• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • எத்தினிக் ஸ்டைலில் குர்த்தா அணிவதுதான் பிடிக்குமா..? கரிஷ்மா கபூரின் ஸ்டைலை டிரை பண்ணலாமே..!

எத்தினிக் ஸ்டைலில் குர்த்தா அணிவதுதான் பிடிக்குமா..? கரிஷ்மா கபூரின் ஸ்டைலை டிரை பண்ணலாமே..!

கரிஷ்மா கபூர்

கரிஷ்மா கபூர்

திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் முதல் சாதாரண உலாக்கள் வரை, கரிஷ்மா கபூர் ஒருபோதும் தன்னை அலங்காரம் செய்துக்கொள்வதில் இருந்து சோர்வடைவதில்லை.

  • Share this:
பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர் தனது வார்ட்ரோபில் பலவிதமான பேஷன் கலெக்சன்களை வைத்திருக்கிறார் என்பதை அவரது இன்ஸ்டா போஸ்ட் மூலமாகவே தெரிந்துகொள்ளலாம். மேலும் அவரது ஒவ்வொரு பாணியும் வியத்தகு முறையில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போகிறார்கள். திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் முதல் சாதாரண உலாக்கள் வரை, கரிஷ்மா ஒருபோதும் தன்னை அலங்காரம் செய்துக்கொள்வதில் இருந்து சோர்வடைவதில்லை.

மேலும் அவர் அணியும் எத்தினிக் குர்தாக்கள் அவரது ரசிகர்களை எப்போதும் பிரமிக்க வைக்கிறது.  மேலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர் அணியும் குர்தா ஸ்டைல் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. எனவே, தற்போது கோடைக்காலம் தொடங்கியதால் எந்த மாதிரியான குர்தா வகைகளை அணியலாம் என்று யோசிக்கிறீர்கள் என்றால் கரிஷ்மாவின் குர்தா கலெக்சன்ஸ் உங்களுக்கு உதவலாம். அவர் அணியும் குர்தா மாடல்களை பற்றி பின்வருமாறு காண்போம்.
ஃபோரல் குர்தா: தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்டது என்பதால் வெளியில் செல்ல விரும்பும் பெண்கள் கட்டாயம் வெயிலுக்கு ஏற்றாற்போல ஆடைகளை அணிய விரும்புவார்கள். அந்த வகையில், மலர் அச்சு பிரிண்ட் செய்யப்பட்ட குர்தாவை நீங்கள் காட்டாயம் ட்ரை செய்யலாம். கரிஷ்மா ஒருமுறை சிவப்பு நிற குலாபோ ஜெய்ப்பூர் ரக ஏ-லைன் பிலார்ட் குர்தாவை அணிந்திருந்தார். இந்த குர்தா பழமையான வண்ணங்களில் ஒரு மலர் அச்சு மற்றும் ஒரு சிறிய போம்-போம் டிரிம் உடன் வடிவமைக்கப்பட்டது. கிளாசிக் வெள்ளை பாலாஸ்ஸோ பேன்ட்ஸுடன் அவர் அந்த குர்தாவை அணிந்திருந்தார். கரீஷ்மாவின் இந்த பேஷனை நீங்களும் காட்டாயம் ட்ரை பண்ணலாம்.
ப்ரோகேட் குர்தா செட்: நீங்கள் ஒரு திருமணத்திற்கு நாகரீகமாக ஆடை அணிய விரும்பினால், கரீஷ்மாவின் இந்த ப்ரோகேட் குர்தா செட்டை ட்ரை பண்ணலாம். நடிகை கரிஷ்மா தனது உறவினர் அர்மான் ஜெயினின் ரோகா விழாவிற்கு சென்ற போது தனது ஆடை அலகாரத்தால் விருத்தினரிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். இது பயல் கண்ட்வாலாவால் வடிவமைக்கப்பட்டது. அவரது ஏ-லைன் ப்ரோகேட் குர்தா ஒரு நெக்லைனைக் கொண்டிருந்தது. அதே போல, ப்ரோக்கேட் கால்சட்டைகளுடன் ஜோடியாக இருந்தது. அவர் அணிந்த குர்தாவின் உள்ளே ஒரு வெள்ளை சட்டையையும் அவர் அணிந்திருந்தார். அவற்றுடன் தங்க காதணிகள் மற்றும் பொருந்தும் கடா ஆகியவை அவரது தோற்றத்தை மிகவும் நேர்த்தியாக காண்பித்துள்ளன.
பிரகாசமான இளஞ்சிவப்பு குர்தா: நீங்கள் டார்க் வனங்களில் நுட்பமான எம்பிராய்டரிகளை விரும்பினால், கரிஷ்மா அணிந்திருப்பது போன்ற ஒரு குர்தா செட்டை நீங்கள் தேர்வு செய்யலாம். ஒருமுறை ரிதியீ சூரி என்பவரால் ட்ர்ஜியா நிறுவனம் வடிவமைத்த பிரகாசமான இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை குர்தாவை அவர் அணிந்திருந்தார். அவர் குர்தாவை பிளாக் பிரிண்ட் ஷராக்களுடன் அணிந்திருந்தார். அதிலும் லைட் மேக்கப் அலங்காரத்துடன், ஜும்காக்களை அணிந்தால் அட்டகாசமாக இருக்கும்.
ட்ரடிஷனல்-மீட்-அத்லெய்சியூர் குர்தா செட்: கரிஷ்மா அணிந்திருந்த ஐவோரி சில்க் குர்தா மற்றும் அன்டார்-அக்னி வடிவமைத்த பேன்ட் ஆகியவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவர் இந்திய உடைகளுடன் ஸ்னீக்கர்களை அணிந்து முழு பார்வையையும் தன் பக்கம் திருப்பினார். மேலும் ஆடை வடிவமைப்பிற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக ஒரு சிவப்பு பிண்டி மற்றும் தங்க காதணிகளை அவர் அணிந்திருந்தார்.
பெஸ்டிவ் குர்தா செட்: நீங்கள் சிவப்பு நிறத்தை விரும்பினால், இந்த குர்தா செட் காட்டாயம் உங்கள் கவனத்தை ஈர்க்கும். கரிஷ்மா செய்ததைப் போலவே திருமணத்திற்கு முந்தைய நாள் நீங்கள் இந்த ஸ்டைலை ட்ரை செய்யலாம். குறுகிய முழங்கால் நீள குர்தா காட்டாயம் ஒரு எத்தினிக் ஃபீலை உங்களுக்கு தருகிறது. இதற்கேற்ப ஆடை அலங்காரங்களை செய்துகொண்டால் மிகவும் அற்புதமாக இருக்கும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: