ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் பாவாடை தாவணியில் மிளிரும் மகள் ஜான்வி கபூர்..!

தாவணியில் அப்படியே 16 வயதினிலே ஸ்ரீதேவியை பார்த்தது போல் உள்ளது என்று வர்ணித்து வருகின்றனர்

Sivaranjani E | news18
Updated: August 13, 2019, 5:29 PM IST
ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் பாவாடை தாவணியில் மிளிரும் மகள் ஜான்வி கபூர்..!
பாவாடை தாவணியில் மிளிரும் ஜான்வி கபூர்
Sivaranjani E | news18
Updated: August 13, 2019, 5:29 PM IST
இந்திய சினிமாவின் பெரும் இழப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 நிகழ்ந்தது. லெஜண்ட் என கொண்டாடப்பட்ட ஸ்ரீதேவியின் இறப்புதான் அந்த பேரிழப்பு.

இந்திய சினிமாவில் 300 படங்களுக்கு மேல் நடித்த பெருமை ஸ்ரீதேவிக்கே உரித்தானது. இன்று அவரது 56வது பிறந்தநாள் என்பதால் ஸ்ரீதேவியின் குடும்பம் ஆந்திராவில் உள்ள திருப்பதிக்குச் சென்றுள்ளது. காலையிலேயே தரிசனத்திற்குச் சென்று பூஜை முடித்து ஸ்ரீதேவியின்பிறந்தநாளை சிறப்பித்துள்ளனர்.

ஸ்ரீதேயின் மகள் ஜான்வி கபூர் அம்மாவின் பிறந்த நாளில் பாவாடை தாவணி உடுத்தியுள்ளார். இதை ஜான்வி தனது இன்ஸ்டாகிராமில் பகிர ரசிகர்கள் ஸ்ரீதேவி சாயலில் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். சிலர் அவரைப் பார்க்கும்போது 16 வயதினிலே ஸ்ரீதேவி எனவும் வர்ணிக்கின்றனர். 
View this post on Instagram
 

💚


A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) on


அதில் அவர் பச்சை நிற தாவணி மற்றும் தங்க நிற பாவாடையில் மிளிர்கிறார். எந்தவித ஓவர் மேக்கப்புகளின்றி ஆடைக்கு ஏற்ற சாதாரண மேக்அப்பையே அப்ளை செய்துள்ளார். முகத்தில் லிப்ஸ்டிக்கை மட்டும் ஹைலைட் செய்திருப்பது ஒட்டுமொத்த மேக் அப்பிற்கும் கூடுதல் அழகைத் தருகிறது. ஆடைக்கு ஏற்ற தங்க நிற வளையல், வெள்ளை கற்கள் பதித்த காதணிகள் என கச்சிதமாக தேர்வு செய்துள்ளார். 
View this post on Instagram
 

Happy birthday Mumma, I love you


A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) on


இந்த புகைப்படத்தை ஷேர் செய்வதற்கு முன்னரே காலை எட்டு மணிக்கே இங்கிலிஷ் விங்கிஷ் படத்தின் தோற்றத்தில் உள்ள புகைப்படத்தை ஷேர் செய்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் மம்மா.. ஐ லவ் யூ என குறிப்பிட்டுள்ளார். அதற்கு பிரபலங்கள் பிரியங்கா சோப்ரா, ரேகா கபூர், மனிஷ் மல்ஹோத்ரா என பலரும் லைக்ஸ் மட்டுமல்லாது கமெண்டுகளும் அளித்துள்ளனர்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...