Home /News /lifestyle /

டைட்டாக ஜீன்ஸ் அணிவதால் கேன்சர் ஆபத்தா..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை..!

டைட்டாக ஜீன்ஸ் அணிவதால் கேன்சர் ஆபத்தா..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை..!

ஜீன்ஸ்

ஜீன்ஸ்

இளம் வயதினருக்கு ஜீன்ஸை டைட்டாக அணிவது மிகவும் பிடிக்கும். இறுக்கமான ஜீன்ஸ் அணிவது உடல்நலத்தை பாதிக்கும் எந்த சில காலமாக கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக ஜீன்ஸை மிகவும் இறுக்கமாக அணிவது டெஸ்டிகுலர் கேன்சர் அதாவது விந்தக புற்று நோயை ஏற்படுத்தும் அபாயம் கொண்?

மேலும் படிக்கவும் ...
    நம் நாட்டை பொறுத்தவரை சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு தான் ஆடைகளை தேர்வு செய்து அணியும் பழக்கம் இருந்து வந்தது. ஆனால் கால மாறுதலுக்கு ஏற்றவாறு மற்றும் உலகமயமாக்கலின் விளைவாக உணவு முதல் வாழ்க்கைமுறை வரை எல்லாவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதில் பேஷன் என்பது அடிக்கடி மாறுதலுக்கு உள்ளாகி வருகிறது. இருப்பினும் பல ஆண்டுகளாக மாறாமல் இருப்பது ஆண் மற்றும் பெண் இருவருமே விரும்பி அணியும் ஜீன்ஸ்! துவைக்க வேண்டாம், அவ்வளவு சீக்கிரம் அழுக்காகாது, நீண்ட காலத்திற்கு உழைக்கும், அலுவலகத்துக்கு அணிந்து செல்லலாம் என்ற அளவுக்கு ஜீன்ஸ் பலரின் வாழ்விலும் ஒருங்கிணைந்து உள்ளது.

    அது மட்டுமின்றி ஒரு ஸ்டைல் ஸ்டேட்மென்ட்டை உருவாக்க வேண்டும் என்றாலும் பலவிதமான ஜீன்ஸ் தற்போது வந்துவிட்டது. இளம் வயதினருக்கு ஜீன்ஸை டைட்டாக அணிவது மிகவும் பிடிக்கும். இறுக்கமான ஜீன்ஸ் அணிவது உடல்நலத்தை பாதிக்கும் எந்த சில காலமாக கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக ஜீன்ஸை மிகவும் இறுக்கமாக அணிவது டெஸ்டிகுலர் கேன்சர் அதாவது விந்தக புற்று நோயை ஏற்படுத்தும் அபாயம் கொண்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    ஸ்கின்னி அல்லது டைட்ஸ் என்று கூறப்படும் உடலை கால்களை இறுக்கிப் பிடித்ததுபோல அணியும் ஜீன்ஸ் உங்களுடைய உடலின் வடிவத்தை அழகு படுத்திக் காட்டும். ஆனால் அழகு சில நேரங்களில் உடலுக்கு ஆபத்தாகி விடுவதுண்டு. பொதுவாகவே இறுக்குமான ஆடைகளை அணியும் போது ரத்த ஓட்டம் சீராக இருக்காது. எனவே ஆடைகளை தளர்வாக அணிய வேண்டும் என்று கூறுவதுண்டு. குறிப்பாக, இடுப்பு பகுதி முதல் கால் வரை ஜீன்ஸை டைட்டாக அணிவது உடலின் கீழ் பகுதியில் ரத்த ஓட்டத்தை பாதித்து கால்கள் மற்றும் பாதங்களை பலவீனமாக உணர வைக்கும்.



    ரத்த ஓட்டத்தை தடை படுத்துவதோடு மட்டுமன்றி, இறுக்கமான ஆடைகள் தொடர்ந்து உடலில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இது நரம்புகள் மற்றும் தசைகளை பாதிக்கும். மேலும் அவ்வப்போது அசௌகரியமாக உணரும் போது கால்களை லேசாக தளர்த்திக்கொள்ளக்கூட இடமில்லாத அளவுக்கு இறுக்கமான ஜீன்ஸை அணியும் போது வலி ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், மரத்துப் போதல் மற்றும் தொடைகளில் ரத்தக்கட்டு, ஆகியவை உண்டாகும்.

    டீ-ஷர்ட்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்... புதிய ஃபார்மல் உடைகளைப் போல் மாறியதன் காரணம்..

    ஆண்கள் நீண்ட நேரத்திற்கு டைட்டான ஜீன்ஸ் அணிவது அல்லது தினசரி டைட் ஜீன்ஸ் அணிவது நல்லது டெஸ்டிகுலர் கேன்சர் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    விக்டோரியாவில் இருக்கும் பீட்டர் மெக்கல்லம் கேன்சர் மையத்தின் ஆன்காலாஜி கன்சல்ட்டன்ட் ஆன கை டோனர், விந்துப்பைகள் என்பது உடலின் மற்ற பகுதிகளை விட கொஞ்சம் குளிச்சியான டெம்பரேச்சரில் இருக்கும். உடல் உஷ்ணத்தை விட டெஸ்ட்டிக்கில்ஸ் இருக்கும் பகுதியில் உள்ள வெப்பம் குறைவாக இருக்கும் போது தான் விந்து அணுக்கள் உருவாகும் என்று கூறியுள்ளார்.



    இந்த நிலையில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஆய்வு நிபுணர்களின் கூற்றின் அடிப்படையில் இடுப்பில் இருந்து கால்கள் வரை டைட்டான ஆடைகளை அணிவது, உடலின் கீழ் உள்ள பகுதியில் இருக்கும் வெப்பநிலை அதாவது உடல் உஷ்ணத்தை அதிகரித்து விந்துப் பைகளை பாதிக்கும். இதனால் விந்தணுக்களின் உற்பத்தி தடைப்படும் மற்றும் எண்ணிக்கையும் குறையும். மேலும் இதன்மூலம் விந்துப்பை புற்றுநோய் உண்டாகும் அபாயமும் அதிகரிக்கும்.

    டெஸ்டிகுலர் கேன்சர் உண்டாகும் ஆபத்து அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்களே தவிர, இதை உறுதிப்படுத்தும் அளவுக்கு இதுவரை சான்றுகள் எதுவும் இல்லை. ஆனால் பொதுவாகவே உடலை மிகவும் இறுக்கி பிடிக்கும் ஆடைகளை அணிவது உடலின் ரத்த ஓட்டத்தையும் உடலுக்குள் நரம்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஜீன்ஸ்க்கு மட்டுமின்றி ஷேப்வேர் என்று உடலின் இறுக்கமாக அணியப்படும் உடலின் வடிவத்தை மாற்றும் உள்ளாடைக்கும் இது பொருந்தும்.

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Fashion Tips, Health

    அடுத்த செய்தி