• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ரெடிமேட் துணிகளுக்கான அளவுகள் விரைவில் மாற்றம் : இந்தியாவுக்காக பிரத்யேக அளவுகள் உருவாகிறது!

ரெடிமேட் துணிகளுக்கான அளவுகள் விரைவில் மாற்றம் : இந்தியாவுக்காக பிரத்யேக அளவுகள் உருவாகிறது!

ஃபேஷன்

ஃபேஷன்

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய துறையாக ஜவுளித்துறை உள்ளது. இதில் சுமார் 140 பில்லியன் ரூபாய் டர்ன் ஓவர், ஆண்டுதோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

  • Share this:
துணிக்கடைகளுக்கு செல்லும்போது அந்தந்த வயதினருக்கு ஏற்ப அல்லது உடல்வாகுக்கு ஏற்ப மீடியம் (M), லார்ஜர் (L) எக்ஸ்டிரா லார்ஜர் (XL) ஆகிய குறியீடுகளைக் கொண்டு துணிகளை தேர்ந்தெடுக்கிறோம். இந்தளவுகள் குறியீட்டில் இந்தியாவுக்காக பிரத்யேக குறியீடுகள் இல்லை. அமெரிக்காவில் மீடியம் சைஸ் துணிகள், இந்தியாவில் பெரிய உடலமைப்பு கொண்ட நபர்களுக்கு பொருந்துகிறது.

இதேபோல், ஐரோப்பியாவில் குறிப்பிடப்படும் குறியீடுகளும் இந்தியர்களுக்கு உகந்தாக இல்லை. இது துணி எடுப்பவர்கள் மத்தியில் குழப்பதை ஏற்படுத்தி தவறான துணிகளை தேர்ந்தெடுக்கும் நிலையை உருவாக்குவதால், இந்தியாவில் இந்தியர்களின் உடல் அமைப்புக்கு ஏற்ப ரெடிமேட் துணிகளின் அளவை குறிக்கும் வகையில் புதிய அளவுகளை உருவாக்கும் முயற்சியை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.

INDIAsize என்ற தலைப்பில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் பேஷன் டெக்னாலஜி இன்ஸ்டியூட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் ஆடை தயாரிக்கும் துறையில் இந்தியாவுக்கான புதிய தரப்படுத்தப்பட்ட அளவு விளக்கப்படம் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் தொடங்கிய இந்த பணிகள், 2019 ஆம் ஆண்டே அறிவிக்கப்பட்டாலும், கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய துறையாக ஜவுளித்துறை உள்ளது.

இதில் சுமார் 140 பில்லியன் ரூபாய் டர்ன் ஓவர், ஆண்டுதோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியர்களின் சந்தை வணிகத்தின் மதிப்பு மட்டும் 100 பில்லியன். எஞ்சிய 40 பில்லின் மட்டுமே ஜவுளி ஏற்றுமதியில் கிடைக்கும் தொகையாகும்.

இந்தியர்களின் உடலமைப்புகள் தொடர்பான அளவுகளை சேகரிக்கும் பணி முதல்கட்டமாக டெல்லி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 6 முக்கிய நகரங்களை உள்ளடக்கி தொடங்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 5,700 பேரிடம் இருந்து அளவுகள் சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய மத்திய ஜவுளித் துறை செயலாளர், உலகளவில் 18 நாடுகள் மட்டுமே சொந்தமான உடை அளவுகளைக் கொண்டுள்ளன என தெரிவித்தார். உடல் அளவு, மேப்பிங், வகைப்படுத்துதல், வரையறை மூலம் புதிய உடை அளவுகளின் சார்ட் தயாரிக்கப்படும் என கூறிய அவர், 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தப் பணிகள் முழுமையடையும் என நம்பிக்கை தெரிவித்தார்.



NIFT மேற்கொள்ளும் இந்த ஆராய்ச்சியில் வயது, இனம் ஆகியவற்றின் அடிப்படையிலும் பங்கேற்பாளர்களிடம் 3டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளது. ஐரோப்பியாவைச் சேர்ந்தவர்களுக்கும், இந்தியர்களுக்கும் உடல் அமைப்பில் பெரும் வித்தியாசம் இருப்பதால், அவர்களின் உடையின் அளவைத் தேர்தெடுக்கும்போது, அது இந்தியர்களுக்கு பொருத்தமாக இருக்காது என இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜியின் இயக்குநர் ஷாந்தமனு தெரிவித்துள்ளார். புதிய அளவீடுகள் மற்றும் தரவுகள் மூலம் இந்திய பிராண்டுகள் மக்களை கவரும் வகையிலும், விற்பனையிலும் பெரிய வீச்சை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: