கேரள புடவையில் பட்டைய கிளப்பும் கங்கனா ரனாவத்..! வைரலாகும் போட்டோஸ்!

கேரள புடவையில் பட்டைய கிளப்பும் கங்கனா ரனாவத்..! வைரலாகும் போட்டோஸ்!

கங்கனா ரனாவத்

தனது சமூக வலைதளப்பக்கத்தில் கேரள ட்ரெடிஷன் புடவை அணிந்தபடி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்

  • Share this:
நடிகை கங்கனா ரனாவத் புடவை அணிந்தாலும், தனது நேர்த்தியான அழகு மற்றும் ஸ்டைல் போன்றவற்றை வெளிப்படுத்துவதில் ஒருபோதும் தவறுவதில்லை. தற்போது கொரோனா பரவல் காரணமாக பல படப்பிடிப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஊடரங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மும்பையில் உள்ள தனது வீட்டில் பொழுதை கழித்து வரும் கங்கனா, அவ்வப்போது தனது அன்றாட நிகழ்வுகள் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் கேரள ட்ரெடிஷன் புடவை அணிந்தபடி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் கோல்ட் பார்டர் கூடிய கேரள கசவு புடவையைப் அணிந்திருந்தார். மேலும் அவர் அந்த புடவையில் மிக எளிமையாகவும் நேர்த்தியாகவும் தோற்றமளித்தார்.

தனது மும்பை வீட்டின் பால்கனியில் நின்றபடி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் பல்வேறு பாணியில் எடுத்துக்கொண்ட பல தொடர்ச்சியான ஸ்னாப்ஷாட்களை தனது சமூக ஊடக பக்கத்தில் வரிசையாக பகிர்ந்துள்ளார். 
View this post on Instagram

 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)


அடுத்த முறை, நீங்கள் ஒரு பாரம்பரிய கேரள கசவு புடவையை அணிவதைத் தேர்வுசெய்கிறீர்கள் என்றால் கங்கனாவின் இந்த லுக் மற்றும் ஸ்டைலை நீங்களும் பின்பற்றலாம். கங்கனா தென்னிந்தியாவின் பாரம்பரிய புடவை அணிந்து நியூ லுக்கில் புகைப்படம் எடுத்துக்கொள்வது இது முதல்முறை அல்ல. அவர் வரவிருக்கும் தனது திரைப்படமான "தலைவி" ப்ரோமோஷன்களுக்காக ஏற்கனவே ஆறு கெஜம் பட்டு அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

”ஜெயலலிதா மெய்சிலிர்க்க வைக்கும் ஃபேஷன் ஆளுமை” - தலைவி பட காஸ்டியூம் டிசைனர் நேர்காணல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் ஏ.எல்.விஜய் ‘தலைவி’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார். இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்றதையடுத்து, படத்தை ஏப்ரல் 23-ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டிருந்தது. அதற்கான முன்னோட்டமாக படத்தின் ட்ரைலரையும் படக்குழு வெளியிட்டது. 
View this post on Instagram

 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)


ஆனால் கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 50 சதவிகித பார்வையாளர்களோடு இயங்க மட்டுமே திரையரங்குகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தற்போதைய சூழலை கவனத்தில் எடுத்த படக்குழு, பட ரீலிசை ஒத்தி வைப்பதாக சமீபத்தில் அறிவித்தது.

இந்த நிலையில் படத்தை ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. இதனை மறுத்த படக்குழு தலைவி படம் முதலில் திரையங்குகளில் தான் வெளியாகும் என்றும், பின்னரே ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தலைவி படத்தின் தமிழ்ப்பதிப்பு அமேசான் ப்ரைம் தளத்திலும் இந்திப்பதிப்பு நெட்ஃபிளிக்ஸ் தளத்திலும் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
Published by:Sivaranjani E
First published: