கீர்த்தி சுரேஷ் தற்போது பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக உள்ளார். அந்த வகையில் சானிக்காயிதம்,சர்க்காரு வாரி பாடா போன்ற படங்களை கையில் வைத்துள்ளார். அதற்காக அவ்வபோது வெளிநாட்டுப் பயணங்களையும் மேற்கொண்டு வருகிறார்.
மகேஷ் பாவுவுடன் தெலுங்கில் அவர் நடிக்கும் படமான சர்க்காரு வாரி பாடா படத்திற்கான ஷூட்டிங்கிற்காக மிகவும் ஆர்வமாக உள்ளார். அதற்கான ஏர்போர்ட் பயணம் மேற்கொள்வதை பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் கீர்த்தி பக்காவான ஏர்போர்ட் லுக்கில் இருக்கிறார். கழுத்தை ஒட்டிய கம்பளி டாப் அணிந்துள்ளார். அதன் மேல் கோட் அணிந்திருக்கிறார். கீழே ஃபிரீ ஸ்டைல் பேண்ட் அணிந்திருக்கிறார். அவர் அணிந்திருக்கும் அந்த கோட் எப்படியும் 10ஆயிரத்திற்கு மேல் இருக்கலாம்.
ஆடைக்கு ஏற்றவாறு ஸ்லிங் பேக் மற்றும் பயணத்திற்கு ஏற்ப டிராலி பேக் வைத்திருக்கிறார். கருப்பு நிற கூலிங் கிளாஸ், காலுக்கு ஸ்னீக்கர்ஸ் என மிடுக்கான உடையில் இதுவரை பார்த்திராத கீர்த்தி சுரேஷாக இருக்கிறார்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.