் வரவிருக்கும் தேசபக்தி திரைப்படமான பிருத்விராஜ்-இல் அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் சந்திரபிரகாஷ் திவேதி இயக்கியத்தில் உருவாகி உள்ள இந்த பீரியட் ஃபிலிம் ஆனது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வருகிற ஜூன் 3ஆம் தேதி வெளியாகிறது.

First published:

Tags: Fashion Tips