நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக தனது பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.இவர் என்னதான் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் இன்ஸ்டாகிராமை பார்க்கும் பொழுது இவர் மாடர்ன் உடைகளை விட சுடிதார் அணியவே மிகவும் விரும்புகிறார் என்பதை புரிந்துக் கொள்ளமுடிகிறது. உங்களுக்கும் லாங் குர்த்தி அணிவது பிடிக்கும் என்றால் இந்த ஸ்டைலிங் டிப்ஸை தெரிந்துக்கொள்ளுங்கள்.
இதில் பிரவுன் கலரில் க்ராண்டான லாங் ட்ரெஸை ஐஸ்வர்யா ராஜேஷ் அணிந்துள்ளார்.டாப்பின் பாட்டமில் மட்டும் கோல்டன் கலர் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது.நெட் மெட்டிரியலில் துப்பட்டா கொடுக்கப்பட்டிருப்பது கூடுதல் அழகை சேர்க்கிறது. இது மாதிரியான உடையை பண்டிகை அன்று அணிந்தால் லுக்காக இருக்கும்.
இந்த சுடிதாருக்கு ஏற்றது போல் ஜிமிக்கி அணிந்துள்ளார்.ஹேர் ஸ்டைலை பொறுத்தவரை straightening செய்து ஃப்ரீ ஹேர் விட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் எம்ப்ராய்டரி ( embroidery )டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ள சுடிதாரை அணிந்துள்ளார். சுடிதாரின் டாப்பில் கை மற்றும் மேல் பகுதியில் எம்ப்ராய்டரி டிசைன் உள்ளது. துப்பட்டாவின் பார்டரிலும் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த சுடிதார் ஒரு ரிச் லுக்கை தருகிறது. கரும்பச்சை நிறமானது ஒரு வித்தியாசமான நிறமாகும். எனவே இந்த தீபாவளிக்கு நீங்களும் இந்த கலரில் ட்ரெஸ் வாங்கி ட்ரை பண்ணி பாருங்க.
அணிகலன்களை பொறுத்தவரை சுடிதாருக்கு ஏற்றது போல் காதில் தோடு மட்டும் அணிந்துள்ளார். சிம்பிளாக மேக்கப் செய்திருப்பது இந்த உடைக்கும் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது.
also read : தீபாவளிக்கு என்ன ட்ரெஸ் வாங்கலாம் ? பாலிவுட் பிரபலங்களின் ஸ்டைலிங் டிப்ஸ்..
மூன்றாவது லுக்கில் ஐஸ்வர்யா அணிந்திருக்கும் லாங் குர்த்தி மெஜஸ்டிக்கான லுக்கை தருகிறது. லைட் கலர்களை விரும்புவர்களுக்கு நிச்சயமாக இந்த உடை பிடிக்கும். இந்த உடையின் சிறப்பம்சமே துப்பட்டா தான். சுடிதார் டாப்பில் எந்த ஒரு டிசைனும் இல்லாமல் ப்ளயினாக இருக்கிறது. அதற்கு மாறாக துப்பட்டாவில் ஹெவி டிசைன் கொடுக்கப்பட்டிருப்பது பார்க்க அழகாக இருக்கிறது.
உங்களுக்கும் இந்த சுடிதார் பிடித்திருந்தால் இதே போல் ட்ரை பண்ணி பாருங்க..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.