• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஓணம் பண்டிகைக்கு கசவு புடவை கட்டப்போறீங்களா..? அதை எப்படி கட்ட வேண்டும் தெரியுமா..? டிப்ஸ் இதோ...

ஓணம் பண்டிகைக்கு கசவு புடவை கட்டப்போறீங்களா..? அதை எப்படி கட்ட வேண்டும் தெரியுமா..? டிப்ஸ் இதோ...

ஓணம்

ஓணம்

நீங்களும் வீட்டில், அலுவலகத்தில் ஓணம் கொண்டாட்டத்திற்கு தயாராகிறீர்கள் எனில் கசவு புடவை எப்படி கட்ட வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

  • Share this:
ஓணம் பண்டிகை கேரளாவின் மிகப்பெரும் கொண்டாட்டமாக நடைபெறும் 10 நாள் திருவிழாவாகும். இது ஆவணி மாதம் மகாபலி சக்கரவர்தியின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஓணம் பண்டிகையானது உலகம் முழுவதும் இருக்கும் கேரள மக்கள் கொண்டாடுவது மட்டுமன்றி மற்ற மாநில மக்களும் வெகு விமர்சையாகக் கொண்டாடுகின்றனர். ஓணம் என்றாலே கசவு புடவைதான் பிரபலம்.

பெண்கள் அந்த புடவை அணிந்து கொண்டு ஒய்யார நடை போடும் அழகு பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும். தமிழ்ப் பெண்களும் ஓணம் அன்று கசவு புடவை கட்டி அழகு பார்க்கின்றனர். அலுவலகங்களிலும் ஓணம் விமர்சையாகக் கொண்டாடப்படுவதால் அன்று அனைவருக்கும் இந்த கசவு புடவைதான் யூனிஃபார்ம். அப்படி நீங்களும் வீட்டில், அலுவலகத்தில் ஓணம் கொண்டாட்டத்திற்கு தயாராகிறீர்கள் எனில் கசவு புடவை எப்படி கட்ட வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

கசவு புடவையின் வரலாறு :

17 ஆம் நூற்றாண்டில் திருவனந்தபுரத்தை ஆண்ட அரசர் மஹாபாலி தன் நாட்டு மக்களின் ஒற்றுமையை பறைசாற்றவும் வெளிஊர் மக்களை எளிதில் கண்டறிய கசவுப் புடவையை கொண்டுவந்தார். இந்த போக்கு அங்கிருந்த நெசவாளர்களுக்கு சிறந்த ஊக்கமாகவும் இருந்தது. மஹாபாலியின் ஆட்சி முடிந்து போக அந்த பொறுப்பு அப்போது கேரளாவை ஆண்ட பலராமவர்மாவிற்கு வந்தது. பின் திருவனந்தபுரத்தை ஆட்சி புரிந்த (முதலமைச்சர்) உம்மினி தம்பியிடம் அந்த பொருப்பை ஒப்படைத்தார். அவர், தமிழ்நாட்டில் உள்ள சாலியர் என்றழைக்கப்படும் நாகர்கோவில் நெசவாளர்களை அழைத்து வந்து நலிந்து போன கசவு உற்பத்தியை மீண்டும் புதுபித்தார். பின் அவர்கள் தங்கியிருந்த அந்த இடம் பலராமபுரம் என்றழைக்கப்பட்டு இன்று கேரளாவின் பிரதான கசவு உற்பத்தி இடமாக போற்றப்படுகிறது.எனவேதான் மஹாபாலி அரசரை நினைவுக் கூறும் தினமான ஓணம் (இவர் திருவனந்தபுரத்தை ஆண்டதால் திருவோனம் என்றும் அழைக்கப்படுகிறது) பண்டிகையின் போது கேரளப் பெண்கள் கசவுப் புடவையை உடுத்துவதற்கான காரணமும் இந்த வரலாறே. அதுமட்டுமின்றி கேரளாவின் டிரெடிஷ்னல் நடனமான மோகினி ஆட்டத்தின் போதும் இந்த கசவு புடவைகளே அணியப்படுகிறது.

சரி புடவையை எப்படி கட்ட வேண்டும் தெரியுமா..?

கசவு புடவை பருத்தி துணியாக இருந்தால்தான் எடுப்பாக இருக்கும். அதை நன்கு அயர்ன் செய்து கட்டுங்கள். முதலில் புடவையின் முணையை உள்பாவாடையில் சொருகி ஒரு சுற்று சுற்றிக்கொள்ளுங்கள்.

ஓணம் பண்டிகைக்கு என்ன மாதிரியான மேக்அப் மற்றும் ஹேர் ஸ்டைல் டிரை பண்ண போறீங்க..? முழுமையான ஸ்டைலிங் டிப்ஸ்

பின் பள்ளுவை எடுத்து நான்கு அல்லது எட்டு மடிப்பாக மடித்து தோள்பட்டையில் வைத்து அடுக்குகளை சரி செய்து ப்டவை பின் குத்துங்கள். பின் மடிப்பு தெரிய கழுத்தை ஒட்டியும் ஒரு பின் குத்துங்கள்.அடுத்ததாக கீழே விட்டுள்ள துணியை இழுத்து அங்கும் நான்கு அல்லது 6 மடிப்பு கட்டி இடுப்பில் சொருகுங்கள்.

அடுத்ததாக புடவையை கழன்றுகொள்ளாத வாறு இறுக்கமாக்கி ஒரு பின் குத்திக்கொள்ளுங்கள். இறுதியாக அந்த வீடியோவில் கூறுவதுபோல் சில அட்ஜஸ்மெண்டுகளை செய்துகொள்ளுங்கள்.

அவ்வளவுதான் பக்காவான புடவை லுக் தயார்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: