நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். நடிகையான இவர் 2018-ஆம் ஆண்டு இஷான் கட்டார் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இந்த படம் ‘கைராத்’ என்ற மராத்தி படத்தின் ரீமேக் ஆகும். அதன்பிறகு கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் குன் ஜான் சக்சேனா: தி கார்கிள் கேர்ள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தாதக் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான உடனேயே, ஜான்வி கபூர் இந்தி திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உருவெடுத்தார்.
கொரோனா லாக்டவுனால் படப்பிடிப்புகள் இல்லாமல் இருந்ததால் கடந்த சில மாதங்களாக பழைய புகைப்படங்களை எல்லாம் தேடிக் கண்டுபிடித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வந்தார் ஜான்வி. இதனால் இன்ஸ்டாகிராமில் அவருக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 23 வயதான நடிகை ஜான்வி, ஒவ்வொரு விழாவிற்கும் அணியும் உடைகள் குறித்து பரவலாக பேசப்படும். இந்த நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஜான்வி ஒரு அட்டகாசமாக வெளிர் பச்சை நிறத்தை உடை அணிந்திருந்தார். தற்போது ஜான்வியின் ஸ்ட்ராப்லெஸ் டிராப் உடை குறித்து தான் பேசப்படுகிறது. ஏனெனில் அந்த உடையின் விலை சுமார் ரூ.2.74 லட்சம் என தகவல் வெளியாகியுள்ளது.
வைர மோதிரங்களுடன் அவர் அணிந்திருந்த ஹாட் உடை தோற்றத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் காட்சியளிக்கிறார். இந்த புகைப்படங்களை ஜான்வி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்த நிலையில், வாணி கபூர் உள்ளிட்ட சுமார் 1.4 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் அவரது புகைப்படத்திற்கு லைக் போட்டுள்ளனர். புகைப்படங்களை ஷேர் செய்த 48 நிமிடங்களுக்கும் வைரலாகியுள்ளது.
மேலும் ரசிகர்கள் கமெண்ட் செக்சனில் ஹார்ட் எமோஜிகளை பறக்கவிட்ட வண்ணம் உள்ளனர். ஜான்வி அணிந்திருக்கும் உடையை நீங்களும் வாங்க விரும்பினால் 3, 800 டாலர்கள் ஆகும், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,74,889 லட்சம் ஆகும். இந்த உடையின் விலை குறித்த புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏராளமானோர் அப்படி என்ன இந்த உடையில் உள்ளது என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
ஜான்வி தற்போது குட்லக் ஜெர்ரி படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கிறது. நடிகர் ராஜ்குமார் ராவுடன் சேர்ந்து நடித்த ரூஹி அஃப்சானா படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார் ஜான்வி. நகைச்சுவை-திகில் படமான ரூஹி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக படம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Sivaranjani E
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.